Header Ads



இலங்கையின் இஸ்லாமிய கல்வியலும், கல்லூரிகளும்..!!

Zuhair Ali (MBA,PGD,GHAFOORI)

ஒரு சுதந்திரமான கல்வி மரபில், ஆசிரியர்கள் தமது பாடங்களுக்காகப் பல துறை அறிவையும் பயன்படுத்துவர். உளவியல், மெய்யியல், தகவல் தொழில்நுட்பம்,மொழியியல், உயிரியல், சமூகவியல் என்பன இவற்றுள் அடங்கும். 

வானியற்பியல், சட்டம், விலங்கியல்போன்ற சிறப்புத் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், குறுகிய அறிவுத்துறை சார்ந்த பாடங்களையே கற்பிப்பர். இவர்கள் பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவர். குறிப்பிட்ட சில திறன்களைக் கற்க விரும்புபவர்களுக்காகச் சிறப்புக் கல்விநெறிகளும் உண்டு.வானூர்தி ஓட்டுனர் பயிற்சி போன்றவை இத்தகைய கல்விநெறிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும். தவிர முறைசாராக் கல்வி வாய்ப்புக்களும் பல உள்ளன. இந்த வகையில் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு அருங்காட்சியகங்கள், நூல்நிலையங்கள்போன்றவை உதவுகின்றன. இதற்காகவே இத்தகைய நிறுவனங்கள் சமுதாயத்தின் மானியங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. தொழில் செய்யும்போது பெற்றுக் கொள்ளும் அனுபவக் கல்வி உட்பட, ஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் பெறும் பட்டறிவும் முறைசாராக் கல்வியுள் அடக்கம்.

இஸ்லாமிய கல்வியலும்  வெறுமனே குர்ஆன் ,ஹதீத் கலை கற்பதில் முடிவுறவில்லை அது உளவியல், வானவியல்,வைத்தியம், யூனானி,வியாபாரம், விஞ்ஞான இஸ்லாம் போன்ற எல்லா துறைகளையும் காலடி வைத்திருந்தது ஆனால் இன்று எல்லாம் நவீனம் என்ற போர்வைக்குள் சிக்கிக் கொண்டன. நேரம் எப்படி முக்கியம் என்பதை கல்வியுனூடாக முஹம்மது நபி அவர்கள் இவ்வாறு ‘தொட்டிலில் இருந்து சுடுகாடு வரை அறிவைத் தேடு’  இடம் பற்றி கல்வியில் எப்படி இருக்க வேண்டும் என கூறும்போது ‘சீன தேசம் சென்றாயினும் சீர் கல்வியை தேடிக்கொள்’ இரு பாலார் பற்றி கூறும்போது ‘கல்வி ஆண் பெண் இரு பாலார்மீதும் கடமை என்பதையும்’

இஸ்லாத்தில் கல்வி இரு வகைப் படும் ஒன்று இல்முல் அதியான் - இது மார்க்கம் தீன் சம்மந்தமான கல்வி மற்றொன்று இல்முல் அப்தான் -இது உடம்பு சார்ந்த கற்கை நெறி, அறிவையும் ஆய்வையும் மூல நோக்காகக் கொண்டு பல ஆய்வியல் அமைப்புக் கள் கலிபாக்களின் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டன. குறிப்பாக ‘தாருல் உலூம்’ (அறிவியல் கூடம்) தாருல் ஹிக்மா, பைதுல் ஹிக்மா என்பன போன்ற அறிவியல் சார்ந்த கல்வி நிலையங்கள் இவற்றில் மிக முக்கியமானவைகளாகும். இக்கல்வி நிறுவனங்கள், விவசாய, இரசாயனவியல், உயிரியல், புவிவியில், தர்க்கவியல், கணக்கி யல், மருத்துவம், தத்துவவியல், மிருக வியல் போன்ற “உலூமுல் அக்லிய்யா” என்ற அனைத்து விஞ்ஞானத்துறை பாடங்களில் இலவசக் கல்வியை தொடர்ந்து வழங்கி வந்தன.

கல்வி, உலகத்தை மட்டுமின்றி இதர அண்ட சராசரங்களையும் புணரமைப்பதற்குரிய அடித்தளமாகும். பரந்த உலகில் எந்த ஒரு அங்குலத்தில் எந்த ஒரு மாற்றம் நடைபெற வேண்டுமானாலும் கல்விதான் முதல் விதி. கல்வியின் ஆரம்பத்தை நாம் அறிந்தாலும் அதன் முடிவு எங்கே என்று யாருக்கும் தெரியாது. இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்பதற்குரிய முற்றுப்புள்ளி இங்கே இல்லை. சிறந்த, மிகச் சிறந்த மனிதர்களை உருவாக்குவது கல்விதான். ஆனால் எந்த மனிதராலும் கல்வியை உருவாக்க முடியாது. புதிய கல்வித் திட்டம் என்பதெல்லாம் ஏற்கனவே கற்றதின் மறு வடிவம் தானே தவிர கருவரையில் புதிதாக உற்பத்தியாவதல்ல. 

அரபுக் கல்லூரிகள் ஆறு அல்லது  ஏளு வருட கற்கை நெறியைக் கொண்ட ஒரு இஸ்லாமிய ஷரீஅ அடிப்படையிலான பாடத்திட்டமாகும் இன்று இது போன்ற கல்லூரிகள் எல்லா மூளை முடுக்கிலும் விரிந்து செறிந்து கிடக்கின்றன. பெயர் சொல்லி பிரபலமான ஒரு சில சமூக,விரிந்த சிந்தனை கொண்ட அரபுக் கல்லூரிகள்  இருக்கவே செய்தாலும் அவை வெவ்வேறு பாடத் திட்டங்களை கொண்டுள்ளமை எமக்கு பெரும் வருத்ததத்தையும்,இன்றைய உலமாக்கள் எதிர் கொல்லும் பிரச்சினைக்களைப் பார்த்தால் வேதனையே.எது எவ்வாறாக இருந்தாலும் வருடத்த்துக்கு வருடம் பல ஆயிரக்கணக்கான உலமாக்கள் பட்டம் பெற்று வெளியாகின்றனர் அது உள்ளமயில் மகிழ்ச்சியான  எம் இச் சிறிய தீவில் பாரிய பங்களிப்பை செய்யும் என்பதில் ஐய்யமுமில்லை.

அரபுக் கல்லூரியில் பயில்கின்ற காலங்களில் சொல்வார்கள் 'நீ இஸ்லாம் படிக்கின்றாய் உன்னிடம் இஸ்லாம் பற்றித்தான் இந்த சமூகம் கேள்வி  கேட்கும்' என்று ஆனாலும் அன்று ஒரு கோணத்தில் மத்திரம இருக்கவில்லை ஆங்கிலம்,சிங்களம்,தகவல் தொழில் நுட்பம் போன்ற அறிவுத்திறனை வளர்க்க வேண்டும் இந்த பிற்போக்கு  சிந்தனை கொண்ட சமூகத்தில் லெப்பை,பிற்போக்கு சிந்தனை வாதி, அடிப்படைவாதி,கொள்கைவாதி   என்ற நார்களை கழற்றி எரிய வேண்டும் என்ற அவாவுடன் இருந்தாலும்,மலரோடு சேர்ந்த நாறும் மனக்கும் என்பது போல் இன்னும் இந்த சமூகம் ஒற்றைக் கண்ணால் பார்க்கமளுமில்லை.

அரபு பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும் என்று சொல்லவில்லை (5)வருடங்களாக சுருக்கி ஒரு மாணவன் வெளியாகும்போது குறைந்த பச்சம் வெளி வாரி பட்டதரிக்கான பதிவு செய்து இருக்க வேண்டும் ,இன்று எத்தனையோ இந்திய பல்கலைக்கல்கங்கள் வெறும் க .பொ .சா பெறுபேறு உள்ளவர்கள் வீட்டில் இருந்தவாறே கற்கலாம் என்ற எளிய முறையை அறிமுகம் செய்திருக்கின்றன. பொருளாதார வளர்ச்சி,குடும்ப சுமை,நெருக்கடியான உலகம்,மன உளைச்சல் போன்ற இன்னோரன்ன தேவைப்பாடுகள் ஒரு சரா சரி மனிதனுக்கு மட்டுமல்ல எம்மைப் போன்ற சமூகத்தில் நானும் ஒரு நல்ல   மௌலவி என்று முன்னோட்டம் காட்டுவதட்குள் ஜீவிதம் மடுத்துவிடுகின்றன .

அல்லது இந்த 7 வருட கற்கை நெறி உலக தரம் வாய்ந்த கல்லூரிகளில் (FUIW) அல்லது தேசிய பயிலுனர் மட்ட (NAITA) இலங்கை தொழில் பயிற்ச்சி அதிகார சபை (VTA) பதிவு செய்யப் படல் வேண்டும் அது உயர் கல்வி மற்றும் உள்நாட்டு வெளி நாடுகளில் தொழில் பெற்றுக்கொடுக்கின்ற ஒரு தரம் கொண்ட சான்றிதல் வழங்க வேண்டும். ஆக நம் சமூக வளர்ச்சி வெறும் காசு,பணங்களால் மட்டுமல்ல கல்வியே! ஒரு ஆயுதம் கல்வி,பேனா,எழுத்துகளுக்கு இருக்கும் தோட்டக்கள் வேறு எதற்குமில்லை,நம் சமூகம் விருத்தி அடைய வேண்டுமாயின் துறைசார் கல்வி கற்க வேண்டும்

இஸ்லாத்தை உச்சநிலைக்கு கொண்டு வந்ததற்கு, இஸ்லாமும் கலிபாக்களும் முஸ்லிம் நாடுகளும் கல்விக்கும் ஆய்வியலுக்கும் கொடுத்த கெளரவமே காரணம் என நாம் கூறலாம். எப்போது கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாமிய உலகம் படிப்படியாக கைவிடத் தொடங்கியதோ அன்றிலிருந்தே முஸ்லிம் உலகின் அனைத்து துறைகளிலுமான பின்னேற்றம் ஆரம்பமாகிவிட்டதென பிரபல ஆய்வாளர் கலாநிதி உமர் சப்றா குறிப்பிடுகிறார். நாம் அன்று விளக்கு வெளிச்சத்தில் படித்தோம்,பென்சில் மூலம் எழுதினோம் என்ற பிற்போக்கு சிந்தைனை சித்தர்தங்களை களைந்து எரிந்து விட்டு புது யுகம் படைக்க எம் மூத்த உலமாக்கள் முன் வர வேண்டும்.

2 comments:


  1. Praise be to Allaah.


    With regard to the hadeeth mentioned, “Seek knowledge even if you have to go as far as China, for seeking knowledge is a duty on every Muslim,” Shaykh al-Albaani said in Da’eef al-Jaami’: “(It is) fabricated.”

    The proven hadeeth is that which was narrated by Ibn Maajah from the hadeeth of Anas ibn Maalik, who said: “The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: ‘Seeking knowledge is obligatory upon every Muslim.’” (220. Classed as saheeh by al-Albaani in Saheeh Sunan Ibn Maajah. What is meant by knowledge here is knowledge of sharee’ah (Islamic knowledge). Al-Thawri said: “It is the knowledge for which no person has any excuse for not knowing.”

    And Allaah knows best.

    ReplyDelete
  2. I think all Arabic colleges are in need of radical changes.. we will left back if do not do that.

    ReplyDelete

Powered by Blogger.