Header Ads



"முரண்படுவதை தவிர்த்து நடப்பதில், அவதானத்தை செலுத்த வேண்டும்"

இம்மாதத்தில் கொடுக்கப்படுகின்ற தர்மத்தை மிகவும் தாராளமாக கொடுத்து அல்லாஹ்விடத்தில் அதற்கான மகத்தான கூலியை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் புதன்கிழமை (29) கொழும்பு 6 வெள்ளவத்தையில் அமைந்துள்ள தி எக்சலன்சி ஹோட்டலில்; ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அங்கு அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

இந்த ரமழான் மாதத்தின் மூலம் நாங்கள் முக்கியமான மூன்று விடயங்கள் எம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. அவற்றில், முதலாவது நாம் தூய எண்ணத்துடன் மேற்கொள்ளும் நற்செயல்களின் மூலம் ஆன்மாவை தூய்மைப்படுத்துகின்றோம். இரண்டாவது சகிப்புத் தன்மையுடன் செயற்பட்டு எமது உடலை தூய்மைப்படுத்துகின்றோம். மூன்றாவது தாராளத் தன்மையுடன் வழங்கும் தர்மங்களின் மூலம் எமது செல்வத்தை தூய்மைப்படுத்துகின்றோம்.

இம்மாதத்தில் தேவையானோருக்கு வழங்கப்படும் தர்மத்தை மிகவும் தாராளமாக கொடுத்து அல்லாஹ்விடத்தில் அதற்கான மகத்தான கூலியை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். 

அதுபோலவே, சகிப்புத் தன்மையையும் நாம் பேண வேண்டியது அவசியமாகும். புனித ரமழான் மாதத்தில் பசியை மாத்திரம் சகித்துகொள்ளாமல், கோபத்தைக் கட்டுப்படுத்தி, மற்றவர்களோடு முரண்படுவதை இயன்றவரை தவிர்த்து நடப்பதில்; அவதானத்தை செலுத்த வேண்டும் என்றார்.

ஜெம்சாத் இக்பால்

1 comment:

  1. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka land their leaders will stage dramas by releasing "press statements" because all of them are well taken care of to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. The ungrateful Muslim politicians who benefited the most are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations (excluding www.jaffanamuslim.com) in Sri Lanka and their leaders HAVE stage dramas by releasing "press statements" because all of them have DECEIVED THE MUSLIM COMMUNITY for their personal benefits. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they HAVE ALL COVERED UP THE TRUTH ON BEHALF OF THE YAHAPALANA GOVERNMENT TILL NOW. “The Muslim Voice” WARNED the Muslim Community of this in the run-up to the Presidential Elections and the General Elections of 2015. The above article in Colombotelegraph.com has proved that “THE MUSLIM VOICE” was correct then and now – Alhamdulillah. So now all the TRUTH has been COVERED up and the Muslims have been told a "LONG STORY throughout. WHY HAS NOT THIS unscrupulous UNDEMOCRATICALLY SELF ACCLAIMED SLMC LEADER, NOT CALLED FOR A PRESIDENTIAL COMMISSION OR A HIGH LEVEL INQUIRY BY THE YAHAPALAN GOVERNMENT ON THE ALUTHGAMA and BERUWELA VIOLENCES/INCIDENCES UP TO NOW? It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.