Header Ads



முஹமட் கானும் கனவு, ஏன் நமது பௌத்த சமுகத்தில் ஒருவருக்காவது ஏற்படவில்லை..? அமில தேரர்

(அஷ்ரப் ஏ சமத்)

இந்த நாட்டின் பற்றின் காரணமாக தெற்காசியாவின் ஒரு சிறந்ததொரு புற்று நோய் வைத்தியசாலையாக மகரகம வைத்தியசாலை மாறல் வேண்டும் என்று இந்த  கதிஜா  பவுண்டேசன் தலைவா்  முஹமட் கானும்  கனவு ஏன்  நமது பௌத்த சமுகத்தில் யாராவது ஒருவருக்காவது இதுவரை ஏற்பட வில்லை.? என களனி பல்கலைக்கழக விரிவுரையாளா்  அமில தேரோ  அங்கு ஊடகவியலாளா் மத்தியில் கேள்வி எழுப்பினாா். ?

ஆனால்  முஹம்மதின்  நல்ல நோக்கம்  அவா் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது. அவா் தனது மகன் புற்று நோய்யால் பாதிக்கப்பட்டதற்காக இந்த முயற்சியை எடுக்க வில்லை. இந்த நாட்டில் வாழும் 70ஆயிரம் மக்கள் இந்த நிதிக்காக 100 ருபா 50 ருபாவாக சோ்த்துள்ளாா். இந்த திட்டத்தினை ஆரம்பித்தவருக்கே இந்த பெருமை போய்ச் சேர வேண்டும். இந்த நாட்டில் வாழும் மக்கள் மிக்க நல்லவா்கள் இந்த முஹமட்டை , ஒரு முஸ்லீம் என்ற உணா்வுடன் அவா்கள் இன ரீதியாக  பாா்க்கவில்லை. அவா் இந்த நாட்டில் உள்ள புற்றுநோயாளா்களுக்காக ஒரு சிறந்த நல்ல கைங்கரியத்தினை முன்னெடுத்துள்ளாா். அவா் ஒரு   பெட் இயந்திரமொன்றை  மகரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு  எடுத்த முயற்சியை மக்கள் ஏற்றுள்ளாா்கள்.  20கோடி தேவைப்பட்டது. ஆனால் மக்கள் இன்னும் 3 கோடி ருபாவை நேற்றும் இன்றும் வங்கியில் இட்டுள்ளாா்கள்.  இந்த திடடம் நல்ல நோக்கம் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொஹமட்டின் . எண்னக்கருவில்  நல்ல சிந்தனையில் இது  ஏற்பட்டுள்ளது. .

  இவ்வாறான நல்லமுயற்சிகளை  தர்கா நகரை  தாக்கியவா்கள் இன்னும்  ஏன்  உ ணரமுடியவில்லை. என களனி பல்கலைக்கழக விரிவுரையாளா்  அமில தேரோ  அங்கு ஊடகவியலாளா் மத்தியில் தெரிவித்தாா்.

நேற்று (15)ஆம் திகதி கதிஜா பவுண்டேசன் தலைவா் முஹம்மத் புற்று நோய் வைத்தியசாலைக்கு 20 கோடி ருபா செலவில் பெட் மெசின் இயந்திரமொன்றை கொள்முதல் செய்வதற்காக பொதுமக்களும் ஊடகங்களும் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவிக்கு முகமாக ஊடக மாநாடொன்றை கொழும்பு கலாதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தாா்.

இந் நிகழ்வில் மகரகம வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் வில்பட், மற்றும் இத்திட்டத்தில் பங்கெடுத்த குழு, ஊடகவியலாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்

 இந்த நாடு நல்ல நாடு நல்ல மக்கள் உலகில் சிறந்த நல்ல 4 மதங்கள் கொண்ட மக்கள் வாழ்கின்றாா்கள்.  இந்த நாட்டையும் மக்களையும் கெட்ட சிந்தனை கொண்டவா்களே மேலும் ஒரு சிறியா, ஈராக் போன்று ஆக்குவதற்கு முயற்சிக்கின்றனா். மீண்டும் இந்த நாட்டில் ஒரு யுத்தம் ஏற்பட்டால் இந்த நாட்டில் எவ்வளவு வளங்கள் சொத்துக்கள் அழியும், இயற்கை அனா்த்தம் ஏற்பட்ட உடன் இந்த நாட்டு மக்கள் உடன் வந்து உதவுவதை நாம் கண்கூடாக்க் கண்டோம்.இனம் மதம் பாா்க்க வில்லை . நல்ல மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றாா்கள். .

இந் நிகழ்வில் உரையாற்றிய கதிஜா பவுண்டேசன் தலைவா் முஹமத் - இற்றைக்கு 3 மாதங்களுக்கு முன் இத்திட்டத்தினை பி.எம். சி.எச் ல் வைத்து ஆரம்பித்தோம். அன்று ஒரு சிலரே வந்திருந்தனா். முதலில் 23 இலட்சம் மட்டுமே நிதி வந்திருந்தது. அப்போது நினைத்தேன் இத் திட்டம் நிறைவடைய நிதி சேகரிக்க 1 வருடமாவது தேவைப்படும் என நினைத்தேன, ஆனால் 3 மாத காலத்திற்குள் இன்றுடன் (15) 23 கோடி ருபா  வங்கிக் கணக்கில் சோ்ந்துள்ளது.  70ஆயிரம் மக்கள் இதில் தொடா்பு பற்றுள்ளனா். நாட்டில் உள்ள 260 இலங்கை வங்கிக் கிளைகளுக்கும் சென்று மக்கள் 100, 50 ருபாவாக கணக்கில் சோ்த்துள்ளனா்.  ஆனல்  இந்த வைத்தியசாலைக்கு கட்டிடமோ, அல்லது அழகு படுத்தலோ தேவையில்லை. மேலும் இங்கு எம். ஆர். “ஜ   லெப் போன்ற பல்வேறு மெசின்கள் இல்லாமல் உள்ளது. அரசாங்கம் ஒரு நோயாளிக்கு 2 இலட்சம்  ருபாவுக்கும் அதிகமான மருந்தை இலவசமாக வழங்குகின்றது.  இந்த நாட்டில் புற்றுநோய் நோயாளிகள் இலட்சத்திற்கும் அதிகாமனோா் உள்ளனா். ஏனைய நோய் வந்தால் ஒரு இரு மாதங்களுடன் முடிந்து விடும். ஆனால் இந்த நோய் ஏற்பட்டால் அந்த முழுக் குடும்பமும் வருடக் கணக்கில் மனமுடைந்து ஒரு நிம்மதியற்ற வாழ்க்கையில் விழுந்து விடுவாா்கள். 
இந்த திட்டத்திற்காக பேஸ்புக், வட்சப், என ஆரம்பித்து 97க்கும் அதிகமான கூட்டங்கள்  கடந்த 6மாதகலாத்திற்குள் நடாத்தியுள்ளேன். அல்ஹம்தில்லாஹ் நான் எடுத்த முயற்சி ஒரு குறுகிய 3 மாத காலத்திற்குள் வெற்றியளித்துள்ளது. எனது மகனே இவ்வாறானதொரு முயற்சியில் இறங்குபடி முதல் முதலில் எனக்கு ஆலோசனை வழங்கினாா். இந்த கூட்டத்திற்கு கூட அவரை அழைத்து வர முடியாமல் இந்த கொடிய நோயினால் வாடுகின்றாா். என முஹமத் மிகவும் கண்னீா் விட்டு அழுது இதற்காக உதவிய ஊடகங்களுக்கும், மக்களுக்கும்  வைத்தியா்களுக்கும் நன்றி தெரிவித்தாா்.

9 comments:

  1. மிகவும் உணர்புவமான, உணர்ச்சிகரமான நிகழ்ச்சி. ஒரு உன்னதமான முயற்சி, உளத்தூய்மையுடன், உண்மையான மனிதர் முஹம்மதின் சோர்வடையாத முயற்சியால் முஸ்லிம்கள் பெருமைப்படும்படி கதிஜா பெளண்டேசன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது மேலும் மேலும் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். முகமத்தின் மகனின் நோய் குணமடையவும், அவரது குடும்பத்துக்கு அமைதியும், சாந்தியும் சந்தோசமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  2. Masha Allah
    Really great job!
    The almighty Allah may guide and offer them All success.

    ReplyDelete
  3. இப்படியான நல்ல செயற்பாட்டுக்கு அல்லாஹ் mohamed brother க்கு உதவி செய்ய பிராத்திக்கின்றேன்.
    அத்துடன் இதற்கு உதவி செய்த அனைவருக்கும் ஹிதாயத்கொடுக்க வேண்டும் என அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன். ஆமீன்

    ReplyDelete
  4. இப்படியான நல்லவர்களும் இந்த நாட்டிலே இருக்கிறார்கள். யாஅல்லாஹ் நல்லவர்களுடன் எங்களையும் இணைத்துக்கொள் ரஹ்மானே .

    ReplyDelete
  5. இப்படியான நல்லவர்களும் இந்த நாட்டிலே இருக்கிறார்கள். யாஅல்லாஹ் நல்லவர்களுடன் எங்களையும் இணைத்துக்கொள் ரஹ்மானே .

    ReplyDelete
  6. Pannaththukky edukodukkadawelai thittam. Allah awarai porundikk kolsanaha. Ameen


    ReplyDelete
  7. Allah antha sakoathararukku nalla aaroakkiyaththai valankattum....

    ReplyDelete
  8. அல்லாஹ் அவருடைய நல்ல எண்ணங்களை போன்று அனைவர்க்கும் வழங்குவனாக

    ReplyDelete

Powered by Blogger.