April 30, 2016

கதாபி + பஷர் போல் துருக்கியை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லுகிறாரா எர்டொகன்..?

-லத்தீப் பாரூக்-
செழுமை மிக்க லிபியாவை முஅம்மர் கதாபி அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று கட்டாந்தரை ஆக்கியது போல், தன்னுடைய கொடூரம் மிக்க ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக செழிப்பான சிரியாவை அந்த நாட்டின் கசாப்புக் கடைக்காரன் என வர்ணிக்கப்படும் பஷர் அல் ஆஸாத் இரத்த ஆறாக மாற்றியது போல் வரலாற்றுப் புகழ் மிக்க துருக்கி தேசத்ழைதயும் அந்த நாட்டின் ஜனாதிபதி தய்யிப் எர்டொகன் அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றாரா? 
மக்களின் குரலை நசுக்குவதற்காக இன்று ஜனாதிபதி எர்டொகன் கடைப்பிடிக்கும்; கடும்போக்கு கொள்கைகள் எழுப்பியுள்ள பிரதான கேள்வி இதுதான். கடந்த சில நாற்களில் அந்த நாட்டின் ஊடகங்களை நசுக்கும் வகையில் அதிரடியான சில நடைமுறைகளை அவர் அறிமுகம் செய்துள்ளார். துருக்கியின் இஸ்லாமியப் போதகரும் கல்விமானுமான பதுல்லாஹ் குலென் தொடங்கிய குலென் இயக்கம் என மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளனர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்ககப்பட்டு வருகின்றன. கடந்த பல காலமாக இது நடந்து வந்தாலும் அண்மைய நாற்களில் இது மேலும் தீவிரமடைந்துள்ளது.
2016 ஏப்பிரல் 19 செவ்வாய்க்கிழமை அன்று நாடு தழுவிய நடவடிக்கையின் போது சுமார் நூறு பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது வீடுகளிலும் அலுவலகங்களிலும் இருந்தவர்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் போது அரசுக்கு எதிராக அமைதியீனத்தை தூண்ட முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்கள்.
ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகவும் துருக்கி கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இஸ்லாமிய சார்பு அரசு என கூறப்படும் ஆனால் சர்வாதிகாரப் போக்கு மேலோங்கி வரும் எர்டொகனின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் அழிவுக்கு இட்டுச் செல்பவை. லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் நிலைமைகளிலிருந்து அவர் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்குமான மக்களது குரல்கள் நசுக்கப்பட்டதால் அந்த நாடுகள் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டன.
2010 டிசம்பர் 18ல் டூனீஷியாவில் தொடங்கிய அரபு எழுச்சி பாரிய அளவிலான அரசியல் மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தியது. இதனால் உந்தப்பட்ட லிபிய மக்களும் சிறிய அளவு சுதந்திரம் வேண்டி அமைதியான ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர். அவர்கள் கதாபியின் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று எண்ணவில்லை. மக்களுக்கு பல்வேறு பொருளாதார நன்மைகளை வழங்கிய அந்த அடக்குமுறை ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அவர்கள் அமையவும் இல்லை.
ஆனால் கதாபி அந்த மக்கள் குரலை அடக்க திடசங்கற்பம் பூண்டார். அவரின் அடக்கு முறை நடவடிக்கை காரணமாகத் தான் அங்கு அரசுக்கு எதிரான ஆயத மோதல் தலைதூக்கியது. இப்படி ஒரு நிலைமைக்காக நீண்ட நாற்கள் காத்திருந்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா இஸ்ரேல் உட்பட யுத்த வெறிகொண்ட பல நாடுகள் நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தி புகுந்து விளையாடத் தொடங்கின. மக்களைக் காப்பதாகக் கூறிக் கொண்டு களமிறங்கிய அவர்கள் ஆபிரிக்காவின் செழுமை மிக்க ஒரு நாட்டடை இன்று எதுவுமே அற்ற கட்டாந்தரை ஆக்கிவிட்டனர். இன்று லிபியா சட்டம் ஒழுங்கு எதுவுமே அற்ற வெறும் கொலைகளமாகிலிட்டது. அங்கிருந்த 140 தொன் தங்கம் உட்பட எண்ணற்ற பல செல்வங்களை இஸ்ரேலும் ஏனைய யுத்த வெறியர்களும் சூறையாடிவிட்டனர்.
இந்தப் போராட்டத்தின் நடுவே பிரான்ஸின் அப்போதைய ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸி கதாபிக்கும் தனக்கும் இடையிலான சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களை மூடி மறைப்பதற்காக தனக்கு விசுவாசமான ஒரு உளவாளியை அனுப்பி கதாபியை பின் தொடரச் செய்து சரியான சந்தர்ப்பத்தில் அவரை கொன்று விட்டார்.
லிபியா போராட்டத்தின் ஆரம்பத்தில் அதனால் உந்தப்பட்ட அடக்குமுறைக்கும் கொடுமைக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருந்த சிரியா மக்களும் அமைதியான முறையில் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர். பஷர் அல் அஸாத்தின் மூர்க்கக் குணம் கொண்ட இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட தமது அன்புக்கு உரியவர்களுக்கு என்ன நடந்தது என்பது தான் அவர்கள் எழுப்பிய பிரதான கேள்வி.
அந்த மக்களின் நியாயமான குரல்களுக்கு செவி சாய்ப்பதற்கு பதிலாக பஷர் அல் அஸாத்தும் ஆள்கடத்தல் சித்திரவதை கொலை என மக்களுக்கு எதிராக மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டார். அவர் கட்டவிழ்து விட்ட காட்டுமிராண்டித் தனத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் துணைக்கு வந்தன. அப்போது மனித உரிமையின் காவலர்களாக கொக்கரிக்கும் அமெரிக்கா, பிரிட்டன், உட்பட பல நாடுகளும் நகரங்களும் கண்மூடி இவற்றை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன. சிரியாவில் போராடிய எதிராளிகளுக்கு சவூதி அரேபிய சர்வாதிகள் துணையாக நின்றனர்.
இன்று சிரியாவும் மக்கள் வாழ விரும்பாத ஒரு வெற்று பூமியாகிவிட்டது.
துருக்கியில் இன்று ஏற்பட்டுள்ள அமைதியீனத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி எர்டொகன் எடுத்து வரும் நடவடிக்கைகளும் இந்த நிலைமைகளுக்கு ஒத்ததாகவே உள்ளன. கதாபியும் அஸாத்தும் கடைபிடித்த தற்கொலை கொள்கைகளுக்கு ஒத்ததாகவே இவை காணப்படுகின்றன.
எர்டொகனின் நெருங்கிய உறவினர்களின் ஊழல்களை ஊடகங்கள் வெளிப்படுத்த தொடங்கியதும் அந்த கருத்துக்களுக்கு செவிசாய்க்க அவர் மறுத்துள்ளார். மாறாக ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் முடுக்கிவிட்டுள்ளார். சில ஊடக நிறுவனங்களை மூடிவிடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளமை அங்கு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் துருக்கியர்கள் மத்தியில் மட்டுமன்றி முழு உலகிலும் முஸ்லிம்கள் மத்தியில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. துருக்கியில் இஸ்லாத்தை அழித்தொழிக்க சங்கற்பம் பூண்டு அங்கு இஸ்லாத்துக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்த அந்த நாட்டின் தேசப்பிதா என வர்ணிக்கப்படும், ரோமானிய யூதராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படும் முஸ்தபா கமால் அதாதுர்க் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்ட கொடுங்கோல் ஆட்சி முறைக்கு முடிவு காணப்படலாம் என்பதே இந்த மகிழ்ச்சிக்கு காரணம்.
அண்மைக் காலத்தில் உலகில் இஸ்லாம் மீள் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. வரலாற்றுப் புகழ் மிக்க துருக்கி தேசம் மீது உலக முஸ்லிம்கள் கொண்டுள்ள ஆர்வம் காரணமாகவும் இஸ்லாத்தின் கடைசி ராஜ்ஜியமாக எஞ்சியிருந்த துருக்கி பேரரசின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவதற்காகவும் முஸ்லிம்கள் பலர் அங்கு வருகை தரவும் தொடங்கினர்.
அதேபோல் சிரியாவில் அழிவுகளை எதிர்நோக்கிய ஆயிரக்கணக்கான மக்களும் வேறு வழியின்றி துருக்கி நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். இதனால் துருக்கியின் அரசியல் நிலவரம் இரவோடு இரவாக மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது துருக்கி இந்தப் பிராந்தியத்தில் கொந்தளிப்பு மிக்க ஒரு தேசமாகவும் மாறிவிட்டது.
இவ்வாறான சிக்கலான ஒரு பின்னணியில் தான் ஜனாதிபதி எர்டொகன் குலென் இயக்கத்துக்கு சவால் விடுக்கத் தொடங்கியுள்ளார். கல்வி, தர்ம காரியங்கள் ஊடகப் பணி என பல்வேறு மனிதாபிமான சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்த இயக்கமே தற்போது அரசின் நெருக்குதலை எதிர்நோக்கியுள்ளது.
தமது குடும்பத்தினருக்கு எதிரான ஊழல்களை வெளியிட்டார்கள் என்பதற்காக ஊடகங்கள் மீது அவர் கை வைத்திருப்பது தற்கொலைக்கு சமமானதாகும். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா, பொஸ்னியா, கொசோவோ, சூடான், சோமாலியா என பல முஸ்லிம் நாடுகளை வரிசையாக வேட்டையாடி சீரழித்த யுத்த வெறிகொண்ட கழுகுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இஸ்ரேல் என்பன துருக்கியையும் துவம்சம் செய்யும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றன.
தற்போதைய நிலைமைகள் பற்றி குலென் நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் பகிரப்பட்ட விழுமியங்கள் கூட்டமைப்பின் தலைவருமான கலாநிதி லு.எல்ப் எஸ்லொங்கடன் கருத்து வெளியிடுகையில்: 
'எர்டொகனின் ஆட்சியை கவிழ்த்து அரசை கைப்பற்ற சதி செய்வதாக பதுல்லாஹ்வை பின்பற்றுகின்றவர்கள் மீதும் அவருக்கு அதரவாக செயற்படும் பதுல்லாஹ் பயங்கரவாத அமைப்;பு  (குநுவுழு) என அரசாங்கத்தால்  பெயரிடப்பட்டுள்ள சமாந்தர அரச கட்டமைப்பு (Pனுலு) ஆதரவாளர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக  தற்போது அஞ்ஞாதவாசம் இருந்து வரும் சமயப் போதகர் பதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
எர்டொகன் பதவிக்கு வந்த போது பதுல்லாஹ் அவரின் தீவிர ஆதரவாளராகவே இருந்தார். ஆனால் அதிகமாக ஊழல்கள் இடம்பெற்று 2013ல் அவை பற்றிய தகவல்கள் மற்றும் அரசின் சட்டபூர்வமற்ற செயற்பாடுகள், முறைகேடுகள் இயலாமை என்பன வெளிவரத் தொடங்கியதும் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின. அதனைத் தொடர்ந்து புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் மீதும் ஏனைய இரகசிய பொலிஸ் பிரிவு உயர் அதிகாரிகள் மீதும் இந்த ஊழல்களை வெளியிட்டதாகக் கூறி தற்போது வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சதி முயற்சியொன்றில் இணைந்து பணியாற்றியதாகக் கூறி குலென் மீதும் வழக்குத் தொடரப்பட்டு அவர் இல்லாமலேயே விசாரணைகள் நடத்தப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமான தொழிற்சார் நிபுணர்கள், வர்த்கர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என குலெனோடு இணைந்து பணியாற்றிய பலர் வழமையான நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் மீது குலென் கொண்டுள்ள ஆளுமையும் செல்வாக்கும் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இது ஒரு சர்ச்சைக்குரிய சமயப் பிரிவைப் போல் காட்டப்பட்டு வருகின்றது.
இதேவேளை குலென் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி எர்டொகனால்; பலிக்கடாக்கள் போல் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று தான் நம்புவதாக எஸ்லொங்கடன் கூறுகின்றார். இவற்றின் விளைவாக துருக்கியில் நீடிக்கும் துயரங்கள் துருக்கி சமூகத்தில் பாரிய அளவில் மனிதாபிமான நெருக்கடிக்கு வழியமைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் ஒட்டு மொத்தமாக அடிப்படை சுதந்திரத்தின் நிலை மிக மோசமான கட்டத்துக்கு சென்று கொண்டிருப்பதாகவே எஸ்லொங்கடன் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் வரலாற்றில் மிக முக்கியமான இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதி எர்டொகனுக்கு தேவைப்படுவது மக்களின் ஒருமித்த ஆதரவு. முன்னொரு போதும் இல்லாத பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் அந்த நாடு முகம் கொடுத்துள்ள நிலையில் மக்கள் ஓரணியில் அவர் பின்னால் திரண்டிருக்க வேண்டியதே மிகவும் அவசியமானதாகும்.
இன்றைய சூழ்நிலையில ஜனாதிபதி; ஒரு சிறு குழுவை கூட பகைத்துக் கொள்வது  இந்த நாட்டை அழிவைநோக்கி இட்டுச் செல்லும் தற்கொலை முயற்சியாகவே கருதப்படும். சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி முஸ்லிம் நாடான துருக்கியில் அழிவை ஏற்படுத்தி அதன் வளங்களைச் சூறையாடி அந்த நாட்டையும் வெற்று பூமியாக்க காத்திருக்கும் சக்திகளிடம் இருந்து துருக்கி தேசம் பாதுகாக்கப்பட வேண்டும்.

16 கருத்துரைகள்:

கட்டுரையார் யாருக்கோ சோரம் போயிருக்கிறார். கடந்த வாரம் சவூதியைப் பற்றி அபாண்டமான கருத்துக்களை எழுதி இருந்தார். இப்போது யூதர்களுக்கு துணை போகிறாரோ என்று சந்தேகத்துக்குரிய குலெனுக்கு ஆதரவாகவும் ஒரு தலை சிறந்த ஆட்சியாளரை விமர்சித்தும் இருக்கிறார்.
இவரை பற்றிய விழிப்புணர்வு சமூகத்துக்கு தேவை

Br.Latheef farook! We never read your articles,,,you are misguiding people by your politucal articles

Aகட்டுரையாளர் யஹுதிகளின் அடிவருடியான பதுளுள்ளாவிக்கு சப்போட் தேடுவதில் இருந்தே விளங்குது ........

துருக்கிய ஜனாதிபதி பல யூத சதிகளில் இருந்து தமது நாட்டை பாதுகாத்து இவ்வளவு தூரம் முன்னேற்றி இருக்கின்றார் .இந்த முன்னேற்றத்தை தடுப்பதற்கு பல சக்திகளும் முயற்சி எடுத்து வருகின்றன ,இவற்றை அவர் மிக கவனமாக எதிர்கொண்டு வருகின்றார் .

Yes.. you are correct.. who is this author?

கட்டுரையாளர் முதலில் பத்ஹுல்லா குலன் பற்றி அறிந்துகொள்வது முக்கியம். அமெரிக்காவை விட்டு வெளியேராமல் அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனக்கூறிக்கொண்டிருந்த பத்ஹுல்லா குலன் துருக்கி அரசாங்கம் இஸ்ரேலுக்கு எதிராக ஏதாவது செய்யும்போது மட்டும் அவற்றைக்கண்டிப்பதில் தீவிரம் காட்டினார். இதிலிருந்தே அவர் யாருடைய கைப்பொம்மை என்பது தெளிவாகிறது. லத்தீப் பாருக் என்ற ஊடகவியலாலருக்கு இது தெரியாமலிருக்காது.இவர் யாருடைய கூலியாள் என்று சந்தேகம் ஏற்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன்.

எனக்கு எண்டா Mr latheef ல கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது?

லத்தீப் பாரூக் ஒரு அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.... இஸ்ரேல் எதிர்ப்பாளர்... சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிர்ப்பாளர்.. சத்தாம் ஹுசைன் இருக்கும் வரை சத்தாம் எதிர்ப்பாளர்... அப்படியே ஹோஸ்னி முபாரக்,முஅம்மர் கடாபி,என்று மூக்கு நீண்டு இன்று இஸ்லாமிய அரசொன்றை தாபிப்பதற்கான அரசியல் அமைப்பு ஒன்றை நிறுவ தய்யிப் எர்டோகன் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் வேளையில் இவர் எழுதிக் கிழிப்பது ஒன்றும் சர்வதேச அரசியலை அல்ல CIA - ZIONIST - SHIA முக்கூட்டு வக்சின் ஏற்ற்ப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பதால்தான்.

Latheef Farook's views r deeply flawed ,baseless.Thayoob Erdagan is a rising star beacon of light among our so called Muslim rulers despotic tyrants .Long live Erdogan !

Reporters JUST wanted a message to keep them busy, regardless of whether the message is going to have GOOD or BAD effect on people.

THIS Man Latheef Farook has no exception to it. Reporters always think they are the people to correct the world.. BUT public knows well about biased and mental behaviour.

May Allah Bless All our Muslim Leaders around the world. Especially those who try their best to bring their country back into islamic way of life.

Thayoob Erdogan is one such islamic leader, Eventhough the move is slow, but it is study and step by step TURKY will be back to ISLAMIC way of life from the BAND of HIJAB at university in the past.

All readors should slame at this REPORTER Abdul Lateef.. He is working for somebody it seems.

I wish these type of reproters should shut up their mouth and throw their pen that brings destruction to ISLAM and Muslim Rulers.

May Allah GUIDE them,,, if not destroy them and protect Muslims from their ideology.

Rubbish article .Erdagan is a rising star in the current geo political reality of Muslim Umma .Neo con media try to smear his outstanding achievements.

Mr Lateef khan your article will not change any thing in this world, How ever it is BIG MISTAKE of Jaffna Muslims to give chance to author like Lateef khan,

தலைப்பை பார்த்த போதே ஒரு யோசனை வந்தது . LFK குறை நிரப்பும் ஒரு கட்டுரை எழுதி விட்டார் என்று .

தலைப்பை பார்த்த போதே ஒரு யோசனை வந்தது . LFK குறை நிரப்பும் ஒரு கட்டுரை எழுதி விட்டார் என்று .

நல்லவன் போன்று நடிக்கும் இவர்களின் அடுத்த முகம் கூடிய விரைவில் கப்பலில் ஏறும்.

Post a Comment