Header Ads



மே தின கூட்டங்களில் மைத்திரி, ரணில், மகிந்த ஆற்றிய உரைகளின் தொகுப்பு

சேவையாளர்களாக நாட்டுக்கும் மக்களுக்கும் தௌிவான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்படவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலி சமனல விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற மேதின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடு தற்போது பொருளாதார ரீதியில் பின்நோக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இவ்வாறான சிக்கலான மற்றும் நெருக்கடியான சூழலில் முன்னோக்கி செல்ல அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள யோசனை குறித்து பிரச்சினைகளை எழுப்புவதை விட அவ்வாறான யோசனை வரக் காரணம் என்ன என்ற கேள்விக்கு, பதிலைத் தேட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டை நேசிப்பவர்களாக பொருளாதார, அரசியல், ஜனநாயக ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்ப தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

ஜாதி, மத, மொழி, இன ​பேதங்களை புறந்தள்ளி நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

2
ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பது அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் எனவும், அதற்கான பிரதிபலன்களை அனுபவிக்கும் நேரம் தற்போது உருவாகியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பொரளையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து பாராளுமன்றத்தை ஒரு அரசாங்கமாக மாற்ற எழுந்த சவால்களுக்கு எளிதான முறையில் முகம் கொடுக்க முடிந்ததாகவும், இதன்மூலம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடிந்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை நிறைவடையச் செய்து ஊழலை ஒழித்து நாட்டை நல்ல எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பயணம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே அந்தந்த கட்சிகளின் கொள்ளை மற்றும் கோட்பாடுகளை அடியொற்றி செயற்படுவதோடு, நாட்டின் பொதுப் பிரச்சினை தொடர்பிலும் ஒன்றிணைந்து செயறபடுமாறும், பிரச்சினைகளுக்கு இவற்றின் மூலம் மட்டுமே தீர்வு காண முடிவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் வெட் குண்டை பற்றவைத்துள்ளதாக, சில ஊடகங்களில் குற்றம்சாட்டப்பட்டதாக இங்கு தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, அத்தியவசிப் பொருட்களுக்கு வெட் வரியை விலக்களித்ததும் இந்த அரசாங்கம் என்பதை நினைவில் கொள்க என சுட்டிக்காட்டியுள்ளார்.

3
 ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் கைதியாக மாறியுள்ளதன் காரணமாக கட்சியின் அடையாளம் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிருலப்பனையில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எனது ஆட்சிக்காலத்தில் எமது கட்சியின் வரலாற்றில் வலுவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப முடிந்தமை குறித்து நான் பொறுமையடைகின்றேன்.
எமது அரசாங்கம் வலுவாக இருந்த நிலையில்,சூழ்ச்சிகரமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எனது அரசாங்கத்திற்கு எதிராக பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்ததன் மூலமே எனது அரசாங்கத்தை தோற்கடிக்க முடிந்தது.
உள்ளிருந்த கிடைத்த உதவிகள் இல்லாவிட்டால், நான் கட்டியெழுப்பிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் தோற்கடிக்க முடியாது.
எனது அரசாங்கம் தோற்டிக்கப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நாட்டின் தற்போதைய ஜனாதிபதி இருந்து வருகிறார்.
அமைச்சரவையின் பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பகிரப்பட்டுள்ளன.
அப்படியிருந்தும் தற்போதைய அரசாங்கத்தின் தீர்மானங்களை ஐக்கிய தேசியக் கட்சியே எடுத்து வருகிறது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
 

No comments

Powered by Blogger.