Header Ads



பாராளுமன்றத்தின் இன்று, மஹிந்த ஆற்றிய உரை..!

அனர்த்த நிலைமை சம்பந்தமாக எவர் மீதாவது குற்றம் சுமத்தி அரசியல் செய்வது பொருத்தமற்றது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்கள் காரணமாக பிள்ளைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று -25- நடைபெற்ற அனர்த்த நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேரழிவு நடந்து முடிந்துள்ளது. எவர் மீதாவது குற்றத்தை சுமத்தி அரசியல் செய்வது பொருத்தமற்றது என்பதே என நம்பிக்கை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க தேவையான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும்.

சுற்றாடலை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அனர்த்தங்களில் பிள்ளைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளின் பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் இல்லாமல் போயுள்ளன.

வீடுகளை இழந்தவர்களுக்கு மீண்டும் வீடுகளை பெற்றுக்கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அனர்த்த நிலைமையில், ஊடகங்கள் முன்வந்து செய்த சேவைகளை பாராட்ட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் எங்களால் வழங்கப்பட வேண்டிய உதவிகளை நாங்கள் பெற்றுக்கொடுப்போம் என்றார்.

No comments

Powered by Blogger.