Header Ads



ஐக்கிய அரபு இராச்சியத்தில், 100 இலங்கையர்கள் நிர்க்கதி

இலங்கையர் உட்பட சுமார் 100 தொழிலாளர்கள், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதியானநிலைக்கு உள்ளாகியிருப்பதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இந்திய தொழிலாளர்களும் இதில் அடங்குகின்றனர்.

தமது தொழில் வீசா முடிவடைந்த நிலையிலேயே இவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியிருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவர்கள் அனைவரும் இந்திய அரசாங்கத்திடம் நிதியுதவியை கோரியுள்ளனர்.தமது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துக்கொள்ள உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிதிவசதியோ அல்லது ஆவணங்களோ இன்று தாம் நாட்டுக்கு திரும்பிச்செல்ல முடியாதுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தொழிலாளர்களில் பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தானியர்களும் உள்ளடங்குகின்றனர்.

தமக்கு தொழில் தருநரால் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சம்பளம் தரப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.