Header Ads



நசீர் அஹமட் விவகாரம், மனோ கணேசன் என்ன சொல்கிறார்..?

-Mano Ganesan-

கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹமட் விவகாரம் பற்றி கொஞ்சம் பார்ப்போம். அவரது வரலாறு ஒன்றும் நேர்கோட்டில் வந்த யோக்கிய வரலாறு இல்லை. (அப்படி பார்த்தால் இங்கே யார்…?) அவரது இந்த பதவியும், முஸ்லிம் காங்கிரசுக்குள் அவரது மறு (?) பிரவேசமும் அந்த கட்சியை பொறுத்தது. கடந்த காலங்களில் அவருக்கும் மாமனிதர் அஸ்ரப்புக்கும் இருந்த உறவும் அப்படித்தான். அதேபோல், இன்று அந்த கண்காணா காட்சியில் அவரது நடவடிக்கை சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. அங்கே அவருக்கு அவமானம், வரிசை மரபு (Protocol) மீறல் நிகழ்ந்திருந்தால் (நிகழ்ந்துள்ளது!), அதை அவர் இன்னமும் நாகரீகமாக கையாண்டு இருக்க வேண்டும்.

அழையா விருந்தாளியாக போனாரா, அங்கே போன பிறகு மேடைக்கு (அவர் சொல்வதைப்போல்) ‘ஒரு பொடியன்’ அழைக்கப்படுவதைப்போல் கைசுட்டி அழைக்கப்பட்டாரா? என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அவர் அந்த மாகாண முதலமைச்சர் என்பது முதல் தரவு (Fact). இந்த ஒரு தரவு முக்கியமானது. அடுத்தது, அந்த காட்சியில் கடற்படை அதிகாரி திரும்ப, திரும்ப சளைக்காமல் முதல்வரை ஏதோ சொல்லி தடுக்க முயன்று, அவரைப்பற்றி ஆளுனரிடம் புகாரிடுவது தெரிகிறது. இது இரண்டாம் தரவு,

இந்த தரவுகளை (Facts), நிறைய பேர் வேண்டுமென்றே கவனிக்காமல் உதாசீனப்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எனக்குள் இயல்பாக எழுகிறது. குறிப்பாக நிறைய அரசியல்வாதிகள், குறிப்பாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தொலைக்காட்சிகள் முன் தோன்றி, தங்கள் பகைமைகளை தீர்த்து கொள்ளவோ அல்லது பெரும்பான்மை நபர்களை திருப்திபடுத்தவோ முயல்வதாக தெரிகிறது. மட்டக்களப்பின் அந்த சர்ச்சைக்குரிய பெளத்த துறவி நேற்று முதல்வரை சந்தித்து பேசியவை வரம்பு மீறிய வார்த்தைகள். சிங்கள ஊடகர்கள், ஊடகங்கங்கள், அரசியல்வாதிகள், பெளத்த துறவிகள் போட்டு தாக்கும்போது நம்மவர்களும் இந்த நசீர் அஹமட்டை போட்டு தாக்குகிறார்கள். சிலர் அவரது இங்கிலிஷைகூட குறை சொல்கிறார்கள். அது என்ன ஆங்கிலம் பேசினால்தான் அறிவாளியா? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? எனக்குள் இந்த கேள்விகள் எழுகின்றன. இன்னமும் சில கேள்விகள்.

இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. ஒன்பது முதல்வர்கள் உள்ளார்கள். அதில் வடக்கில் உள்ளவர் தமிழராகவும், கிழக்கில் உள்ளவர் முஸ்லிமாகவும் உள்ளார்கள். இதில் முக்கியம் என்னவென்றால், இவர்கள் இருவரும் சிங்களவர்கள் இல்லை.

இதே மாதிரியான சம்பவம் வேறு ஒரு சிங்கள முதல்வர் இருக்கும் மாகாணத்தில் நடந்து இருந்தால், அதை எப்படி சிங்கள ஊடகர்கள், அரசியல்வாதிகள், பெளத்த துறவிகள் கையாண்டு இருப்பார்கள். உண்மையில் சொல்லப்போனால், முதல்வரை அழைக்காமல் விடுவது, அழைக்கப்படாமல் இவர் போனாலும் அவரை மேடையேற வேண்டாம் என்று சொல்வது, என்ற அளவுகளுக்கு இந்த பிரச்சினை போயிருக்குமா?

அங்கே இருந்த ஒஸ்டின் பெர்னாண்டோவும், அதுல் கேசாபும் என் நண்பர்கள். இவர்கள் இருவரிடமும், நான் வேலைப்பளு காரணமாக, இதுபற்றி இன்னமும் பேசவில்லை. ஆனால், பேசுவேன்.

ஒரு முதல்வர் அழைக்கப்படாமல் வந்துவிட்டால்கூட, அவரை மாலை போட்டு, வரவேற்று மேடை ஏற்றுவதில் என்னய்யா தயக்கம்? கூடவே மாகாண கல்வி அமைச்சரையும் முதல்வர் கூட்டி வந்தாரே? அவர் அந்த மாகாணத்தின் விவிஐபி (VVIP) இல்லையா? ஒருவேளை அந்த கடற்படை அதிகாரிக்கும், முதல்வருக்கும் முன்கூட்டிய விரோதம் இருக்கிறது என வைத்துக்கொண்டாலும்கூட, ஒரு பொது நிகழ்வில் முதல்வருக்கு உரிய பதவிநிலை மரியாதை வழங்கப்படக்கூடாதா? அந்த கடற்படை அதிகாரி பெரிய கெட்டிக்கார கில்லாடிதான். செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும், கடைசிவரை அவர் தனது முகத்தில் புன்னகையை தக்க வைத்துக்கொண்டே இருந்தார். ஆனால், இந்த முதல்வர் எள்ளும், கொள்ளும் வெடித்து, கையை காலை வீசி, பதட்டமடைந்து, முதிர்சியற்றவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். ஒரு முதல்வருக்கு இது அழகல்ல. இதுதான் இங்கே நடந்தது.

மற்றபடி கூட்டி கழித்து பார்த்தால், இந்த விஷயத்தில் நான் நசீர் அஹமட் பக்கம்.

(நசீருடன் நான் இருக்கும் படம் இல்லை. ஆகவே இன்னொரு முதல்வருடன் கூடிய படத்தை இங்கே போடுகிறேன்)

12 comments:

  1. Sinthenaiyalarhalukkahe sirenthe karuththu...

    ReplyDelete
  2. First paragraph is irrelevant to the subject................

    ReplyDelete
  3. Any human being can make mistakes. Obviously, CM lost his temper and had miscommunication with the Officer. Enemies and some monks took this as a very serious matter for their benefits.CM was in a way right as he was not given propper respect.However, he aimed at a wrong person. The way a monk reacted to him???. As this country belongs to Budhists only??? Shame on some so called Muslims can't even cover their butt.So shameless. Look at Mano. Stand up folks!

    ReplyDelete
  4. Finally, one man speaks for the CM...A man who had the guts and he s Mano Ganeshan.

    ReplyDelete
  5. Yes true.CM GO5 TEMPER AND AROGANT.HE BEHAVE NOT GOOD

    ReplyDelete
  6. Mr Mano Ganesan well said Sir, this is my second time I observe your comments on such situation both were perfect to the points. keep up your good work Sir.

    ReplyDelete
  7. ALLAMA ABDUL GAFFOOR, First paragraph is very very important of the subject ( as well as it is true) because you must know about the person's character and his political background before you read the subject. Another point is, Mano Ganesan want to make clear that he is not a supporter of Hafiz Naseer.

    ReplyDelete
  8. கௌரவ அமைச்சர் மனோகனேசன் அவர்களின் மேற்படி கருத்து என்னை ஆச்சரியமடையவைத்தது.அவருடைய சீரான பக்கபலமற்ற ஆணித்தரமான விமர்சனைத்தைப்பாராட்டுகின்றேன். அவரது கருத்துக்குத் தலைவணங்குகிறேன்.இத்தகைய நடுநிலைமைப் போக்கை குறிப்பாக முஸ்லிம் தலைவர்களும் பொதுவாக அனைவரும் பின்பற்றினால் நாட்டில் நாம் நல்லாட்சியைச் செயலி்ல் காணலாம். மிகவும் நன்றி மரியாதைக்குரிய அமைச்சர் அவர்களே!

    ReplyDelete
  9. ILMA
    Mano's first paragraph is not irrelevant, an introduction
    to his comment is necessary . He has taken into account
    all sides and decides to be on the side of the C M .
    Fair enough. We Muslims must learn self-criticism and
    we do it or not , there will be circumstances where
    much stronger criticisms will surface from outside
    that could hurt everyone . Testing times are ahead
    for us and we must keep that in mind . Mahinda,from
    the very beginning of his defeat , decided to fight
    back and doing all he can ,one step at a time until
    the next election . They are not in just politics ,
    they are in DIRTY politics. So ,Muslims and Tamils
    must act with courage and confidence but cautiously.

    ReplyDelete
  10. Mano Ganeshan's stand in this matter is appreciated. A Navy officer can't insult a Chief Minister under any circumstances. It is regretted that Opposition leader didn't oppose the Navy officer's act.

    ReplyDelete
  11. பண்பற்றவர்கள் மட்டுமே இவ்விடயத்தை அரசியல் பழிதீர்க்கும் மிதப்புக்கட்டைகளாக பயன்படுத்திக்கொள்வார்கள்!

    ReplyDelete

Powered by Blogger.