Header Ads



டொனால்ட் டிரம்பும், நரேந்திர மோடியும்..!!


டிரம்புக்கு பக்கவாத்தியம் வாசித்த மோடி : தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் இந்திய முஸ்லிம்கள் மோடியின் முகத்தில் கரியை பூசியது அமெரிக்கா.....!!

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தாம் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிப்பதாக கூறியுள்ளார்.

இதற்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியிடம் அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் சிறப்புப் பேட்டி கண்டது.

அந்த பேட்டியில் முஸ்லிம்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற டிரம்ப்பின் பேச்சு குறித்து மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மோடி...

தேர்தல் பிரசாரத்தில் முன்வைக்கப்படும் விவகாரங்கள் இவை.... இதற்கு ஒரு அரசு எப்படி பதில் அளிக்க முடியும் ? தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு விவகாரங்கள் முன்வைக்கப்படும். யார் என்ன சாப்பிடுகின்றனர் ? யார் என்ன குடிக்கின்றனர் ? என்றெல்லாம்கூட பேசுவார்கள். அதுபோன்ற அனைத்து விஷயங்களுக்கும் நான் எப்படி கருத்து கூற முடியும் ? என்று டொனால்ட் ட்ரம்புக்கு சிங் சாங் கொட்டி பக்கவாத்தியம் வாசித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய வெளியுறவுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் பேசும்போது....

இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்திய முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று அமெரிக்க அரசு இந்திய முஸ்லிம்களை பாராட்டி மோடியின் முகத்தில் கரியை பூசியுள்ளது.

இந்தியாவில் இஸ்லாமிய இயக்கமே தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்யும்போது அமெரிக்க அரசு மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் இந்திய முஸ்லிம்களை பாராட்ட தான் செய்வார்கள்.

No comments

Powered by Blogger.