Header Ads



"ஞானசாரரே உனக்காக நாங்கள், அவசரப்படப் போவதில்லை"


-Aqil Ahmad Sharifuddeen-

ஞானசாரரே,
உனக்காக நாங்கள் அவசரப்படப் போவதில்லை.
உனக்கு
வாழ்வையும் மரணத்தையும் படைத்து
இரண்டுக்கும் இடையே
வாழ்வாதாரத்தையும் அமைத்த
உனது எஜமான்
உன்னை அவதானித்துக்கொண்டிருக்கின்றான்
என்பதனை அறிந்துகொள்.
அவன் உன்னை
உன் வழியில் விட்டுவைத்திருப்பதெல்லாம்
உன்னை கிடுக்கிப்பிடிப்பதற்குத்தான்.
கேவலம் உன்னைச் சூழ்ந்து கொள்வதற்குள்
நீ திரும்பிவிடு
அல்லது
உன் முடிவுக்காக நீ காத்திரு.
'நான்தான் உங்களது மேலான ரட்சகன்'
என்று சொன்னவன்
உப்புக் கருவாடானதையே பார்த்தவர் நாங்கள்
நீ எம்மாத்திரம்!
மண்ணில் தாழ்ந்த தலைகளும்
விண்ணில் உயர்ந்த கரங்களும்
பின்னிரவில் சிந்தும் கண்களும்
இருக்கும் எங்களுக்கு
எஜமானிடம் முறையிட
எழுத்துக்கள் தேவையில்லை.
இந்த மொழி புரியாது உனக்கு.
கலவரத் தீயில்
குளிர் காய நீ செய்யும் சூழ்ச்சிக்காய்
நாங்கள் அவசரப்படப் போவதில்லை.
நீ காத்திரு.
நாங்களும் காத்திருக்கிறோம்.

14 comments:

  1. அந்த மத போதகரின் ஆணவமான துவேசம் நிரம்பிய உரைக்கு,
    உண்மையான புடம்போட்ட இஸ்லாமியனின் பதில்
    மனதுக்கு ஆறுதல்
    நன்றி சகோதரனே

    ReplyDelete
  2. அல்லாஹ் இவனுக்கு நல்ல தெழிவை கொடுத்து இஸ்லாத்தில் இனய்ந்து மற்ற இனத்தவர்களுக்கும் முன்மாதிரியாக ஆக்கிவிட நாம்மெல்லாம் பிரார்த்தனை செய்வோம், , . , ஆமீன்

    ReplyDelete
  3. Salaam dear.Allah bless us ever.

    ReplyDelete
  4. ඥානසාර
    අපට හදිසියක් නැත
    නුඹට උපතකුත් පසුව මරණයකුත්
    ඒ අතර ජීවයක්, තව ජීවනාධාර
    ඒ සැම මවාදුන්
    කර්ථ්රූ
    නුඹ දිහා බලමින් සිටී යයි
    දැන ගනු
    නුඹ නිදැල්ලේ නුඹේ හිතු මතේ
    සිටීමට දුන් ඒ
    නුඹව වෙරයෙන් අල්ලාගැනීමටය
    විළියෙන් එතෙන්නට පෙර
    පෙරලා එනු
    නැත්නම් නුඹේ මොහොත එනතුරු සිටිනු
    "මමයි දෙවි" යයි පැවසූ ඔහු
    ලවණයේ වියලී පත්වුවාද අපි දුටුවා
    නුඹ කොපමණක්ද
    පොලොවට බරවූ හිස්
    අහසට එසවූ දෑත්
    රෑ යාමේ හෙලන කඳුළු
    අප සතුව ඇත
    කර්ථ්රූ වෙත විලාප නඟන්න
    හසුනක් අවශ්‍ය නැත
    මේ බහ නැත වැටහෙන්නේ නුඹට
    ඇවිලෙන ගින්නේ
    සීතල තැපීමට නුඹ කරන
    උපා ගැන
    අපට හදිසියක් නැත
    රැඳෙනු
    සිටිමින් අපද රෑන්දී

    ReplyDelete
  5. Dear Brothers AQIL, NAZEEM JAZAKUMULLAH

    ReplyDelete
  6. சகோதரன் Aqil அவர்களின் ஆக்கத்தை உத்தரவில்லாது மொழிபெயர்த்து இட்டதையிட்டும் மன்னிக்க வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அல்லாஹ் உங்கள் பணியைப் பொருந்திக்கொள்ளட்டும்

      Delete
  7. அவசியமானதை தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. @kamilah ஞானசார மதபோதகரா!!!
    புத்த போதனைகளுக்கும் அவனுக்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை காவி ஆடையை தவிர,
    1::
    குடித்து விட்டு சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல்
    சிவப்பு விளக்கு எரிகின்ற போது சாலை விதிகளை மீறி முன்னால் வந்த வாகனத்தை மோதி தப்பிச் சென்ற(இது மரண தன்டனைக்கு உரிய குற்றம் சவுதி அரேபியாவில்)
    2:::::கள்ள குழந்தையை வெளிநாட்டில் படிப்பிக்கறதூ வேறு
    3::டயஸ்போறாக்களின் வயாக்கராக்களுக்காக சோணிகளை சிங்களவர்களுடன் மூட்டிவிடுகின்ற இரத்த வெறியன்
    புத்தர் உயிரோடு இருந்தால் தற்கொலை அளவுக்கு வருந்தி இருப்பார்

    ReplyDelete
  9. What happened pls send me the details

    ReplyDelete

Powered by Blogger.