Header Ads



பெருமளவு கலகத் தடுப்பு பொலிஸாரின், உதவியுடன் கைதுசெய்யப்பட்ட பிக்கு

பதுளை - வெலிமடை, நுகத்தலாவ, திவுரும்பொல விகாரையில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க போதி மரத்தை வெட்டி பலகைகள் ஆக்கியமை சம்பந்தமாக விகாரையின் விகாரதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விகாரதிபதியை வெலிமடை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருள் பெறுமதி மிக்க இந்த போதிமரம் இருந்த இடத்திலேயே, சீதை தான் தூய்மையான பெண் என்பதை காட்ட தீயில் இறங்கி சத்தியம் செய்ததாக புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளன.

விகாரதிபதி கைது செய்யப்படும் போது, அங்கு விகாரைக்கு பங்களிப்புச் செய்யும் சிலர் கூடியதால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

விகாரையில் கலகத் தடுப்பு பொலிஸாரும், மூன்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போதி மரத்தை வெட்டி பலகை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார்.

அத்துடன் விகாரையில் இருந்து மரம் வெட்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. இதன் விளக்கத்தை தொலை நகல் அல்லது மின்னச்சல் மூலம் நமது முன்னாள் அதிபருக்கு அனுப்பினால் நல்லது அவர்தான் புத்த மதத்தின் பாது காவலர் என்றும் பவுத்த மக்களுக்கு தலைவர் என்றும் விகாரை விகாரையாக ஏறி இறங்கி திரிகிறார்.பவுத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாதாடுபவர்கள் இதைப்பற்றி என்ன சொல்லப்போகிறார்கள்.சுருக்கமாக சொல்லப்போனால் கடவுளுக்கு ஒன்றும் தேவை இல்லை என்றால்தான் இந்தப்பிரச்சினையில் இருந்து விடுபட முடியும்.இல்லை என்றால் கடவுளின் பெயரால் களவாடும் இத்த்கிருடர்களால் மக்களுக்கு ஆபத்துத்தான்!

    ReplyDelete

Powered by Blogger.