July 31, 2016

தலித்கள் தங்களை தாங்களே, பாதுகாத்துகொள்ள துப்பாக்கிகள் தேவை


இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், முன்பு தீண்டத்தகாதவர்களாக அறியப்பட்ட தாழ்த்தப்பட்ட இனமான தலித் சமூகத்தை சேர்ந்த சுமார் 25,000 பேர் தங்கள் சமூகத்தினர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

மூன்று வாரங்களுக்குமுன், தோலை உரிப்பதற்காக இறந்த மாட்டை எடுத்து சென்றதற்காக நான்கு இளைஞர்கள் பொது வெளியில் ஆடைகள் களையப்பட்டு தாக்கப்பட்டனர்.

இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துதல் மற்றும் சாக்கடைகளை கைகளால் சுத்தப்படுத்துவது போன்ற பாரம்பரிய வேலைகளை இனி செய்யப்போவதில்லை என பேரணியில் கலந்து கொண்டவர்கள் உறுதி மொழி எடுத்துள்ளனர்.

இந்த பேரணியை ஒருங்கிணைத்த இளம் ஆர்வலர் ஜிக்நேஷ் மேவனி கூடியிருந்தவர்களிடம், தலித்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள துப்பாக்கிகள் தேவை என்றார்.

வெறுப்புணர்வை நிராகரித்து, நல்ல இதயத்தை தரவிறக்கம் செய்யவும் - போப் பிரான்சிஸ்


போலந்து பயணத்தின் கடைசி நாளில், மக்களுக்கு இடையிலான வெறுப்புணர்வை நிராகரிக்க வேண்டும் என்று கத்தோலிக்க இளைஞர்களை போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

உலக நாடுகளிலிருந்து வந்திருந்த இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களிடம் உரையாற்றிபோது, எல்லைகளை தடைகளாக பயன்படுத்த மறுக்கும் புதிய மனித குலமாக உருவாக திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.

இன்றைய தொழில்நுட்ப மொழியை பயன்படுத்திய போப் பிரான்சிஸ், நல்லதொரு இதயத்தை தரவிறக்கம் செய்யவும், உடனடி நுகர்வுக்கு பதிலாக உலகை மாற்ற முயலவும் ஊக்கமூட்டினார்.

நல்லதொரு இதயத்தை தரவிறக்கம் செய்யவும், உடனடி நுகர்வுக்கு பதிலாக 
கராகோவின் புறவெளியில் திறந்தவெளியில் நடைபெற்ற திருப்பலியின்போது, புனித பயணிகள் கொடிகளை அசைத்து கொண்டும், இசைக்கு ஏற்ப அசைந்தாடியும், தங்களை தாங்களே புகைப்படங்கள் எடுத்தும் 

போலந்தில் மேற்கொண்ட இப்பயணத்தின்போது அஸ்விட்ச் சித்திரவதை முகாமை திருத்தந்தை சந்தித்தார். இந்த திருப்பலியானது, போப் பிரான்சிஸ் கிழக்கு ஐரோப்பாவிற்கு முதல்முறை வந்துள்ள பயணத்தின் ஐந்து நாட்கள் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

அமெரிக்கா பயன்படுத்திய விமானத்தளத்தை, மீளக்கைப்பற்றியது துருக்கி


-Mohamed Jawzan-

துருக்கி அமெரிக்கா பயன்படுத்தி வந்த விமானபடை தளத்தை தனது கட்டுப்பாடில் கொண்டு வந்துள்ளது..

துருக்கி மீதான இராணுவ சதி புரட்சியின் எதிரொலியாக  துருக்கி விமான நிலையத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருவதை துருக்கி மக்கள் கடுமையாக எதிர்த்ததை அடுத்து இவ் விமான நிலையத்தை துருக்கி அதிபர் எர்டோகனின் உத்தரவின் கீழ் துருக்கி விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.. 

மற்றும்  இந்த விமான படை தளத்தின் அதிகாரி ஜெனரல் பெகிர் எர்கன் துருக்கி மீதான இராணுவ சதி புரட்சியில் அமெரிக்காவுடன் சேர்ந்து துருக்கி மக்களின் ஜனநாயக ஆட்சிக்கெதிராக இராணுவ  கூட்டு சதி குற்றத்தில் சம்பந்தப்பட்டார் என்று துருக்கிய அதிகாரிகளால்  கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட நிலையில் எழுந்த துருக்கி  மக்களின் கடும்  எதிர்ப்பை அடுத்து இந்த விமான நிலையத்தை துருக்கி அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது ..

மேலும்  அமெரிக்கா பயன்படுத்தி வந்த  இந்த விமான நிலைம் அணுவாயுதங்களை கொண்டதும் சிறியா மற்றும் ஈராக்கில் நிலை கொண்டு இருக்கும் ஜ எஸ் ஜ எஸ் படைகள் மீது தாக்குதல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வந்த மிகவும் முக்கியமான விமான தளமாகும் ..

விமான நிலையத்தை துருக்கி அரசு கைப்பற்றியதை போனிலும் தொலைக்காட்சியிலும் மக்களுக்கு  அறிவித்ததை தொடர்ந்து  அமெரிக்க விமானபடை அதிகாரிகள் தங்கி இருக்கும் நகரை முற்றுகையிட்ட துருக்கி மக்கள் அங்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாக கோஷமிட்டவாறு உள் நுழைய முற்பட்டபோது அவர்களை துருக்கி பொலிஸார் சில தூர இடைவெளிக்கு தடுத்து நிறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிட்ட தக்கது

"மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு, கால்களில் கொப்புளங்கள் வரும்வரை வீதிவலம் வருவதல்ல"

மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவான மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு கால்களில் கொப்புளங்கள் வரும் வரை வீதிவலம் வருவதன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள்

இன்று முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நாடெங்கிலும் 3100 கி.மீ பிரதேச வீதிகளை புனர்நிர்மாணம் செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சித்திட்டம் இன்று பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரபுர கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் சரிசமமான அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுத்து நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைத்திட்டங்களை தமது ஆட்சிக் காலப்பகுதியில் நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்டார்.

ஜேர்மனி உட்பட உலகின் மிகவும் முன்னேற்றமடைந்த எல்லா நாடுகளிலும் பிரதான எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்திருப்பதன் மூலமே அவர்களது நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளார்கள் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,

அதிகாரத்திற்காக மோகம் கொள்ளும் அரசியல் கலாசாரத்திற்கு முடிவுகட்டி நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எல்லா அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும் என்றும் குறிப்பிட்டார்.

ஊழல் நிறைந்த ஆட்சியை தோற்கடித்து ஒரு தூய்மையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இந்நாட்டு மக்கள் உதவுவர் என தமக்கிருந்த நம்பிக்கையின் பேரிலேயே தாம் கடந்த ஆட்சியிலிருந்து விலகி அச்சமின்றி ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுத்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி,

நாட்டுக்குத் தேவையான புதிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அந்த மக்களின் ஆசீர்வாதம் தமக்கு என்றும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்த்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் 170 கி.மீ பிரதேச வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதுடன், இதற்காக ரூ 3890 மில்லியன் செலவிடப்படப்படவுள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்களான சிட்னி ஜயரத்ன, நாலக கொலொன்னே ஆகியோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்..

நான் எப்போதும் இனவாத, செயற்பாடுகளில் ஈடுபட்டதில்லை - மஹிந்த


தான் எப்போதும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் நடப்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதே தனது நோக்கம் என அவர் கூறியுள்ளார். 

கெகிராவ பகுதி விஹாரையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே, மஹிந்த ராஜபக்ஷ, மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

ஜனாதிபதியும், பிரதமரும், நானும் நல்ல பௌத்தர்கள்

உத்தேச புதிய அரசியல் சாசனம் சிங்கள இனத்தையோ அல்லது பௌத்த மதத்தையோ மலினப்படுத்தாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட உள்ள அரசியல் சாசனம் சிங்கள இனத்தையோ அல்லது பௌத்த மதத்தையோ பலவீனப்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகள் நாட்டில் யுத்தம் இடம்பெற்றுள்ள நிலையில் நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அரசாங்கம் அரசியல் சாசன மாற்றம் செய்வதாக சில ஊடகங்கள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும், அவைத் தலைவராகிய தாமும் நல்ல பௌத்தர்கள் என அவர் தெரிவித்துள்ளார். எனவே தாங்கள் மதத்திற்கோ கலாச்சாரத்திற்கோ குந்தகம் ஏற்பட செயற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களுக்கு, பூஜித விடுக்கும் வேண்டுகோள்

சகலவிதமான போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் விநியோகிப்போர் தொடர்பான தகவல்களை உடனடியாக பொலிஸாருக்கு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்பொருட்டு, 071 85 92 020 / 071 85 92 022 ஆகிய தனது தனிப்பட்ட கையடக்தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கியுள்ளார்.  

முஸ்லிம்கள் பிச்சைப் பாத்திரம் ஏந்தவேண்டிய, துர்ப்பாக்கியம் ஏற்படுமென எச்சரிக்கிறேன் - சேகு இஸ்ஸதீன்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

வடக்கு- கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழருக்கு சமஷ்டித் தீர்வு வழங்கப்படுமானால் அப்பகுதி முஸ்லிம்கள் தமது சொந்த வீட்டில் அகதிகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முன்னாள் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

வடக்கு- கிழக்கு தமிழர்கள் போன்று முஸ்லிம்களும் தம்மை ஒரு தேசியமாக பிரகடனம் செய்யாதவரை தமிழ் சமூகத்திற்கு சமாந்தரமான தீர்வை அடைந்து கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

அறிஞர் சித்திலெப்பை ஆய்வமயத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.

ஆய்வமையத்தின் தலைவர் சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லீம் தேசியம், சுய நிர்ணயம், வடக்கு- கிழக்கு இணைப்பு, தென்கிழக்கு அலகு, இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் பகிபாகம் போன்ற அம்சங்களை விளக்கி சேகு இஸ்ஸதீன் ஆற்றிய நீண்ட உரையில் மேலும் கூறியதாவது; 

"அரசியல் யாப்பு மாற்றம் என்பது தமிழருக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் முஸ்லீம் சமூகத்தின் பகிபாகம் கேள்விக்குறியாகவே உள்ளது.

வடக்கு மாகாண சபை, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன தமிழருக்கு எவ்வாறான தீர்வு தரப்பட வேண்டும் என தெட்டத்தெளிவாக சொல்லி விட்டன. முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்மொழிந்துள்ள தீர்வுத் திட்ட வரைவு தமிழருக்கான தீர்வுகளை உறுதியாக பறைசாற்றியுள்ளது. அவர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் செயற்படுகின்றனர். வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதில் தமிழ் பேசும் இனக்குழுமம் என்று முஸ்லிம்கள் கணிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் எந்தவொரு முஸ்லீம் கட்சியும் இதுவரை முஸ்லிம்களுக்கான தீர்வு இவ்வாறுதான் அமைய வேண்டும் என்று கோரி ஒரு காகிதத் துண்டையேனும் எங்கும் சமர்ப்பிக்கவில்லை. தமிழ் சமூகத்தின் சுய நிர்ணயத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அதன் தலைமைகள் மிகவும் விடாப்பிடியுடன் நின்று உத்வேகத்துடன் காய்களை நகர்த்தி வருகின்றன. ஆனால் முஸ்லீம் தலைமைகள் என்று சொல்வோர் இன்னும் ஒரு துரும்பைக் கூட நகர்த்தவில்லை.

தமது சுயநிர்ணயத்திற்காக தமிழர்கள் முழுமூச்சாக நிற்கிறார்கள். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழசுக் கட்சி மாநாட்டிலேயே அவர்கள் தமது தேசியத்தை பிரகடனம் செய்து விட்டார்கள். தேசியம் என்பதற்குப் பின்னால் தேசம் இருக்கிறது. சர்வதேச சட்டங்கள் கூட அதனை அங்கீகரித்துள்ளது. கட்சியின் பெயரிலேயே தமிழ் அரசு என்று பறைசாற்றி விட்டார்கள். அனைத்து தமிழ் கட்சிகளும் தமது கட்சியின் பெயரில் தமிழீழம் என்று சூடிக் கொண்டிருக்கின்றன.

நமது சகோதர சமூகம் ஒன்று இவ்வளவு செய்தும் கூட முஸ்லிம்கள் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றோம். நாம் பேசுவதற்க்கே தயார் இல்லை என்கின்றபோது எவ்வாறு போராட்டத்தில் குதிக்கப் போகின்றோம். முஸ்லிம்கள் முதலில் தாமும் ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் தேசியத்தையும் சுய நிர்ணயத்தையும் வலியுறுத்த வேண்டும். விக்கினேஸ்வரன் சொல்வது போன்று நாம் ஒரு இனக்குழுமம் இல்லை. நாம் தமிழருக்கு நிகரான ஒரு தேசிய இனம். எமக்கும் சமத்துவமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் நாம் உரத்துச் சொல்ல வேண்டும்.

வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு உடுத்த உடையுடன் புலிகளினால் துரத்தியடிக்கப்பட்ட 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அன்றே முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை நிரூபித்து விட்டார்கள். கிழக்கில் முஸ்லிம்களை கடத்திக் கொலை செய்தார்கள். பள்ளிவாசல்களுக்குள் புகுந்து சுட்டுக் கொன்று குவித்தார்கள். கிழக்கில் சுமார் 1500 முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக் குழுக்களினால் கொலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 60 ஆயிரம் முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

அன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஆயுத குழுவினரால் முஸ்லிம்கள் நசுக்கி அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர். வடக்கு- கிழக்கு மீண்டும் இணைக்கப்பட்டு அவர்களுக்கு சமஷ்டி கொடுக்கப்பட்டால் முஸ்லிம்கள் தமது சொந்த வீடுகளில் அகதிகளாக்கப்பட்டு, அவர்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும் என எச்சரிக்கின்றேன்.         

ஜே.ஆர்.ஜெயவர்த்தன்வின் ஆட்சிக்கு காலத்தில் தமிழருக்கு தீர்வு வழங்கும் பொருட்டு மாகாண மட்டத்தில் அதிகார பகிர்வை வழங்குவதற்காக வடக்கு- கிழக்கு இணைக்கப்படுகின்ற சூழல் ஏற்பட்டபோது கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசங்களையும் வடக்கிலுள்ள முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசங்களையும் ஒன்றிணைத்து நிலத்தொடர்பற்ற ஆட்சி அதிகாரம் கொண்ட தென்கிழக்கு அலகுக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஊடாக முன்வைத்திருந்தோம்.

அன்று வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போட்டியிட்டது. நீங்கள் அத்தேர்தலில் போட்டியிட்டிருக்கா விட்டால் தாற்காலிகமாகக் கூட வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டிருக்க மாட்டாது என அண்மையில் என்னை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் சொன்னார். முஸ்லிம்கள் தமிழரின் அபிலாஷைகளுக்கு குறுக்கே ஒருபோதும் நின்றதில்லை. ஆனால் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான இனமாக அங்கீகரித்து தமக்கு கிடைக்கின்ற சமத்துவமான தீர்வை முஸ்லிம்களும் பெறுவதற்கு தமிழர் தரப்பு இன்னும் இணங்கி வருவதாக தெரியவில்லை. ஆகையினால் முதலில் நாம் முஸ்லீம் தேசியத்தை முன்னிறுத்த புறப்பட வேண்டும். முஸ்லீம் சுயநிர்ணயத்திற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தயாராக வேண்டும்" என்றார்.

அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் காத்தான்குடியை சேர்ந்த டொக்டர்  அமீர் அலியும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன் கேள்வி பதில்களும் இடம்பெற்றன.

நிந்தவூரில் மட்டும் ஏன், கோழியிறைச்சி அதிக விலையில் விற்கப்படுகிறது..?

கிழக்கிலங்கையின் கரையோரப்பிரதேசத்தின் சகல ஊர்களிலும் பார்க்க நிந்தவூர் பிரதேசத்தில்  கோழியிறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுவதாக  பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.ஒரு கிலோ கோழியிறைச்சி  ரூபா 650/-  இற்கு உள்ளூரில் விற்கப்படுவதாக  நுகர்வோர் பிரஸ்தாபிக்கின்றனர்.

அரசு கட்டுப்பாட்டு விலையினுள் விற்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளவற்றினுள் கோழியிறைச்சியும்  அடங்குகின்றது  இருந்த போதிலும் இப்பிரதேசத்தில் இந்த  விதி பின்பற்றப்படாமலேயே இருக்கின்றது. இதுவரை விலைக்கட்டுப்பாட்டு  அதிகாரிகளோ  நுகர்வோர் அதிகார சபையோ இதுவிடையமாக எதுவித நடவடிக்கையும்  எடுத்ததாக தெரியவில்லை.

பிரதேச சபையினால் கேள்வி மனு கோரப்பட்டு ஏலத்தில் குத்தகைக்கு விடப்பட்ட சில கோழிக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.அது பற்றி குத்தைக்கு பெற்றுக்கொண்டவரிடம்  வினவியபோது மிக அதிக குத்தகைக்கே கோழியிறைச்சிக் கடைகள்  வழங்கப்பட்டன,அவற்றினை  நடாத்துவது நஷ்டத்தினை  ஏற்படுத்துவதனால் கடைகள் மூடப்பட்டுள்ளன என கூறுகின்றார்.

எது எப்படி இருந்திற்ற போதிலும் அயலூர்களிலுள்ள  மக்கள் அனுபவிப்பது போன்ற விலைவாசியினை  ஏன்  நாங்கள் அனுபவிக்கக்கூடாது?இரண்டு மூன்று கிலோமீட்டர்களினுள் எப்படி இந்த விளைவித்தியாசம் ? என பொதுமக்கள்  அங்கலாய்ப்பதுடன் மட்டுமன்றி  இது சம்மந்தமாக பிரதேச ,பிராந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கும் பண்பு, தமிழ் அரசியல்வாதிகளிடம் குடிகொண்டிருக்கிறது - அப்துல் மஜீத்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை கரையோர மாவட்டத்தை எதிர்க்கின்ற கோடீஸ்வரன் போன்றோர் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் வரை வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் 'முஸ்லிம்கள் கோரி நிற்கின்ற கரையோர மாவட்டத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அம்மாவட்டத்தை தென்கிழக்கு அதிகார அலகாக உள்ளடக்கப்படுவதை நாம் வன்மையாக எதிர்ப்போம். இதற்கு ஆதரவாக செயற்படும் எமது எந்த அரசாயல்வாதிகளானாலும், புத்திஜீவிகளானாலும் அவர்களை நாம் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் பார்ப்போம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்' என்று சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

கரையோர மாவட்ட கோரிக்கையானது இன்று நேற்று முன்வைக்கப்பட்டு வரும் ஒரு கோரிக்கையல்ல. 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசு இலங்கையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கென அமைக்கப்ட்ட மொறகொட ஆணைக்குழுவின் விதைப்புரையே கல்முனை கரையோர மாவட்டமாகும். அரசியலில் குழந்தைகளாக இருப்பவர்களுக்கு இந்நீண்ட வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாதென்று கூறி தீர்வு கோருகின்ற தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் சிங்கள நிர்வாக மொழி நிர்வாகத்தின் கீழ் சேர்ந்திருக்க விரும்புவது ஆச்சர்யத்தை தருகின்றது. வவுனியாவில் சிங்கள அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டபோது அயற்கெதிராக குரல் கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிங்கள இனத்தவர் அரசாங்க அதிபராக வருவதை ஆதரிப்பதும் பெரும் பகைப்புலனாகும்.

1958ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற இலஙகை தமிழரசு கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மட்டக்களப்பிற்கு தெற்கே முஸ்லிம் மக்களுக்கு சுயாட்சி பிரதேசமொன்று உருவாக்கப்படுதல் வேண்டும் என்ற தீர்மானமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தை மைய்யப்படுத்தியே தென்கிழக்கு அதிகார அலகு எனும் கோரிக்கையை அஷ்ரப் முன்வைத்தார். இதனை விளங்கிக்கொள்ள மறுக்கும் கோடீஸ்வரன் இதற்கெதிராக தமிழ் மக்களை ஒன்று திரட்டி போராடப்போவதாக அறிவித்துள்ளார்.

தந்தை செல்வாவின் அரசியற் கோட்பாட்டை இன்று ஒரு சிலர் மாத்திரமே முன்னெடுத்து வருகின்றனர். சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராசா, சமந்திரன் போன்றோர் தமிழ்- முஸ்லிம் நல்லுறவை கட்டியெழுப்ப வேண்டும்- அதிகாரப்பகிர்வில் நீதி, நியாயம், சமத்துவம் பேணப்ட வேண்டுமென்ற நல்லெண்ணத்தைக்காட்டி வருகின்றனர்.

அதன் வெளிப்பாடாகவே இணைந்த வட-கிழக்கு சுயாட்சியில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்குவோம் என்று சம்பந்தன் ஐயா அறிவித்துள்ளார். அவரது நல்லெண்ணத்தை வரவேற்கும் அதே நேரம் நீடித்த சமாதான சகவாழ்வுக்கு முதலமைச்சர் பதவி தீர்வாகாது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

வடக்கும், கிழக்கும் மீண்டும் இணைக்கப்பட்டு அங்கு சுயாட்சி முறையிலான சமஷ்டிக் கட்டமைப்பை கொண்டு வரவேண்டுமென்ற கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்து வருகின்றது. இக்கோரிக்கையானது கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலத்தை உடைத்தெறிந்து அரசியல் அநாதையாக்கும் விதமாக அமைந்து விடும். 

அம்பாறை மாவட்ட தமிழர்கள் அனுபவத்து வரும் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், பாரபட்சங்கள், அநீதிகள், துன்ப துயரங்கள், வேதனைகள், இழப்புக்கள் எண்ணிலடங்காதவை என்று கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவற்றை கட்டவிழத்து விட்டவர்கள் சிங்களவர்களா முஸ்லிம்களா என்பதை குறித்துக்காட்ட அவர் முன்வரவில்லை. இங்குள்ள முஸ்லிம் மக்களை மிக மோசமாக சித்தரித்துக்ககாட்டுகின்ற பண்பு அம்பாறை மாவட்டத்தில் அநேக தமிழ் அரசியல்வாதிகளிடம் மிகவும் குடிகொண்டிருக்கின்றது. இவர்கள் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் போன்று சித்தரித்துக்ககாட்ட முற்பட்டு நிற்கின்றனர். முஸ்லிம்கள், தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடியதாகவோ ஒடுக்கியதாகவோ எவரும் கூற முடியாது.

ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்கள் ஆட்சி புரிந்த காலங்களில் வட-கிழக்கு முஸ்லிம்கள் அனுபவித்த அடக்குமுறுகள், ஒடுக்குமுறைகள் , பாரபட்சங்கள், அநீதிகள், துன்ப துயரங்கள், வேதனைகள், இழப்புக்கள் எண்ணிலடங்காதவை என்பதனை மறைத்து பேசுவது ஏன் என்று கேட்க விரும்புகிறேன்.

இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இருந்தவன் நான். 72 உறுப்பினர்களில் 17 பேர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அங்கத்துவம் பெற்றிருந்தனர். கிழக்கில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்கள் வடக்கு- கிழக்கு இணைப்பு காரணமாக17 வீதமாக குறைக்கப்பட்டனர். இத்தகைய அநீதி கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு மீண்டுமொரு முறை ஏற்பட்டு விடக்கூடாது.  

வடக்கில் மாவை சேனாதிராசாவும், சுமந்திரனும் தமிழ்-முஸ்லிம் ஐக்கியம், புரிந்துணர்வு, சமத்துவம் பற்றி பேசுவது போல் கிழக்கிலுள்ள தமிழர் அரசியல்வாதிகள் நடந்துகொள்ள மறுப்பது ஏன்? கோடீஸ்வரனை போன்ற பிரதிநிதிகள் தமிழ் சமூகத்தில் இருக்கும் காலம் வரைக்கும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியப்படாது" என்று மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களை மிகச் சரியாக, புரிந்துகொண்டவர்கள் இந்துக்களா..?

(சவூதி அரேபியாவில் வேலைபார்க்கும், Ajmal Ily என்ற தமிழ்நாட்டைச் சேர்ந் சகோதரரினால் இது எழுதப்பட்டது)

இஸ்லாமியர்களை மிக சரியாக புரிந்து கொண்டவர்கள் இந்துக்களே!

கறி சாப்பிடுங்க! பாய் கடையில் தான் வாங்கினோம்.

முஸ்லீம் புள்ளைக வருது வழிவிட்டு நில்லுங்க என இடம் கொடுக்கும் இளைஞர்கள்.

தீபாவளி படையல்கள் சாமி கும்பிடுவதற்கு முன்னே தந்து நட்பு பாராட்டும் சமூகம்.

நோன்புக்கு நாங்க எதாவது செஞ்சு தரலாமா? என கேட்கும் அக்கம் பக்கம்.

பிள்ளைக்கு முடில கொஞ்சம் ஓதிப்பாருங்க என பள்ளியில் நிற்கும் சகோதரத்துவம்.

பாங்கு சொல்லியும் தொழுக போகம நிக்கிர கிளம்புடா என அதட்டும் ரூம்மெட்.

பார்க்காம இருந்திருப்பான்; அத தவிர வேறு எந்த காரணமும் இருக்காது கல்யாணத்துக்கு கூப்பிடாம இருக்கிறதுக்கு. பிரியாணி சாப்பிட கிளம்பு ! என புரிந்துகொள்ளும் தொப்புள் உறவு.

நிச்சயமா! ஏமாத்த மாட்டாங்க.அவங்க அல்லாஹ்வ வணங்குறவங்க என நம்பிக்கை பாராட்டும் சமூகம்.

ஒரு முஸ்லீம அடிக்கிரத வேடிக்கை பார்க்க முடியாது என கிளம்பும் உறவுமுறை தேடும் சொந்தம்.

இன்னும் சொல்லிட்டே போகலாம்...

இஸ்லாத்தோடு தீவிரவாதத்தை தொடர்புபடுத்திய ஊடகவியலாளர் - வாயை அடக்கிய எர்துகான் (வீடியோ)


இஸ்லாத்தோடு தீவிரவாதத்தை தொடர்ப்பு படுத்திய ஜெர்மன் செய்தியாளரை வாயடைக்க வைக்க வைத்த துருக்கி அதிபர்

அண்மையில் துருக்கி அதிபரை பேட்டி கண்ட ஜெர்மன் செய்தியாளர் ஒருவர் 
இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன என்று வினவினார் 

அதர்கு பதில் அழித்த துருக்கி அதிபர் நிருபரை கடுமையாக வார்த்தைகளில் கண்டித்தேதோடு நில்லாமல்

இஸ்லாம் அன்பின் மார்க்கம் என்றும் தீவிர வாதத்தை வேரறுக்கும் மார்க்கம் என்றும் மேற்கு உலகம் தான் தீவிர வாதத்தை உரம் போட்டு வளர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டினார் 

அது தொடர்ப்பான காட்சியை தான் நீங்கள் பார்கின்றீர்கள்

https://www.youtube.com/watch?v=J99wBrRx03E

மஹிந்தவின் பாத யாத்திரைக்கு, விசித்திரமான வரவேற்பு

கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ள, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரையை புதுமையான முறையில் வரவேற்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 

அப்பாதயாத்திரை, நாளை திங்கட்கிழமை கொழும்பை வந்தடையும். இந்நிலையில், களனி பகுதியில் புல் கட்டுகள் தொங்கவிடப்பட்டு, அதற்கு அருகில், பாதாயத்திரையை களனி மக்களாகிய நாங்கள் வரவேற்கின்றோம் என்று எழுதப்பட்டுள்ள பாதைதைகளும் வைக்கப்பட்டுள்ளன. 

மாதமொன்றுக்கு ஒருகோடி, ரூபா இலஞ்சம் - அடியோடு மறுத்தார் கபீர்


அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ஒரு கோடி ரூபா லஞ்சம் வழங்க வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிக்கு அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சர் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி என்பதுடன், தேசிய அரசாங்கம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இருவரில் ஒருவராவார். அத்துடன் பசுமைக் கட்சியொன்றின் பொதுச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கின்றார்.

குறித்த அமைச்சருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் ஒருவர், தனது வர்த்தகம் தொடர்பான சில வேளைகளை நிறைவேற்றித் தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் அமைச்சர் அவற்றை நிறைவேற்றிக் கொடுக்காத நிலையில், அவரை நேரடியாக சந்தித்த குறித்த வர்த்தகர் மாதமொன்றுக்கு ஒரு கோடி ரூபா அன்பளிப்பாக தருவதாகவும், தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயற்படுமாறும் அமைச்சருக்கு ஆசை காட்டியுள்ளார்.

எனினும் அமைச்சர் அதற்கும் மசியவில்லை என்று கூறப்படுகின்றது. இதற்கிடையே குறித்த வர்த்தகரும் தற்போது வேறு அமைச்சர்களை நோக்கி வலை வீசிக் கொண்டிருப்பதாக கேள்வி.

இந்த வர்த்தகர் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய விடயத்துடனும் தொடர்புடையவர் என்று தெரிய வந்துள்ளது.

புதிய அரசியலமைப்பில், தேசியப்பட்டியல் இல்லை - கலாநிதி ஜயம்பதி


நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலான மாற்றுக்கருத்துக்கள் தொடர்பில் அரசியலமைப்புதொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும் என்ற கொள்கையை ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதால், அது தொடர்பில் முடிவெடுக்கநாடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது என்று குழுவின் உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.

முன்னர் இந்த விடயத்தில் முரண்பாடுகள் இருந்தபோதும் தற்போது இரண்டு கட்சிகளும் இதில்ஒருமைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அரசியலமைப்பு யோசனையில் மேற்கத்தைய நாடுகளின் பங்களிப்பும் இருப்பதாகவெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

இந்தநிலையில், தேர்தல் சீர்திருத்தம், அதிகாரப்பரவலாக்கம் போன்ற விடயங்களில்பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு மத்தியில் ஒருமித்த கருத்துஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அடுத்த தேர்தல் முறையின்கீழ் தேசியப்பட்டியல் முறை இருக்காது என்று அவர்தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு, இலங்கை கொடுக்கவேண்டிய 37 பில்லியன்


மசகு எண்ணெய் தொடர்பில் இலங்கையால், செலுத்தப்படாத 37 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் என்று ஈரான் விடுத்த வந்த கோரிக்கைக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கிடையில் தெஹ்ரானில் இடம்பெற்ற சந்திப்பின்போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலுவை கொடுப்பனவை செலுத்துவது தொடர்பில், பல்வேறு வழிகள் ஆராயப்பட்டுள்ளன.

இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்து, ஈரானியர்கள், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள செய்யும் திட்டம் இதில் ஒன்றாகும்.

ஈரானிய உதவியுடன் மீண்டும் சப்புக்கஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இயக்குவது இரண்டாவது திட்டமாக பேசப்பட்டுள்ளது.

"ஹலால் சான்றிதழ்கள் காரணமாக, இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகள்"

-Tw-

ஹலால் சான்றிதழ்கள் காரணமாக, இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹலால் சான்றிதழ் சபையின் கலந்துரையாடல் ஒன்றின் போது அந்த சபையின் மேலாளர் அலி பாதரலி இதனை தெரிவித்துள்ளார்

சர்வதேச சந்தையில் ஹலால் சான்றிதழ் உணவு வர்த்தகத்தின் வருமானம் 1.2 ரில்லியன் டொலர்களை வரை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் இதன் பொருளாதார நன்மைகளை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பெற்று வருகின்றன. எனவே இதன் நன்மைகளை இலங்கையாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஏற்கனவே ஹலால் சான்றிதழுக்கு பொதுபல சேனா உட்பட்ட பௌத்த அமைப்புக்கள் தமது கடும் எதிர்ப்பை காட்டிவரும் நிலையிலேயே இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

July 30, 2016

கல் அடிக்கவுள்ளார்கள் - சந்திரிக்கா

பண்டாரநாயக்கவின் சமாதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று கோரிக்கை விடுத்தார்.


காணொளியில்காண்க https://www.youtube.com/watch?v=YPhWiUocNoA

பாதயாத்திரையால் உடல் எடையை குறைக்கலாம், அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது - ஹிருணிகா

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதயாத்திரையால்,  பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் எடையை மாத்திரமே குறைக்க முடியுமே தவிர அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என  பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

 குறித்த கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிய  பாதயாத்திரையால்  எதுவும் மாற்றமடைய போவதில்லை. அதற்காக அரசாங்கம் பீதியடைவதற்கும்  ஒன்றுமில்லை என அவர் மேலும்  தெரிவித்தார்.

கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று (30) கலந்துக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த பாதயாத்திரையால் ஜனாதிபதியோ பிரதமரோ தங்களது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள போவதில்லை. இன்னும் 5 வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் பிளவுப்பட போவதுமில்லை.

எனவே குறித்த பாதையாத்திரை தொடர்பில் பீதியடைவதற்கு ஒன்றும் இல்லையென தெரிவித்தார்.

தேசிய அரசின், ஒருவருட பூர்த்தி விழா


தேசிய அரசு உதயமாகி எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில், அதைக் கொண்டாடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 19 ஆம் திகதி மாத்தறையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தேசிய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது தேசிய அரசின் ஐந்தாண்டு கால பொருளாதார திட்டமும், கொள்கைகளும்வெளியிடப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.

கெடு முடிந்துவிட்டால்..?

-தாழை ஷேக்தாஸன்-     

மானிடர்கன் உயர்வோடு வாழ கெடு இருக்கிறது. அயராது உழைக்கும்போது அவனது கெடு அம்மனிதனை உயர்த்திவிட்டு மறைந்து விடுகிறது.

ஒரு மனிதருக்கு கடனாளியாய் கடனைக் கொடுத்தவர் இன்ன தேதியில் பணத்தைக்கொடுக்க வேண்டுமென்று கெடு போடுவார். கெடு முடிந்து விட்டால் உடமைகளைப் பறித்துக்கொள்வார்.

கெடு என்பது உறுதியான ஒரு எல்லை. ஒரு வரைமுறை. அதற்குள் கிடைத்துவிட வேண்டும்.. ஓர் எச்சரிக்கை. ஓர் பயமுறுத்தல். ஓர் அபாயக்குரல் என வைத்துக்கொள்ளலாம்.

வாழ்க்கை முறையில் "கெடு" மனிதர்களை பயமுறுத்தி, வாழ்வைத் திருத்திக்கொள்ளத் தூண்டுகிறது.

உயர வேண்டும் என்ற கெடு வைத்து உழைக்கும்போது பலன் கிடைக்கிறது. இப்படி எல்லாவற்றுக்கும் கெடு இருப்பதுபோல், நம் உயிருக்கும் மரணம் என்றொரு கெடு இருக்கிறது. அது காலக் கெடு. இம்மையிலுள்ள கெடு யாவையும் நாம் நிறைவேற்றி விடுவோம். காரணம் ஓர் அச்சம், சுயமரியாதை இவைகளையெல்லாம் காப்பாற்றவே! ஆனால், இறைவன் கொடுக்கும் கெடுவை எதை வைத்து வெல்வது?

இதோ நம்மைப் படைத்த இறைவனே சொல்கிறான் கேளுங்கள்:

"நீங்கள் எங்கிருந்தபோதும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; உறுதிமிக்க கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 4:78)

"நீங்கள் எந்த மரணத்தை விட்டு விரண்டோடுகிறீர்களோ அந்த மரணம் நிச்சயமாக உங்களைச் சந்தித்தே தீரும்" (அல்குர்ஆன் 62:8)

மனிதர்களே! நீங்கள் மய்யித்துக்களைத் தான் அடக்கம் செய்ய முடியும். மரணத்தை அடக்கம் செய்ய முடியாது. சடலங்களைத்தான் புதைக்க முடியுமே தவிர சாவை புதைக்க முடியாது.

மனிதன் குழந்தையாய்ப் பிறப்பதற்கு முன்பே அவனது ஆட்டம் பாட்டங்களுக்கு காலக்கெடுவை அல்லாஹ் நிர்ணயம் செய்து விட்டான்.

மேகமெனும் அலைகளிடையே மிதந்து வரும் வெண்ணிலவை காகங்கள் பறந்து சென்று கவர்வதெனில் இயன்றிடுமா?

விண்மீனைப் பிடித்து வந்து விருந்து வைக்க எண்ணலாமா?

வெண்ணிலவைப் பிடித்து வந்து பந்து விளையாட ஆசைப்படலாமா?

விஞ்ஞானி சொல் கேட்டா விரல் நகம் வளர்கிரது? எல்லாமே பொய்....

ஏன் சமீபத்தில் நாகரீக வளர்ச்சியில் முன்னேற்றமான ஜப்பானின் நிலையை நாம் வீடியோக்களில், பத்திரிகைகளில் கண்டறியவில்லையா?

விஞ்ஞானியால் சுனாமியை ஏன் நிறுத்த முடியவில்லை?

இறைவன் வைத்திருந்த கெடு கடலடிக்குள் முடிந்து விட்டது. மண் அடுக்குகள் தளர்ந்து விட்டது. எல்லாம் இறைவன் செயல், அவன் போட்ட கெடு முடிந்ததால் நடந்தது.

எத்தனை அணு ஆளைகளை மனிதன் கண்டுபிடித்துப் பயனடையட்டுமே! அதன் காலக்கெடு முடியும்போது வெடுத்துச் சிதறுகிறது. அவ்வளவுக்கு ஏன் போவானேன், நாம் வாழும் இந்த பூமிப்பந்தும்கூட ''கெடு'' முடியும் அந்த ஒரு நாளில் வெடித்துச் சிதறத்தானே போகிறது.

மனிதர்களே! சிந்தித்துப் பாருங்கள். உலக வாழ்க்கை மெல்லினமானது. மறுமையே வல்லினமானவை என என் இன்னும் நீங்கள் உணராமல் படைத்தவனை மறந்து பள்ளிகளை பேச்சு மேடைகளாக்கி வாழும் உங்களுக்கு அறிவு எங்கே போனது?

விடியும் ஒவ்வொரு பொழுதும் நீங்கள் சேர வேண்டிய தூரத்தையல்லவா குறைத்துக் கொண்டிருக்கிறது! ஒவ்வொரு நாளும் மனிதனின் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் இறைவனைப் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அரசியலைப் பற்றியோ அடுத்தவர்களைப் பற்றியோ பள்ளிவாசல் படிகளில் அமர்ந்து கொண்டு பேசுவது இறைவனுக்குப் பிடிக்காது என்று அறிந்து கொள்வாய். இது வரையில் பள்ளிப்படிகளில் அமர்ந்துப் பேசியதற்காக வருத்தப் படுவாய்.

வெளியூர் சென்றுவிட்டு, வீடு திரும்ப சில காலங்கள் தாமதமாகி விட்டால், ஃபோன் மேல் ஃபோன் போட்டு விசாரிக்கிறாள் மனைவி! அதே கணவன் இறந்து விட்டால் அடக்கம் செய்ய வேண்டுமென்பதற்காக துயரத்திலும் துரிதப்படுத்துகிறாள். மகனோ தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தை இறந்து விட்ட சோகத்திலும் மய்யித் அழுகி அலங்கோலமாகி விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் சீக்கிரம் மய்யித்தை அடக்க அவசரப்படுகிறான்.

ஊரும், உற்றாரும் ஜனாஸா - மய்யித் - டெட் பாடி - பிணம் போன்ற வார்த்தைகளைச் சொல்லி புதைக்கவே அவசரப்படுத்துகிறார்கள்.

எத்தனை சம்பாத்தியம் பண்ணி என்ன பிரயோஜனம்? எத்தனை பங்களாக்களைக்கட்டி என்ன சங்கோஜம்? மரணக்குழிக்கு சீக்கிரம் அனுப்பவே ஆர்ப்பரிக்கிறார்களே...!

தேடிய பணம், திரட்டிய சொத்து, பயன்படுத்திய வாகனம், இன்னும் என்னென்னவோ... எல்லாவற்றையும் மற்றவர்கள் அனுபவிக்க விட்டுப் பிரிய வேண்டுமே!

ஏன்? இருந்தவருக்கு கெடு முடிந்து விட்டது, இறந்து விட்டார். இனி, புதைக் குழிக்குள் போயே தீர வேண்டும். ஆறடி நிலம் மட்டுமே சொந்தமாகிவிடுகிறது. அந்த ஆறடி நிலம் கூட நிரந்தரமல்லவே! சில ஆண்டுகளுக்குப்பிறகு புதைத்த இடத்தில் மறுபடியும் பள்ளம் தோண்டப்பட்டு வேறொருவரை அடக்கம் செய்து விடுகிறோம்.

தேடிய செல்வமும் பறிபோய்விடும். உறவுகளும் கைவிட்டுப் போகும். சவக்குழியில் தனிமையில் விட்டு விட்டு எல்லோருமே சென்று விடுவதை அப்போது உணர்வான், மனிதன்! எணென்றால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்து விட்டது. யாரோ அனுபவிக்கப் போகும் செல்வத்துக்காக ஒருவன் தன்னுடைய மறுமை வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்கிறானே! கவலை படவேண்டும்.

மரணத்தை மறந்து விட்டு மறுமையை அலட்சியம் செய்துவிட்டு உண்ணவும், உறங்கவும், இனப்பெருக்கம் செய்வதும்தான் வாழ்க்கை என்று மனம் போன போக்கில் வாழலாமா?

எனவேதான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "எவன் தன்னுடைய செயல்களைக் குறித்து சுயமதிப்பீடு செய்து கொண்டே மரணத்திற்குப் பிறகு வர இருக்கும் நிரந்தர வாழ்க்கைக்காக நற்செயல் புரிகின்றானோ அவனே இறைவன் விரும்பும் சொர்க்கவாதி. மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு எவன் இறையருள் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறானோ அவன் நரகவாதியாகும்" என்றார்கள்.

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறு உலக வாழ்க்கையோடு ஒப்பிடும்போது இந்த உலகமானது உங்களில் ஒருவர் தமது விரலைக் கடலில் மூழ்கி எடுப்பது போன்றதுதான். அந்த விரலில் எவ்வளவு நீர் இருந்து விடப் போகிறது?" என்று ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வினா எழுப்பினார்கள். (நூல்: திர்மிதீ, நஸாயீ)

நற்செயல்கள் நல்லமல்களுடன் வாழ்ந்தோமானால் நமது கெடு நல்லவிதமாக முடிவுற்று நம்மை சுவனத்தில் கொண்டுபோய் சேர்க்கும். அதற்கான முயற்சியை இனிமேலாவது நாம் எடுக்கலாம் தானே!

நமது கெடு முடிந்து விட்டபின் நம்மை மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்ட பின் வானவர் நமது வலது கரத்தில் பட்டோலயைக் கொடுக்கும்படியான இறைபொருத்தத்துடன் கூடிய நல்வாழ்வை, இவ்வுலகில் வாழ்வோமாக! இதோ திருக்குர்ஆனின் வசனத்தை கண்குளிர காண்போமே...

''ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.

"நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்."

ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் - உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.

அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.

"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்).'' (69:19-24)

அல்லாஹ் உதவி புரிவானாக!

வாட்ஸ் அப் உரையாடல்கள், ஒருபோதும் அழிவது இல்லை - ஆப்பிள்

நாம் அழித்துவிட்டதாக நினைக்கும் வாட்ஸ் அப் உரையாடல்கள் ஒருபோதும் அழிவது இல்லை என்று ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கின் வசமுள்ள 'வாட்ஸ் அப்' தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்டு செய்து 3-வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என ஆப்பிள் இயங்குளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'வாட்ஸ் ஆப்'-பில் உரையாடல்களை நாம் டெலிட் செய்தாலும், கிளியர் செய்தாலும் அல்லது 'Clear all chats' மூலமாக அழித்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது. அதை 3-வது நபரால் கண்காணிக்க இயலும். எனவே, போனில் இருந்து 'வாட்ஸ் ஆப்'-ஐ அழித்து விடுவது ஒன்றே ஒரே தீர்வு. என்கிரிப்சன் வசதியை கொண்டுவந்துள்ள போதிலும் இன்னும் 'வாட்ஸ் ஆப்' உரையாடல்களின் பாதுகாப்பு இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது” என தெரிவித்தார்.

இதை அவரே சோதித்து பார்த்து உறுதி செய்துள்ளதாக தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கி ராணுவ சதியில், பங்கேற்றவர்களின் உடல்கள் எங்கு புதைக்கப்படும்..?

துருக்கி ஆட்சியை கவிழ்க்க அந்நாட்டு ராணுவம் முயன்று தோல்வியுற்றதை தொடர்ந்து, இதில் பலியான சதிகாரர்களின் உடல்களை புதைக்க விஷேட கல்லறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்தான்பூல் நகருக்கு வெளிப்புறத்தில் ஒரு புதிய கல்லறை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் முகப்பு பகுதியில் ‘Hainler Mezarligi’(ராஜதுரோகம் செய்தவர்களின் கல்லறை) என எழுதப்பட்ட அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லறையில் இதுவரை 34 வயதான தளபதி ஒருவரின் ஒரு உடல் மட்டுமே புதைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் ராணுவ புரட்சியில் ஈடுப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக கொண்டு வரப்பட்டு இந்த கல்லறையில் புதைக்கப்படும்.

இது குறித்து இஸ்தான்பூல் மேயராக Kadir Topbas பேசுகையில், ‘ராஜதுரோகம் செய்தவர்களுக்கு இது தான் சிறந்த தண்டனை. இந்த கல்லறையின் வெளிப்பகுதியில் அறிவிப்பு பலகையை அமைத்துள்ளோம்.

இதனை பார்த்து இவ்வழியாக செல்லும் மக்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ள சதிகாரர்களை சபித்துவிட்டு செல்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

இந்த கல்லறைக்கு அருகில் தெரு நாய்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடம் ஒன்றும் அமைந்துள்ளது.

இப்பகுதியை பராமரிக்கும் Serhan Baturay என்பவர் பேசியபோது, ‘நாய்களை புதைக்கும் இடத்திற்கு அருகில் சதிகாரர்களின் உடல்களை புதைப்பதை நான் எதிர்கிறேன். ஏனெனில், அந்த சதிகாரர்களின் எழும்புகள் கூட உயிரிழந்த நாய்களின் உடல்களை தொடக்கூடாது.

ராணுவ சதி செய்தவர்களை இங்கு புதைப்பதற்கு பதிலாக அவர்களின் உடல்களை தீயிட்டு எரித்து கடலில் வீசியிருக்க வேண்டும்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

ஏழை மாணவர்களின் கல்விக்குக்கு உதவ, தம்முடன் கைகோர்க்குமாறு 'ஸம் ஸம்' அழைப்பு

கல்வி ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது.கல்வி இல்லாத சமூகம் தனது அடையாளத்தையே இழந்துவிடும் அபாயம் இருக்கின்றது. எனவே ஒவ்வொரு சமூகமும் கல்விக்குரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதும் அதனைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும். எனவே எதிர்கால சந்ததிக்கு வழிகாட்டவும் சவால்களை வென்றெடுக்கவும் ஆத்மீகத்துடன் கூடியக கல்வியை வழங்குவதில் நாம் கரிசனை கொள்ள வேண்டும். 

ஏழை மாணவர்களின் கல்விக்குக் கை கொடுக்கும் நோக்கில் ஸம் ஸம் பவுண்டேஷன் School with a Smile எனும் வேலைத் திட்டத்தை அண்மைக் காலமாக செயற்படுத்தி வருகின்றது. கடந்த வருடம் சுமார் 12000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத் திட்டத்தின் மூலம் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் 3000 ரூபா பெறுமதியான ஒரு பாடசாலை உபகரணப் பொதியைப் பெறுகிறார்.இதில் ஒரு புத்தகப் பை,அப்பியாசக் கொப்பிகள்,காகிதாதிகள் மற்றும் 1000 ரூபா பெறுமதியான சப்பாத்துக்கான ஒரு வவுச்சர் என்பன உள்ளடங்குகின்றன.

மாணவர்களின் கல்வி வாழ்க்கை இடைநிறுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கும் பெற்றோர்களின் சுமையைக் குறைப்பதற்கும் என இத் திட்டம் பல நோக்கங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத் திட்டம் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு மாத்திரம் அல்லாமால் இத் திட்டத்தில் 30 வீதம் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கும் வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இதனால்  சகவாழ்விற்கான விதையை பிஞ்சு உள்ளங்களில் விதைப்பதிலும் நாம் அனைவரும் ஒரே நாட்டின் மக்கள் என்ற உணர்வை ஊட்டுவதிலும் இத் திட்டம் வெற்றியடைந்துள்ளது என்பது எமது அனுபவமாகும்.

நாடு முழுக்க வசிக்கும் அனைத்து மாணவர்களின் தேவையையும் ஒரு நிறுவனத்தினால் நிறைவு செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.ஆனால் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல் நிர்வாகம்,சமூக நிறுவனங்கள் மனது வைத்தால் இதனை சாத்தியப்படுத்தலாம்.ஸம் ஸம் அமைப்பானது அது மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களை காலப்போக்கில் ஒவ்வொரு ஊரும் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அந்தவகையில் எதிர்வரும் ஆண்டுக்கான School with a Smile வேலைத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்படும் இச் சந்தர்ப்பத்தில் உங்களுடன் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை பகிர்ந்து கொள்கின்றோம். 

இது போன்ற செயற் திட்டத்தை உங்கள் ஊரிலும் நீங்கள் அமுல்நடாத்த உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் காத்திருக்கிறது.500 மாணவர்களுக்குக் குறையாத தொகையை நீங்கள் பொறுப்பேற்றால் அதே தொகையை ஸம் ஸம் பவுண்டேஷன் உங்களுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். உதாரணமாக ஒரு ஊரில் உள்ள ஒரு நிறுவனமோ அல்லது பல நிறுவனங்களோ இணைந்து 1000 மாணவர்களுக்கான உதவித் தொகையை வழங்க முன்வரும் பட்சத்தில் ஸம் ஸம் பவுண்டேஷன் மேலும் 1000 மாணவர்களுக்கு உதவி செய்யும். அப்போது அப் பிரதேசத்தில் 2000 மாணவர்கள் இத் திட்டத்தினால் பயன்பெறுவர். அந்தவகையில் ஸம் ஸம் பவுண்டேஷன் மொத்தம் 10,000 மாணவர்களுக்கு உதவத் தயாராக உள்ளது.இத் திட்டத்தை நீங்கள் எம்முடன் இணைந்து செயற்படுத்த முன்வரும் பட்டசத்தில் உங்கள் பிரதேசத்தில் 30 வீதம் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கும் இப் பொதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது எமது நிபந்தனையாகும்.

எனவே இது தொடர்பில் ஆர்வம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.ஏனைய விடயங்களை நாம் நேரடியாக சந்தித்து உரையாடலாம்.

வாருங்கள் ஏழை மாணவர்களின் கல்விக்குக் கை கொடுப்போம். வருங்கால இலங்கையின் கல்விச் சமூகத்திற்கு ஒளியூட்டுவோம்.

தொடர்புகளுக்கு –
திட்ட முகாமையாளர்
Rizwan Seedin 0772118888
www.schoolwithasmile.com

பாத யாத்திரையின், இறுதிக் கூட்டம் - மஹிந்த தரப்புக்கு ஏமாற்றம்

எதிர்வரும் முதலாம் தேதி கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த மைதானத்தின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அளஹப்பெரும தெரிவித்துள்ளார்.

பாதயாத்திரை கொழும்பிற்கு வந்து சேர்ந்த பின்னர் கொழும்பு ஹைட் மைதானத்தில் மாபெரும் கூட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால், அந்த மைதானத்தை பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த டலஸ் அளஹப்பெரும, ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

அரசாங்கம் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் தங்களது பாதயாத்திரை மற்றும் எதிர்ப்புக் கூட்டத்தை நிறுத்த முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை இன்று நிட்டம்புவ நகரில் நிறைவு பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை அது கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.

சாகிர் நாயக்குக்கு எதிரான, இந்திய அரசின் நகர்வுகள்

-லத்தீப் பாரூக்-

சுமார் இருபது வருடங்களுக்கு முன் துபாயை தளமாகக் கொண்டு இயங்கும் கல்ப் தினசரி பத்திரிகையில் நான் சவூதி அரேபியா பிராந்தியத்துக்கும் சேர்த்து பொறுப்பாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் இஸ்லாமிய அறிஞர் டொக்டர் ஸாகிர் நாயக் எமது அவுவலகத்துக்கு விஜயம் செய்தார்.
அந்தக் காலத்தில் நான் அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தேன். மனிதனுடைய சிந்தனையைத் தூண்டும் வகையில் இஸ்லாத்தைப் பற்றி ஏனைய சமயங்களுடனான ஒப்பீட்டளவிலான கருத்தாழம் மிக்க அவரின் உரைகள் பலவற்றை நான் செவிமடுத்தும் இருந்தேன். ஆனால் அவரை சந்தித்தது இல்லை. எனவே அந்த முதலாவது சந்திப்பு என்னுள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.
சுமார் இரு மணிநேரம் அந்த சந்திப்பு நீடித்தது. பல்வேறு விடயங்கள் பற்றி நாம் பேசினோம். அந்தக் காலப்பகுதியில்; தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் போதகர் அஹமட் தீதாத் தன்னுடைய தள்ளாத வயதிலும் வீரியம் மிக்க பேச்சால் உலகை உசுப்பிக் கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்கு அவரின் உரைகள் அறிவூட்டும் ஊக்கமருந்தாக அமைந்திருந்தன. இஸ்லாம் பற்றி உலகின் ஏனைய பாகங்களிலும் அறியாமை இருளில் மூழ்கி உள்ளவர்களை இந்த உரைகள் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தன.
அஹமட் தீதாதுக்குப் பிறகு அவரின் இடைவெளியை நிரப்பக்; கூடிய எல்லா திறமைகளும தகுதிகளும்; சாகிர் நாயக்கிற்கு உள்ளதை நான் அன்றே உணர்ந்து கொண்டேன். அவரும் தனது பணியை அயராது தொடர்ந்தார். உலகம் முழுவதும் உள்ள எல்லா நாடுகளுக்கும் விஜயம் செய்து இஸ்லாம் பற்றி முன்னொருபோதும் இல்லாத விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரின் பங்களிப்பால் கவரப்பட்ட பெரும்பாலும் எல்லா நாடுகளையும் சேர்ந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் அவர்கள் மதச்சார்பற்றவர்களாகவும் தமது குடிமக்கள் மீது சர்வாதிகாரப் போக்கில் நடந்து கொள்பவர்களாக இருந்தும் கூட சாகிர் நாயக்கை வரவேற்று விருதுகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கத் தவறவில்லை.
அவரின் விரிவுரைகளால் ஏற்படுத்தப்பட்ட சமய விழிப்புணர்வுகள் இஸ்ரேலிய அனுசரணையுடன் அமெரிக்க பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் தலைமையிலான யுத்த வெறியர்களுக்கு இஸ்லாத்துக்கு எதிரான அவர்களின் பிரசாரத்தில் பெரும் தடையாக இருந்தன. இந்தப் பின்னணியில் நரேந்தி மோடி இந்தியாவின் பிரதமராக வந்ததையடுத்து இந்தியாவின் ஆர்எஸ்எஸ் இந்துத்துவ படைகளும் இந்த நவீன மேலைத்தேய சிலுவை யுத்தப் படைகளுடன் கைகோர்த்துக் கொண்டன. ஆர்எஸ்எஸ் இன் ஆதிக்கம் கொண்ட இந்திய அரசு சாகிர் நாயக்கை நசுக்கி அவர் மீது தடை விதிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தது வெளிப்படையான உண்மையாகும்.
அந்த வகையில் அவர் இந்திய அரசின் பிரதான குறியாக இருந்தார்.
இந்நிலையில் தான் சாகிர் நாயக்கின் உரைகள் பயங்கரவாதத்தையும் வன்முறைகளையும் தூண்டியுள்ளன என்ற பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இம்மாத முற்பகுதியில் பங்களாதேஷ் தலைநகரில் ஒரு உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தி 22 பேரைக் கொன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவரான நிப்ராஸ் இஸ்லாம் என்பவர் தான் சாகிர் நாயக்கின் உரைகளாலேயே தூண்டப்பட்டதாகக் கூறினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது சாகிர் நாயக்கை அடக்குவதற்கான இந்திய – பங்களாதேஷ் சதியின் ஒரு அங்கமாக இருக்கலாம். இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் இணைத்து வெளியிடப்படும் கருத்துக்களுக்கு பதிலாக அமையும் அவரின் விரிவுரைகளை நிறுத்துவதற்கான ஒரு சதித்திட்டமே இதுவாகும் என்பதுதான் பலரதும் சந்தேகமாகும்.
டாக்கா சம்பவத்துக்கு எதிரான நடவடிக்கையாக இந்திய அரசு சாகிர் நாயக்கிற்கு எதிராக துரிதமாகச் செயற்பட்டது. இந்திய உள்துறை அமைச்சர் கிரேன் றிஜ்;ஜு 'சாகிர் நாயக்கின் உரைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எமது புலனாய்வு நிறுவனங்கள் இதுபற்றி ஆராயத் தொடங்கியுள்ளன' என்றார்.
மஹாராஷ்டிர மாநில புலனாய்வு திணைக்களம் சாகிர் நாயக் பற்றி எந்தவொரு வழக்கோ அல்லது முறைப்பாடோ அற்ற நிலையில் அவருடைய அலுவலகத்துக்கு விஷேட குழுவொன்றை அனுப்பியது. ஆரம்ப கட்ட விசாரணையாக இந்தப் பிரிவு யு டியுப் வலைதலத்திள் உள்ள நூற்றுக்கணக்கான அவரின் உரைகளை செவிமடுத்தது. இவற்றுள் இந்தியாவிலும் உள்ளுரிலும் அவர் நிகழ்த்திய உரைகள் அடங்கும். இதேபோல் இன்னும் பல மாநிலங்களில் உள்ள புலனாய்வு அதிகாரிகளும் சாகிர் நாயக்கின் உரைகளை ஆராய்ந்தனர்.
இந்திய தினசரியான த இந்து பத்திரிகையில் 'மஹாரஷ்டிரா விசாரணையில் சாகிர் நாயக்கிற்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை' எனும் தலைப்பில் ஷரத் வயாஸ் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில்: 
மஹாரஷ்டிரா புலனாய்வு பிரிவு சாகிர் நாயக் குற்றம் அற்றவர் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. அவருக்கு எதிராக குற்றம் சாட்டவோ வழக்குத் தொடரவோ எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அரச உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட விசாரணையைக் கையாண்ட இந்த விஷேட புலனாய்வு பிரிவு அவரைக் கைது செய்யவும் முடியாது என மறுத்துவிட்டது. சாகிர் நாயக் அப்போது வெளிநாட்டில் இருந்தார். இந்தியா திரும்பியதும் அவரைக் கைது செய்து சிறையில் அடைப்பதே இந்திய அரசின் திட்டமாகும்.
நாம் அவரின் அசைவுகளை அவதானித்து வருகின்றோம். அவர் நாடு திரும்பியதும் ஏதாவது வித்தியாசமாகக் கூறினால் நாம் அவரை நெருங்கலாம். இப்போதைக்கு நாம் அவரை நுணுக்கமாக கண்கானிக்க முடியுமே தவிர வேறு எதுவம் எம்மால் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் அரச உயர் மட்டத்திடம்  இதை தெளிவாகக் கூறிவிட்டனர். சாகிர் நாயக் மீது பயங்கரவாதத்தோடு தொடர்புடைய குற்றம் சுமத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. டாக்காவில் அல்லது ஹைதராபாத்தில் அவர் பயங்கரவாதத்தை தூண்டியமைக்கான எந்த தடயங்களும் இல்லை. தலிபான் அற்றும் ஐஎஸ் அமைப்புக்கள் பற்றியும் ஒசாமா பின் லேடன் போன்றவர்கள் பற்றியும் அவர் காரசாரமான கருத்துக்களையே முன்வைத்துள்ளார். இதனால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என்று இந்திய புலனாய்வு பிரிவை மேற்கோள் காட்டி அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் பல முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. சாகிர் நாயக்கிற்கு ஆதரவு தெரிவித்த அவை மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டித்தன. சுமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான ஒரு குரலை நசுக்க எடுக்கப்பட்ட முய்றசியாகவே இவை சித்தரிக்கப்பட்டன.
இந்திய ஊடகங்களில் வெளியான 'மும்பாயில் உள்ள இஸ்லாமியப் போதகர் சாகிர் நாயக்கும் டாக்கா பயங்கரவாத தாக்குதலை அடுத்து விஷேட புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளும்' எனும் தலைப்பிலான மற்றொரு அறிக்கையில் :
49 வயதான தொழிற்சார் பயிற்சி உடைய ஒரு மருத்துவரான சாகிர் நாயக் இஸலாம் மற்றும் ஒப்பீட்டளவில் சமயங்கள் பற்றிய சர்வதேச கீர்த்திமிக்க ஒரு பேச்சாளராவார். மும்பாயில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். இஸ்லாமிய கருத்துக்களைத் தெளிவுபடுத்தி இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களை அவர் நீக்கி வருகின்றார். இதற்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அவர் புனித குர்ஆன் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மற்றும் வேத நூல்களைப் பயன்படுத்தி வருகின்றார். விஞ்ஞான ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் ஏனைய நியாய வாதங்களின் அடிப்படையிலும் அவர் தனது கருத்துக்களை நிறுவி வருகின்றார். அவரின் காரசாரமான ஆக்கபூர்வமான ஆய்வுரீதியான கருத்துக்களால் அவர் புகழ்  பெற்றுள்ளார். அவரிடம் பொது மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நியாயபூர்வமான பதில்களை ஆதாரங்களோடு அவர் வழங்கி வருகின்றார். அதேபோல் எழுப்;பப்படும் சந்தேகங்களுக்கும் தெட்டத் தெளிவான விளக்கங்களை அவர் வழங்கி வருகின்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 வரையான 20 வருட காலப்பகுதியில் அவர் உலகம் முழுவதும் பல நாடுகளில் சுமார் இரண்டாயிரம் பொது விரிவுரைகளை நிகழ்த்தி உள்ளார்.
2009ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தர வரிசையில் கோடிக்கணக்கான இந்திய மக்கள் தொகையில் மிகவும் சக்தி மிக்க 100 இந்தியர்கள் வரிசையில் சாகிர் நாயக் 82வது இடத்தில் உள்ளார். 2010ல் 89வது இடம் கிடைத்தது. 2009ல் இந்தியாவின் மிகச் சிறந்த பத்து சமயத் தலைவர்கள் வரிசையில் அவருக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. 2010ல் அதை விட ஒரு இடம் மேலே சென்றார். அமெரிக்காவின் ஜேர்ர்ஜ் டவுண் பல்கலைக்கழக வருடாந்த தெரிவின் படி உலகில் உள்ள மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள் வரிசையில் அவர் 70வது இடத்தைப் பிடித்துள்ளார். 2011ஃ12, 2013ஃ14, மற்றும் 2014ஃ15ம் ஆண்டுகளில் இந்த நிலை காணப்படுகின்றது.
2006 ஜனவரியில் அவர் Pநயஉந வுஏ (சமாதான தொலைக்காட்சி) யை தொடங்கினார். இந்த வலையமைப்பின் பின்னால் தொடர்ந்தும் ஒரு உந்து சக்தியாக அவர் திகழுகின்றார். உலகில சகல சமயங்களையும் சேர்ந்த் ஆகக் கூடுதலான மக்கள் விரும்பிப் பார்க்கும் ஒரு சமய ரீதியான தொலைக்காட்சியாகவும் இஸ்லாமிய தொலைக்காட்சியாகவும் அது உள்ளது. அதன் பார்வையாளர்கள் 100 மில்லியனுக்கும் அதிகமாகும். இதில் 25 வீதமானவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் உருது, வங்க மொழி மற்றும் சீன மொழிகளிலும் அவர் அதனைத் தொடங்கினார். உலகின் முன்னணி பத்து மொழிகளில் இதன் சேவைகளை விஸ்தரிப்பதற்கான திட்டங்களும் அவரிடம் உண்டு.
உலகின் பல நாடுகளில் 200க்கும் மேற்பட்ட சர்வதேச தொலைக்காட்சி அலைவரிசைகளில் சாகிர் நாயக் தோன்றி வருகின்றார். தொடர்ச்சியான தொலைக்காட்சி வானொலி நேர்காணலுக்காக அவர் அழைக்கப் படுகின்றார். நூற்றுக்கணக்கான அவரின் உரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் என்பன டிவிடி வடிவிலும் இன்னும் பல ஊடக வடிவிலும் உள்ளன. ஓப்பீட்டில் சமயங்கள் மற்றும் இஸ்லாம் என்பன பற்றி அவர் பல நூல்களையும் எழுதியுள்ளார்.
ஏனைய சமயங்களின் முக்கிய புள்ளிகளுடன் வெற்றிகரமாக அவர் பல விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்றுள்ளார். 2001 ஏப்பிரல் 1இல் டொக்டர் வில்லியம் கெம்பலுடன் (அமெரிக்கா) சிக்காகோவில் 'விஞ்ஞான ஒளியில் குர்ஆனும் பைபிளும்' எனும் தலைப்பில் அவர் நடத்திய பகிரங்க விவாதம் மிகவும் வெற்றிகரமான ஒரு விவாதமாகும். 2006 ஜனவரி 21ல பெங்களுரில்; பிரபல இந்து மத போதகர்  ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கருடன் 'புனித வேத நூல்களின் ஒளியில் இந்து மதத்திலும் இஸ்லாத்திலும் இறை கோட்பாடு' எனும் தலைப்பிலான விவாதம் இரு தரப்பினரதும் அளப்பரிய பாராட்டைப் பெற்றது.
இஸ்லாம் மற்றும் ஒப்பீட்டு சமயங்கள் பற்றிய உலகப் புகழ் பெற்ற பேச்சாளர் ஷேக் அஹமட் தீதாத் 1994ல் சாகிர் நாயக்கை 'தீதாத் பிளஸ்' என்று குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்தின் போதனைப் பணியிலும் ஒப்பீட்டளவில் சமயங்களைக் கற்றுக் கொண்டமைக்காகவும் நினைவுச் சின்னம் வழங்கி அவரை கௌரவித்துள்ளார். 'மகனே நீ நான்கு வருடங்களில் செய்து முடித்துள்ள காரியத்தை செய்து முடிக்க எனக்கு 40 வருடங்கள் தேவைப்பட்டது' என பெருந் தன்மையோடு சாகிர் நாயக்கை அவர் பாராட்டியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையொன்றில் ணுநந ஊடக பணியகத்தை மேற்கோள் காட்டி வெளியடப்பட்டுள்ள ஒரு தகவலில் சர்ச்சைக்குரிய வலது சாரி இந்து தலைவரான சத்வி பிராச்சி சாகிர் நாயக்கின் தலைக்கு 50 லட்சம் ரூபா வழங்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். உத்துரகாண்டில் ரூர்க்கி என்ற இடத்தில் பேசும் போது சாகிர் நாயக்கை ஒரு பயங்கரவாதி என வர்ணித்த சத்வி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இந்திய அரசியலின் இன்றைய பரிதாபகரமான நிலை இதுதான்.

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடு, மிக மோசமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது - ஷிப்லி பாரூக்

-அஹமட் இர்ஷாட்-

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் திட்ட மிட்ட வழி காட்டலுடன் தீவிரவாதத்தினை ஒழிக்கின்றோம் என்ற போர்வையில் காஸ்மீர் மானிலத்திலே இந்திய இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டு அப்பாவி காஸ்மீர் முஸ்லிம்களை கொன்றொழிக்கும் வன்முறைக்கு எதிராக இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியவாதிகளும், தலைமைகளும் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக்.

தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவித்த ஷிப்லி பாரூக்,

அண்மைக்காலமாக இந்தியாவிலே முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாத செயற்பாடு ஆளும் பாரதீக ஜனதா கட்சியினால் மிக மோசமாக முடிக்கிவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள இந்துத்துவ தீவிரவாதிகள் மேற்கொள்கின்ற முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாத செயற்பாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திய மோடி எந்த விதமான தடைகளையோ அல்லது அதற்கு எதிரான நடவடிக்கைகளையோ எடுக்காமல் அதனை ஊக்குவிக்கின்ற முறையில் அவருடைய ஆட்சி நடை பெற்றுக்கொண்டிருப்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

உலகிலே ஜனநாயகத்தினை மேலோங்கச் செய்கின்ற நாடு என தன்னை மார் தட்டிக்கொள்ளும் இந்தியாவில் ஜனநாயக ரீதியாக தங்களுடைய உரிமைளுக்காக போராடுகின்ற காஸ்மீர் முஸ்லிம் பெண்களை மிக மோசமான முறையில் பாலியல் வல்லுரவுகளுக்கு உட்படுத்தி அவர்களை கொன்றொழிக்கின்ற விடயங்களை பார்க்கின்ற பொழுது ஜனநாயகத்தினை பற்றி பேசுவதற்கு இந்தியாவிற்கு எந்த அருகதையும் இல்லை என்பதனையே உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுகாட்டுவதாக அமைகின்றது.

சில மாதங்களாக இந்தியாவிலிருந்து மாட்டு இறைச்சியினை சாப்பிடுகின்ற முஸ்லிம்கள் என்ற போர்வையின் கீழ் தங்களுடைய கடவுளை முஸ்லிம்கள் அறுத்து புசிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரவாதத்தினை முடிக்கி விட்டுள்ளார்கள். ஆனால் மறுபக்கத்திலே உண்மையாக பார்க்கின்ற பொழுது உலகிற்கு இந்தியாவில் இருந்துதான் மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அதில் முக்கிய விடயம் என்னவென்றால் அதிகப்படியாக மாட்டு இறைச்சியினை உலகிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில்தான் இருக்கின்றன. உலகிற்கு ஹலால் இறைச்சி ஏற்றுமதி செய்கின்றோம் என்பதனை காட்டுவதற்கக முஸ்லிம் பெயர்களிலே நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அணைத்து நிறுவனங்களினதும் உரிமையாளர்கள் இந்துக்களாகவே இருக்கின்றார்கள். உதாரணத்திற்காக (Al-Kabeer Exports Pvt. Ltd. Its owner Name: Mr. Shatish &Mr. Atul Sabharwal Address: 92, Jolly makers, Chembur Mumbai 400021 2/ Arabian Exports Pvt.Ltd. Owner’s Name: Mr.Sunil Kapoor Address: Russian Mansions, Overseas, Mumbai 400001 3/ M.K.R Frozen Food Exports Pvt. Ltd.) இவைகளை குறிப்பிடலாம்.

இவற்றை கடந்த காலங்களில் பிரபல நடிகரும், இயக்குனர் மற்றும் இந்திய உலக தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடிக்கொண்டிருக்கின்ற அரசியல்வாதியான சீமான் பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கின்ற பொழுது,.. வேண்டும் என்றே திட்டமிடப்பட்டு இருபது கோடிகளுக்கு மேல் சனத்தொகையினை கொண்டு வாழுகின்ற முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து இல்லாமல் செய்கின்ற நரேந்திர மோடியின் நடவடிகையாகவே இருக்கின்றது என்பதே உண்மையாகும்.

ஆகவே உலகில் வாழுகின்ற எல்லா முஸ்லிம்களும், அரசியல்,சமூக தலைமைகளும், இதற்கு எதிராக குரல் கொடுக்கின்ற விடயத்தினை முக்கிய செயற்பாடக எடுத்து கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். அதே போன்று குறிப்பாக சகோதர நாடாக இருக்கின்ற இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்களினுடைய தலைமைத்துவங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் பாராளுமன்றத்திலே இது சம்பந்தமான விடயங்களை கொண்டு சென்று இந்தியாவினுடைய அடாவடி தனத்திற்கு எதிரான எதிர்ப்பினை அல்லது கண்டன பிரேரணையினை நிறைவேற்ற வேண்டும் என இவ்விடத்தில் மக்கள் பிரதி நிதி என்ற வகையிலே கேட்டுக்கொள்ள விரும்புக்கின்றேன்.

ஏன் என்றால் நாங்கள் கலீமாவினை கூறியதன் வகையிலே முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் எங்களுடைய உறவு சகோதரத்துவத்தினை அடிப்படையாக கொண்டது என்பதனை மனதில் வைத்து செயற்பட வேண்டிய சமூகமாக இருக்கின்றோம். ஆகவே எமது சகோதரர்களின் இரத்தங்கள் ஓட்டப்படுகின்ற பொழுதும், அவர்கள் வீனாக கொல்லப்படுகின்ற பொழுதும் அவர்களுடைய உரிமைகளுக்காக குரல்கொடுக்கின்ற தேவைப்பாடு எமக்கு இருக்கின்றது.

அந்த வகையிலே பார்க்கின்ற பொழுது அண்மைகாலமாக கஸ்மீரிலே நேரடியாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுரவிற்கு உட்படுத்துவது, வயது வித்தியாசமின்றி முதியோர்கள் சிறுபிள்ளைகள் என கொன்றொழிப்பது, மிருகங்களை அடிப்பது போன்று பெண்களை அடித்து வீதியில் இழுத்து செல்வது போன்ற விடயங்கள் மிக மோசமான முறையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. எல்லா ஊடகங்களிலும் இவைகள் தெளிவாக வெளிக்காட்டப்பட்டும் கூட எல்லோரும் மெளனிகளாக பார்த்து கொண்டிருக்கின்ற இவ்விடயத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்தியாவினுடைய இராணுவத்தினருக்கு எதிராகவும் மோடியின் அரசாங்கத்திற்கு எதிராகவும் நாங்கள் குரல் கொடுக்க வேண்டிய தேவைப்பாடு மிகவும் தெளிவாக இருக்கின்றது. இலங்கையில் இராணுவம் மிகவும் மோசமாக இறுதி யுத்தத்தில் நடந்து கொண்டது என குற்றம் சுமர்த்தப்பட்டு இலங்கையினுடைய இரணுவத்திற்கு எதிராக விசாரனைகள் நடாத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் குரல் கொடுக்கின்ற நேரத்தில் இன்னொரு சமூகமானது முஸ்லிம்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக காஸ்மீரிலே இந்தியா இராணுவத்தின் திட்டமிடப்பட்ட வன்முறைகளால் இலட்ச்சக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றார்கள். 

ஆனால் அதனை சர்வதேசமும், முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும், மெளனமாக பார்த்துக்கொண்டிப்பது என்கின்ற விடயத்தினை எங்களால் ஏற்றுகொள்ள் முடியாதுள்ளதுடன் மிகவும் மனவேதனை அளிக்க கூடிய விடயமாகவும் இருக்கின்றது. ஆகவே இந்திய அரசாங்கத்திற்கு எங்களுடைய வன்மையான கண்டனத்தினை தெரிவிக்கும் அதே நேரத்தில் இதற்கு எதிராக சர்வதேசம் தலையிட்டு காஸ்மீர் மக்களுக்கு விடிவினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

காஸ்மீர் எனும் போராட்டமனது அவர்களுடைய உரிமைக்காக போராடுகின்ற ஒரு போராட்டமாகும். அந்த உரிமையினை காஸ்மீர் மக்களுக்கு கொடுக்காமல் ஜனநாயக ரீதியில் போராடுகின்ற மக்களையும் கொன்று அழித்தொழிக்கின்ற இந்திய அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் செயற்பாட்டிற்கு நாம் முற்று புள்ளி வைக்கும் முகமாக நாம் எல்லோரும் ஒன்று பட்டு இறைவனிடத்தில் துவா பிரார்த்தனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு நரேந்திர மோடியின் பாரதீக ஜனதா கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பதன் மூலம் காஸ்மீர் மக்களினுடைய பிரச்சனையினை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல முடியும். ஆகவே அதற்கு நாம் ஒன்று பட்டு செயற்பாட வேண்டிய  கட்டாய தேவை எமக்கிருக்கின்றது என என்பதனை மிக முக்கியமாக இங்கு ஞாபகபடுத்திகொள்ள விரும்புக்கின்றேன்.

அரசாங்கத்தை வீழ்த்த முடியாது - ரணில் முன்பாக, மைத்திரி திட்டவட்டம்


அரசியல் சூழ்ச்சிகள் மூலம் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இன்று -30- நடைபெற்ற நில மேஹேவர தேசிய நடமாடும் சேவையின் நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளது. ஒன்பது லட்சம் கோடி கடன் சுமையுடன் சர்வதேசத்தில் இருந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுடன் இந்த இரண்டு ஆண்டுகள் முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசாங்கம் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டிய ஏச்சு பேச்சுகளை அரசாங்கம் என்ற வகையில் நானும் பிரதமரும் எதிர்நோக்கி வருகின்றோம்.

அரசாங்கம் என்ற வகையில் புகழும் பாராட்டும் கிடைப்பது போல் விமர்சனங்களும் அதிருப்திகளும் எந்த மட்டத்தில் இருந்தாலும் நான், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட இந்த அரசாங்கத்தை அடுத்த 5 வருடங்களுக்கு எவராலும் வீழ்த்த முடியாது என்பதை தெளிவாக கூறவேண்டும்.

அரசாட்சி செய்து, அரச நாற்காலியில் இருந்து விட்டு, கடும் வெயிலில் கால்கள் சுட மீண்டும் தெருவில் நடந்து, நடக்க முடியாது போகும் போது எவராவது தூக்கி வாகனத்தில் ஏற்றி விடுவார்கள் என்றால், அது எந்த கர்மத்தின் விதி என்பது பௌத்தர்களான எமக்கு தெரியும்.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு அமைய அரசாங்கத்தின் பதவிக்காலம் மிக வலுவாக முன்னோக்கி செல்லும்.

சதித்திட்டங்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் மூலம் இந்த அரசாங்கத்தை வீழ்த்தவோ கவிழ்க்கவோ முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மிகச்சிறந்த வெற்றி - மைத்திரி மகிழ்ச்சி

இலங்கையின்  மிகச்சிறந்த வெற்றி - மைத்திரி வாழ்த்து

17 வருடங்களின் பின், அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை


இலங்கை அணி 17 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டியுள்ளது.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது கிரிக்கெட் போட்டியில் 106 ஓட்டங்களை வெற்றி கொண்டு இந்த சாதனையைப் படைத்துள்ளது.

போட்டியின் வெற்றிக்காக அவுஸ்திரேலிய அணிக்கு 268 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 161 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இலங்கை அணி வெற்றி பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

1999 ஆம் ஆண்டு கண்டி அஸ்கிரிய மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றை இலங்கை அணி வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு. நாம் அனுமதிக்க முடியாது - றிசாத்


-சுஐப் எம்.காசிம்-

அரசியல் இருப்பு, பிழைப்புகளுக்காகத் தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மினுவாங்கொடை, கல்லொலுவ வஸீலா சாஹிர் எழுதிய “ நிலவுக்குள் சில ரணங்கள் “ சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கொழும்பு, அல்/ஹிதாய மஹா வித்தியாலயத்தின், பஹார்தீன் மண்டபத்தில் இன்று காலை (30/07/2016) நடைபெற்றபோது அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுசரணையில், அதன் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கௌரவ அதிதிகளாக மேல்மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம், ரூபவாஹினிக்  கூட்டுத்தாபனத் தமிழ் பிரிவின் நடப்பு விவகாரப்பணிப்பாளர் யு.எல்.யாகூப், லேக்ஹவுஸ் நிருவனத்தின் தமிழ் பிரிவு ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம், பிரபல எழுத்தாளர் மு.பஷீர், மௌலவி ஹஸ்புல்லாஹ் ஆகியோர் பங்கேற்றனர். பிரபல தொழிலதிபர் முஸ்லிம் ஹாஜியார் முன்னிலை வகித்த இந்த நிகழ்வில், புரவலர் ஹாஷிம் உமர் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.  அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றியதாவது,

சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், தாம்சார்ந்த சமூகங்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் சமூக உள்ளக்கிடக்குகளை வெளிக்கொணர்ந்து, அதை நூலுருப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கின்றது. 30 ஆண்டுகால யுத்தத்தின் பிறகு சமாதானம் மலர்ந்துள்ள நிலையில், தமிழ் - முஸ்லிம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும், வென்றெடுக்கும் வகையிலும் எழுத்தாளர்கள் எழுத்துப்பணி செய்தால், எமது இலக்குகளை இலகுவாக வென்றெடுக்க முடியும். 

பொதுவாக முஸ்லிம் பெண்கள் எழுத்துத்துறையில் ஆர்வங்காட்டுவது குறைவாகவே இருக்கின்றது. வஸீலா சாஹிரைப் போன்ற ஒருசில பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு நாம் ஊக்கமளிப்பதன் மூலம், எழுத்துத்துறையில் பெண்களின் ஆர்வத்தை அதிகரித்து, அவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர உதவ முடியும். எழுத்தாளர்களை நாம் தட்டிக்கொடுக்க வேண்டும். அவர்களின் திறமைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். 

அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்கு மட்டும் ஊடகத்துறையினரை பயன்படுத்திவிட்டு, அவர்களை கருவேப்பிலையாகத் தூக்கி எறிவது கவலைக்குரியது. எழுத்தாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதிலும், அவர்களின் எழுத்துக்களை நூலுருப்படுத்துவதிலும் நமது சமூகம் சார்ந்த ஒருசில தனவந்தர்கள் உதவிவருகின்ற போதும், ஏனைய பரோபகாரிகளும் முன்வருவது சிறப்பானது. நமது நாட்டைப் பொருத்தவரையில், கலைஞர்களுக்கு ஆங்காங்கே சில கட்டமைப்பான அமைப்புக்கள் இயங்குகின்றன. ஆனால் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு முறையான, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான அமைப்புக்கள் இல்லாதது குறைபாடானது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.                          

நல்லிணக்கம் ஏற்பட போவதில்லை - மகிந்த

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தவறான செயற்பாடுகள் காரணமாக நல்லிணக்கம் ஏற்பட போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

இந்த நிலமை காரணமாக மக்கள் ஆர்பாபட்டங்கள் மற்றும் வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். 

அநுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பிரதேச விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார். 

Newer Posts Older Posts Home