Header Ads



அவுஸ்திரேலியாவில் பள்ளிவாசலுக்கருகில் வெடிகுண்டுத் தாக்குதல்


அவுஸ்திரேலியாவில் மசூதிக்கு வெளியே நேற்றிரவு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெர்த்தின் Thornlie பகுதியில் உள்ள மசூதி ஒன்றிலேயே நேற்றிரவு -28- தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்ற போதிலும், மசூதியில் பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போதே இக்கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

அதுமட்டுமின்றி இஸ்லாமிய கல்லூரிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதமடைந்ததுடன் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரியின் சுவற்றில் “**** ISLAM” என எழுதியிருந்தாகவும், மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து Adel Ibrahim என்பவர் கூறுகையில், இது ஒரு குற்றச் செயலே, இதனை தனி நபரோ அல்லது ஒரு குழுவோ திட்டமிட்டு மேற்கொண்டுள்ளனர்.

பக்தர்கள் பிரார்த்தனைகளை நிறைவு செய்த பின்னரே நிகழ்ந்ததாகவும் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.