Header Ads



டுபாய்க்கு எடுத்துச்செல்ல முற்பட்ட, 16 கோடி ரூபா பிடிபட்டது

சட்டவிரோதமாக துபாய் நோக்கி எடுத்துச் செல்ல முற்பட்டதாக கூறப்படும் 16 கோடி ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களுடன் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இன்று -19- அதிகாலை 03.25 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இவர்கள் கைதாகியுள்ளனர். 

கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR 69 என்ற விமானத்தில் செல்ல முற்பட்ட வேளை, பெண் ஒருவரின் பயணப் பையில் இருந்து குறித்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவற்றில் யூரோ, அமெரிக்க டொலர், குவைத் டினார், சவுதி அரேபிய ரியால், ஓமான் ரியால் போன்ற வௌிநாட்டு நாணயங்கள் இருந்ததாகவும் இவற்றின் பெறுமதி 166 மில்லியன் ரூபா எனவும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, துபாய் செல்லவிருந்த அப் பெண் கைதுசெய்யப்பட்டார். 

மேலும் அவருடன் வந்ததாக கூறப்படும் மற்றுமொரு பெண்ணும், ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சுங்க பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க  குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.