Header Ads



றிசாத் செய்ய நல்ல காரியம், பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டு

-Vtm Imrath-

உயர்கல்வி அமைச்சுக்கும், அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று யூ.ஜி.சி கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது!

இந்நிகழ்வில் அமைச்சு சார்பாக உயர்கல்வி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த உபவேந்தர்கள் என உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மஜ்லிஸ்கள் சார்பாக அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த மாணவ பிரதிநிதிகள் மற்றும் மஜ்லிஸுக்கு பொறுப்பான முஸ்லிம் விரிவுரையாளர்கள் என்போர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில்;

முஸ்லிம் மஜ்லிஸ்களின் உத்தியோகபூர்வ பதிவுகள்!
முஸ்லிம் மாணவர்களுக்கான தொழுகையறை வசதிகள்!
வெள்ளிக்கிழமைகளில் ஜும்மாவுக்கான போதியளவு கால அவகாசம்! (12.00 - 2.00)
நோன்பு பெருநாளுக்கு முந்திய பிந்திய தினங்களில் பரீட்சைகள் தடைசெய்தல்! (பிறை கணக்கில் பெருநாள் நிச்சயிக்கப்படுவதால்)
முஸ்லிம் பெண் மாணவிகளின் கலாச்சார ரீதியான ஆடைகளுக்கான முமையான அங்கீகாரம்!
மொழி ரீதியான அனைத்து சலுகைகளையும் சிங்கள மொழி போன்று தமிழ்மொழிக்கும் வழங்குதல்!

போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் அமைச்சு தரப்பில் உடன்பாடு தெரிவிக்கப்பட்டதோடு இது தொடர்பான அமைச்சின் விசேட சுற்றுநிரூபங்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!

குறித்த சந்திப்பை அமைச்சுடன் ஏற்படுத்தி தந்தமையில் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு கட்சி பேதங்கள் தாண்டி நன்றிகளை தெரிவித்துக்கெள்ள வேண்டிய தேவையுள்ளது. அவர் இதற்கு முன்னர் பிரதம மந்தரியுடனும் இதுபோன்ற ஒரு சந்திப்பை ஏற்படுத்தி தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்!

இந்நிகழ்வின் வெற்றிக்கு முழுமையாக உழைத்த ஒவ்வொரு மஜ்லிஸ்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு எமது மனம்நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு,

இதுபோன்ற ஆரோக்கியமான அமர்வுகளை எதிர்காலங்களிலும் நடாத்த தெடர்ந்து வருகின்ற சகோதர சகோதரிகள் முழுமூச்சாக இயங்க வேண்டும் எனவும் தெரிவித்துகொள்கின்றோம்!


No comments

Powered by Blogger.