Header Ads



காசா மீது இஸ்ரேல், போர் விமானங்கள் குண்டு போட்டன


இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதலடியாக காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டு போட்டுள்ளன.

இஸ்ரேலின் திறந்த வெளியில் விழுந்த ரொக்கெட் குண்டிகளால் எந்த சேதமும் ஏற்படவில்லை. இதனையடுத்து இஸ்ரேலிய விமானப்படை தெற்கு காசாவில் இரு ஹமாஸ் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளது.

காசாவில் இயங்கும் சிரிய சலபி ஜிஹாதி குழுவான அஜ்னத் பைத் அல் மக்திஸி இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் ஆளுகையில் இருக்கும் காசா மீது ஒன்பது ஏவுகணைகள் வீசப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து நான்கு தினங்கள் காசா மீது வான் தாக்குதல் நடத்தியதில் ஒரு பலஸ்தீன பெண் கொல்லப்பட்டதோடு ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

காசாவில் பதற்ற சூழல் நீடிப்பதாக மத்திய கிழக்கிற்கான ஐ.நா. தூதுவர் பாதுகாப்புச் சபையை புதனன்று எச்சரித்திருந்தார். 

1 comment:

Powered by Blogger.