Header Ads



இத படிச்சா இன்னைக்கே, உடற்பயிற்சி செய்ய கிளம்பிடுவீங்க - டாக்டர் செந்தில்குமார்


அர்னால்டு மாதிரி உடம்ப ஏத்தணும், சிங்கம் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வைக்கணும்னு ஆசைப்படுபவர்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் எல்லோருக்கும் உடற்பயிற்சி அவசியமான ஒன்று.  உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?  உடற்பயிற்சி செய்வதால் ஒரு மிக முக்கியமான பலன் இருக்கிறது.  அது என்னவென்று தெரிந்தால் நீங்கள் இன்னைக்கே உடற் பயிற்சி செய்ய கிளம்பிடுவீங்க. 

உடற்பயிற்சி செய்வதால் என்ன கிடைக்கிறது?  உடலில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்கள் என்ன?  அழகான உடலமைப்பு என்பதைத் தாண்டி நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் என்ன ? 

பிசியோதெரபி மருத்துவர்  மற்றும் உடற்பயிற்சிக்கூடம் நடத்துபவர் என்கிற முறையில் சேலத்தை சேர்ந்த  டாக்டர் செந்தில்குமார் சொல்வது இங்கே... 

"உடற் பயிற்சி செய்வதால் நம் உடலில் மூன்று ஹார்மோன்கள் சுரக்கின்றன. உடற்பயிற்சியால் மட்டுமே சுரக்கக்கூடிய  அந்த ஹார்மோன்கள் நம் உடலுக்கு மிக முக்கியத்தேவை.

1. ஐரிசின் (irisin)

இதற்கு பெயரே எக்ஸைஸ் ஹார்மோன்.  உடற்பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் சுரக்கக்கூடிய  இந்த ஹார்மோன் ரத்த திசுக்கள், திட்டுக்களை உடல் முழுக்க பரப்பும் வேலையை செய்கிறது. உடலில் இருக்கிற கொழுப்புகளை ஒரே இடத்தில் தேங்கிவிடாமல், உடல்முழுக்க பரப்பும் வேலையை ஐரிசின் செய்கிறது. சுருக்கமாகச்  சொல்ல வேண்டுமானால், உடலில் எரிபொருள் சக்தியாக ஐரிசின் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ஹார்மோன், குரோமோசோமின்   வால் பகுதி வளர உதவி செய்கிறது. குரோமோசோமின் வால் பகுதி வளர்ந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வளரவில்லை என்றால் கேன்சர், ரத்த அழுத்தம், முதியவர்களுக்கு ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால் ஐரிசின் அவசியம்  தேவை. உடற்பயிற்சி மூலமே ஐரிசின் கிடைக்கும்.

2.பெப்டிட் ஒய் ஒய் (Peptide YY ).

இது வயிற்றில் சுரக்கக்கூடிய  ஹார்மோன். இதுவும் உடற்பயிற்சியால் மட்டுமே சுரக்கக்கூடிய ஹார்மோன்தான். நாம் உண்ணக்கூடிய உணவு போதும் என்ற மனநிறைவை ஏற்படுத்தக்கூடிய வேலை பெப்டிட்டுடையது. இந்த ஹார்மோன்  சுரக்க சுரக்க உணர்வுகள்  மூளைக்கு கடத்தப்பட்டு, நம்முடையை உணவுத் தேவையை தீர்மானிக்கிறது பெப்டிட். அதுமட்டுமல்லாது  பசியைத்  தூண்டும் பணியும் இதன் வசம் இருக்கிறது.

மூன்றாவது பாயிண்ட் முக்கியமானது மக்களே....

3. டெஸ்ட்டோ ஸ்டீரோன் (testosterone)

இது விதைப்பையில் உருவாகக்கூடிய ஹார்மோன். இப்போது நிறையபேர் ஆண்மைக்குறைவால் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். லேகியத்தையும், சித்த வைத்தியத்தையும் தேடி ஓடுகிறார்கள். பாலியல் உறவுக்கான குறைபாடு உள்ளவர்களாக இருப்பவர்கள், அதனால் ஏற்படும் மனக் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் உடற்பயிற்சியின்மைதான். ]

டெஸ்டோ ஸ்டீரோன் சரியான அளவில் சுரக்குமாயின்,  உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். நீண்ட நேர தாம்பத்தியத்திற்கு டெஸ்ட்டோ ஸ்டீரோன் கியாரண்ட்டி  தரும். இந்த  டெஸ்ட்டோ ஸ்டீரோன் பெண்களுக்கும் தேவை. உடற்பயிற்சியால் மட்டுமே இந்த ஹார்மோனை சுரக்கச்செய்ய முடியும்." 

ம்ம் அப்புறம் என்ன ஜூட்...! 

1 comment:

Powered by Blogger.