Header Ads

தோப்பூரில் முஸ்லிம் - தமிழ் கைகலப்பு, 2 பேர் கைது, 6 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் உப்பூரல் பகுதியில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தில் இருவர் இன்று காலை (17) பொலிஸாரினால் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.

அப்துல் மஜீது (வயது 63) கோணேஸ்வரன் கணேஸ் (வயது 22) ஆகியோரே கைது இந்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கிடையில், நேற்றுக் காலை 10 மணியளவில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

காணியை உரிமை கொண்டாடுவதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கைகலப்பாக மாறியுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த அறுவரில் நால்வர் சேருநுவர வைத்தியசாலையிலும் இருவர் மூதூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில், தோப்பூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீது நஜிமுதீன் (வயது 57), நஜிமுதீன் இர்சாத் (வயது 20), நூறு முஹம்மது குபைபுல்லாஹ் (வயது 45), ஏ.எம்.சிராஜிதீன் (வயது 58) , உப்பூரல் பகுதியைச் சேர்ந்த நாகராசா (வயது 40) மற்றும் ந.சிவசோதி (வயது 45) ஆகியோருமே காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் கூறியுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

3 comments:

  1. Tamil.area.vil.ulla.kanikalai.vettru.enththukku.vikkira.tamilanukku.ennum.prachchanai.varum.amparai.mavattaththai.poruththa.mattil.periyaneelavai.pandiruppu.kalmunai.addapallam.veeramunai.akiya.kiramankal.vettru.enaththukku.vittru.erukkirarkal.tamularkal.unmaiyana.tamilan.karaitivu.tamilan.avarkal.uru.thundu.nilam.kuda.vettru. enaththukku.vitkavillai

    ReplyDelete
  2. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேசத்தில் யுத்தகாலங்களிற்கு முன்னர் முஸ்லீம்கள் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்தனர்.
    யுத்த காலத்தில் முஸ்லிம்கள் தோப்பூர் நகர் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தனர். இக்காலப்பகுதியில் தமிழ் சகோதரர்களினால் இக்காணிகள் பாவிக்கப்பட்டது தவறில்லை.
    தற்போது சமாதான சூழலில் தமது பெற்றோர்கள்,மூதாதையரின் தமக்கு சொந்தமானது காணிகளை மீளப்பெற முயற்சிக்கும் போதே இந்த பிரச்சினை இடம் பெற்றுள்ளது.
    4 முஸ்லீம்களுக்கு 20 இற்கும் அதிகமான தமிழ் சகோதரர்கள் கற்களினால் தலை உடையும் அளவிற்கு தாக்கியதும், கூரிய ஆயுதங்களினால் தாக்கி இரத்தங்களை ஓடச்செய்தமை ஆரோக்கியமற்றதாகும்

    ReplyDelete
  3. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேசத்தில் யுத்தகாலங்களிற்கு முன்னர் முஸ்லீம்கள் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்தனர்.
    யுத்த காலத்தில் முஸ்லிம்கள் தோப்பூர் நகர் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தனர். இக்காலப்பகுதியில் தமிழ் சகோதரர்களினால் இக்காணிகள் பாவிக்கப்பட்டது தவறில்லை.
    தற்போது சமாதான சூழலில் தமது பெற்றோர்கள்,மூதாதையரின் தமக்கு சொந்தமானது காணிகளை மீளப்பெற முயற்சிக்கும் போதே இந்த பிரச்சினை இடம் பெற்றுள்ளது.
    4 முஸ்லீம்களுக்கு 20 இற்கும் அதிகமான தமிழ் சகோதரர்கள் கற்களினால் தலை உடையும் அளவிற்கு தாக்கியதும், கூரிய ஆயுதங்களினால் தாக்கி இரத்தங்களை ஓடச்செய்தமை ஆரோக்கியமற்றதாகும்

    ReplyDelete

Powered by Blogger.