Header Ads



எனது பொறுமையையும், நிதானத்தையும் சிலர் பலவீனமாக கருதுகின்றனர் - மைத்திரி

தமது பொறுமையையும் நிதானத்தையும் சிலர் பலவீனமாக கருதி செயற்பட்டு வருகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டினதும் மக்களினதும் நலனை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளாh.

'எனது பொறுமையை சிலர் பலவீனமாக கருதிய போதிலும் எனது நிலைப்பாட்டை விட்டு விலகிக் கொள்ளப் போவதில்லை' என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை மதிக்கும் தரப்பினர் காலியில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்திற்கும், தொடர்ந்தும் அடிமைகளாக வாழ விரும்பும் தரப்பினர் கிருலப்பணை மே தினக் கூட்டத்திற்கும் செல்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிருலப்பணை கூட்டத்தில் பங்கேற்கும் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை சூழ்ச்சியின் அடிப்படையில் கொண்டு வருவதில் தமக்கு எந்த சந்தர்ப்பத்திலும் உடன்பாடு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டதாகவும் இதன் அடிப்படையில் அந்தக் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிகள் இரண்டுக்கும் இடையிலான இணக்கப்பாட்டில் விரிசல் ஏற்படாமல் செயற்படுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.