Header Ads



துருக்கியில் 15000 கல்வித்துறை ஊழியர்கள் பணி நீக்கம்

துருக்கியில் கடந்த வெள்ளியன்று தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து நடைபெறும் நடவடிக்கைகள் கல்வித்துறை வட்டாரத்தையும் எட்டியுள்ளன.

துருக்கியின் உயர் கல்வி வாரியம், தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட டீன்களை பதவி விலக உத்தரவிட்டதாக அரசு செய்தி முகமை அனாடொலு தெரிவித்துள்ளது.

ஆயிரத்திற்கும் மேலான சிப்பாய்கள், போலிஸார் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர் அல்லது பணியிடை நீக்கம் அல்லது பணியிலிருந்து தூக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க மதகுரு ஃபெத்துலா க்வுலனின் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 24 தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் உரிமங்களை துருக்கியின் ஒளிபரப்பு ஆணையம் ரத்து செய்துள்ளது.
இந்த ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு, மதகுரு ஃபெத்துலா க்வுலனின் இயக்கத்தின் மீது அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

BBC

No comments

Powered by Blogger.