Header Ads



வட் வரியில் திருத்தங்கள், மேற்கொள்ள தீர்மானம் - சிறிசேன

மதிப்பு கூட்டு வரி (வாட்) மீது சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று -29- கிராந்துருகொட்டே பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போது, அவர் இதனை தெரிவித்தார்.

அண்மையில் வாட் வரி அதிகரிக்கப்பட்டதன் காரணமாக மக்களின் வாழ்க்கை செலவு பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன இதனை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட வரி மீது சில திருத்தங்களை மேற்கொள்ள தான் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.

இது குறித்து தான் பிரதமருடன் வரும் திங்களன்று விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கூறிய ஜனாதிபதி சிறிசேன, அதன் பின்னர் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க கூடிய வகையில் சம்பந்தப்பட்ட வரி திருத்தங்களை மேட்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இதே வேளையில், வாட் வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாட்டின் சில முக்கிய நகரங்களில் கடை அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. What is happening here? The government is not handling properly. They are playing cat and mouse. You got to work out the impact of any increase in Tax prior to the introduction of such tax. Do not introduce first then change later. My3's management style is not that good. He is too soft. He has to go to management school.

    ReplyDelete

Powered by Blogger.