Header Ads



இந்திய இராணுவம் அக்கிரமம் - கஷ்மீர் கொந்தளிக்கிறது, 1800 பேர் காயம்

ஜம்மு - காஷ்மீர் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 37 ஆக அதிகரித்துள்ளது; மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுவதால், ஆறாவது நாளாக, ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.ஜம்மு -- காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீ பர்ஹான் வானி, 22, கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து, மாநிலத்தின் பல பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, ராணுவம் களமிறக்கப்பட்டது. 

போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து, இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் ஸ்ரீநகர் உட்பட பல பகுதிகள் போர்க்களமாக காட்சி அளிக்கின்றன. வன்முறையாளர்களை, ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி வருகின்றனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில், பாம்போர், குப்வாரா, அனந்த்நாக் உட்பட பல்வேறு பகுதிகளில், தொடர்ந்து 

ஆறாவது நாளாக நேற்றும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இதனால், இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

No comments

Powered by Blogger.