Header Ads



அவதானமக இருக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை


நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் நீர்நிலைகளை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானமக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக மழைபெய்யும் பிரதேசங்களில் கடுமையான காற்று வீசும் எனவும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டி, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மழையுடனான காலநிலை மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், நீர்நிலைகளின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் எனவும் அதனை அண்மித்து வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.