Header Ads



மஹிந்தவின் நாசகார ஆட்சியை மைத்திரி - ரணில் கைப்பற்றி மிச்சமிருந்ததை அழித்துவிட்டனர் - அனுரகுமார


மஹிந்தவின் நாசகார ஆட்சியை மைத்திரி ரணில் கூட்டணி கைப்பற்றி மிச்சமிருந்த கொஞ்ச ஜனநாயகத்தையும்  மக்களின் உரிமைகளையும் அழித்துவிட்டனர். இவர்கள் சீரழித்துள்ள மோசமான அரசியலை மாற்றியமைத்து புதிய கலாசாரத்தை நாட்டில் உருவாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

ஆட்சியை கைப்பற்றி மக்களின் உரிமைகளையும் , எதிர்கால சந்ததிக்கான நாட்டையும் மீட்டெடுக்க வேண்டுமாயின் இன மத மொழி பாகுபாடு இன்றி வடக்கு தெற்கு பேதமின்றி அனைவரும் மக்கள் விடுதலை முண்ணியுடன் கைகோர்த்து ஆட்சியை வீழ்தத வேண்டும். அதற்கு தலைமை தாங்க நாம் முன்வாந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

நாட்டின் மோசமான பொருளாதாரமும், ஆட்சி முறையும் நாட்டில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து பகுதி மக்களுக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு தேவை அனைத்து மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியும், தற்போதைய ஆட்சியும் மக்களையும் நாட்டையும் சீரழித்துள்ளது. ஆகவே நாம் மீண்டு எழவேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு மக்கள் மீண்டு எழ வேண்டும் என்றால் அனைவரும் இன மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும். 

இன்று வடக்கு மக்களுக்கு ஒரு பிரச்சினை தெற்கு மக்களுக்கு வேறு பிரச்சினை என்ற பாகுபாடில்லை. அனைவருக்கும் இன்று வேலைவாய்ப்பு இல்லாத, கல்வி உரிமை இலாத, பொருளாதார சலுகை இல்லாத, மனித உரிமைகள் மதிக்கப்படாத நிலைமை உள்ளது. ஆகவே இந்த அநீதிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டிய தேவை உள்ளது. 

வடக்கில் மக்கள் புறக்கணிப்பு.

இன்று வடக்கில் வாழும் மக்கள் அதிக கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். தமது வாழ்கையை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை உள்ளது. அவர்களின் காணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை, அந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, காணாமல்போன மக்கள் எங்கே என்ற கேள்வி இன்னும் உள்ளது. மீனவர்,விவசாயிகள் அனைவரும் வறுமையான நிலையில் வாழ்கின்றனர். ஆகவே அவர்களை மீட்டெடுத்து அனைவரும் ஒன்றாக வாழவேண்டிய கட்டாயாம் மக்களுக்கு உள்ளது. அவர்களை மீட்டு நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதா அல்லது அனைவரும்  அவர்களைப்போல உரிமைகளை இழந்து நிற்பதா என்ற கேள்வியை அனைத்து மக்களும் சிந்தித்துப்பாருங்கள். ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்த பரம்பரை மக்கள் நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி எதிர்கால சந்ததிக்கான சிறந்த நாட்டை கட்டியெழுப்புவது அனைவரதும் கடமையாகும்.  

No comments

Powered by Blogger.