Header Ads



நமது உலமாக்கள், ஏன் மத்திய கிழக்கில் தஞ்சமடைகிறார்கள்..?

-Safwan Basheer-

வழமையாக தேனீர் குடிப்பதற்கென்றே செல்லும் ஹோட்டல் அது. ஆனால் இன்று அந்தக் கடையில் தேனீர் வழமையான தரத்தில் இருக்கவில்லை.

''பிஸ்னஸ் கொஞ்சம் கூடினதும் டீ ர கொலிடிய  கொறச்சிடாங்க'' போல் தெரிகிறது என்று நண்பனிடம் சொன்னேன்.

அப்போது நண்பன் சொன்னான் அந்தக்கடையில் ஒரு இலங்கை மெளலவிதான் வழமையாக டீ ஊத்துவது இன்று அவர் இருக்கவில்லை. அதான் டீ இப்படி  இருக்கிறது என்றான்.

ஒரு ரியால் பெறுமதியான ஒரு சாதரண தேனீரின் தரம் குறித்ததுதான் இந்தக் கதையாடல் ஆனால் ''இலங்கை மெளலவி'' ''நன்றாக டீ ஊத்துவார்'' என்ற வசனம் எனக்கு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தது.

உலகில் ஹலாலான எந்தத் தொழிலும் தரம் குறைந்ததில்லை. ஆனால் உலமாக்களிடம் சமூகம் நிறைய எதிர்பார்புகளுடன் இருக்கின்றது. ஆனால் அவர்கள் எங்கோ ஒரு மூலையில் டீ ஊத்துவதற்கும் மேசை துடைப்பதற்கும் இந்த சமூகமும் மிக முக்கிய காரணம் என்பதை ஏற்றுதான் ஆகவேண்டும்.

இலங்கையைப் பொருத்தவரை மத்ரஸாக்கள்,சமூகம், மாணவர்கள் இந்த மூன்று தரப்பிலும் மாற்றங்கள்  நிகழவேண்டும். எமது மத்ரஸாக்கள் ''அவசரமாக தராவிஹ் தொழிவிப்பதற்கான மனப்பாட மெஷின்களை'' உருவாக்காமல் நவீன உலகின் சவால்கள், மார்க்கரீதியான பிரச்சினைகள்,உலகின் தொழில்ச் சந்தை என்று எல்லா விடயங்களையும் கையாளக்கூடிய ஆளுமைகளை உருவாக்க வேண்டும்.

அதேபோல் நமது உலமாக்கள் ஏன் மத்திய கிழக்கில் தஞ்சமடைகிறார்கள் என்ற கேள்விக்கு சமூகம் பதில் தேடவேண்டும். அதில் பிரதனமானது வருமானம். ஒரு மெளலவி அவரது கல்வி சார்ந்த ஒரு தொழிலை இலங்கையில் அவர் தேர்ந்தெடுத்தால் அநேகமாக அது அவரது வாழ்வாதரத்துக்கு போதுமான வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதில்லை.

உதாரணமாக பள்ளிகளில் கதீபாக, மத்ரஸாக்களில்  உஸ்தாதாக கடமையாற்றுவது. இப்படியான சமூகப் பொருப்புக்களுக்கு தகுந்த வெகுமானத்தை வழங்க எமது சமூகம் கஞ்சத்தனம் காட்டியே வருகின்றது. மக்களிடம் வசூலிக்கும் பணத்தைக் கூட பள்ளியில் வருடக்கணக்கில் கஷ்டப்படும் மெளலவிக்கு, முஅத்தீனுக்கு திருப்திகரமாக வழங்க பஞ்சம் பாடும் நமது பள்ளி நிர்வாகங்கள், அவற்றில் மிச்சம் பிடிக்கும் பணத்தை  வைத்து சமூகத்துக்காக ஒரு ஆணியும் புடுங்குவதுமில்லை.

எனவே இந்தவருமானப் பிரச்சினையால் அதிகமான மெளலவிகள் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. இலங்கையில் இருக்கும் அதிகமான மத்ரசாக்கள்  தனிமனிதர்கள், அல்லது நிருவனங்களின நிதி  உதவியுடனேயே இயங்குகின்றன.அந்த நிதி முழுக்க முழுக்க சமூகத்துக்கு சொந்தமானது என்பதை அவற்றின் மூலம் பயனடைபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே இப்படியான மத்ரஸாக்களில் கற்றவர்களும் குடும்பம், தொழில் என்று சமூகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்க்கையில் செட்ல் ஆகிவிடுவதால் மார்க்கம் சம்பந்தமான வழிகாட்டல்கள் ,கடமைகள்,பிரச்சினைகள் போன்றவற்றை யார் கையாள்வது என்ற பிரச்சினை சமூகத்தில் நிலவுகிறது.

ஆக இந்த நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளும்  வினைத்திறன்மிக்க உலமாக்களை எமது மத்ரசாக்கள் உருவாக்க வேண்டும். அவர்களது கல்விக்கும் தியாகத்துக்கும் தகுந்த வெகுமானத்தை வழங்குவதற்கு அவர்களை நிர்வகிப்பவர்கள் முன்வரவேண்டும்.

அதேபோல் ''ஓதி முடிந்துவிட்டது இனி வாழ்க்கையில் செட்ல் ஆகிவிட்டால் சரி'' என்ற சடவாத மனநிலையைவிட்டு விட்டு நமது உலமாக்களும் தமக்கான சமூகப் பொருப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

3 comments:

  1. Well done ...good article but one million worth question is how to deal with it???
    Who is planing to reform Arabic college ??
    Who is going tie the bell on cats neck??
    Who is ready to help graduates of Arabic colleges ???

    ReplyDelete
  2. most of Madras in srilanka nowadays have been established in each and every village like a mushroom just for personal reasons to lode money from Arab countries and for the movements without any proper study and the result is moulavis without suitable jobs.

    ReplyDelete
  3. கட்டுரை நன்றாக இருக்கிறதுதான். ஆனால் நடைமுறைப்படுத்த முடியுமா அதை செய்வதற்கு மூத்த உலமாக்கள் விடுவார்களா?உலமாக்களை விடயம் சம்மந்தமாக ஆரம்பத்தில் இருந்தே என்ன செய்ய வேண்டும் என்ற பொருட்பட நானும் இந்த jaffnamuslim யில் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன் அரபி மதரசாவில் ஓதினால் பள்ளியில்தான் இருக்க வேண்டும், உலமா சபை கீறிய கோட்டுக்கு அப்பால் செல்லக்கூடாது என்ற எழுதப்படாத சட்டத்தால் தான் இன்று பெருவாரியான உலமாக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கையேந்த வேண்டிய அவல நிலைக்கு தள்ள வேண்டிய கட்டாயத்துக்கு வந்துள்ளது. அரபியும் தமிழும் ஆங்கிலமும் இன்னும் பல மொழிகளும் கல்விதான் அதில் கொஞ்சம் கூடுதலாக மார்க்கம் சொல்லும் கட்டளைப்படி வாழ மதரசாக்களில் படித்துக்கொல்கிறோம் இத ஒரு பக்கம் வைத்துக்கொண்டு நான் மௌலவி நான் இந்த குறிப்பிட்ட வேலை மட்டும்தான் செய்வேன் என்று வாதாடுவது மத்திய கிழக்கு அரபு நாடு அது எங்களுக்குரிய நாடு என்றெல்லாம் வாதிடும் நம் ஆலிம்கள் இங்கு வந்து பார்த்தால் புரியும் வந்தவர்களுக்கு புரிந்து இருக்கும்.இந்த மத்திய கிழக்கு நாட்டில் வாளும் பல நாட்டு மக்களில் ஆலிம்களாக உள்ளவர்கள் QS,QAQS,SURVEYOR,ENGINEERS,ACCOUNTANT,ADMIN OFFICER,PRO,DRIVERS,OPERATOR,MECHANIC போன்ற இன்னும் பல வேலைகளை செய்து நல்ல முன்னேற்ற கரமான வாழ்க்கையை அமைத்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் இலங்கை உலமாக்களை எடுத்துக்கொண்டால் (ஒரு சிலரை தவிர)ஓதி முடித்தாள் பள்ளிதான் வேண்டும் அல்லது எதோ ஒரு மதரசாவில் ஓதிக்கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை. காரணம், நம்மிடம் இருக்கும் இஸ்லாமிய பற்றுகள் இல்லாமல் போய் விடும் என்ற பயம்.இதில் வேடிக்கை என்ன வென்றால் ஒரு சிலர் நினைத்துக்கொண்டார்கள் ஜூப்பாவைத்தவிற வேறு உடை கலிசன் டி சேர்ட் வெயிலுக்கு போடக்கூடிய CAPE தொப்பி போட்டால் மார்க்கத்தை விட்டு விலகி விட்டது போன்ற உணர்வு இதன் காரணமாக சிலர் தொப்பி கலட்ட முடியாத ஜூப்பா கலட்ட முடியாத டி சேர்ட் போட கூடாத கட்டக்கை சேர்ட் போடக்கூடாதா தொழிலாக தேர்ந்தடுக்க வேண்டும் அப்படியன்றால் என்ன தொழில் பள்ளியும் மதரசாவும் தான் கிடைக்கும் ஹலாலான எந்த உடையாக இருந்தாலும் சரி அணிந்துவிட்டு ஹலாலான தோலினை செய்ய வேண்டுமே தவிர ஊரில் உள்ள பள்ளித்தலைவ்ருக்கும் ஹாஜிகளுக்கும் இன்னும் பலருக்கும் பயந்து வாழ முடியாது எங்கிருந்தாலும் தக்வாவுடன் இருந்து ஹலாலான தொழிலையும் அதற்குரிய கல்விகளையும் பயிட்சிகளையும் எடுக்க முயற்சிக்க வேண்டும்.நாம் படித்தது நம் அறிவு வளர்ச்சி அது எப்போதும் பிரயோசனம் கொடுக்கும் விடா முயற்சியே வெற்றிக்கு காரணம்.சாதாரணமாக குறைந்தது COMPUTER DIPLOMA ஆரம்பமாக இருக்கக்கூடிய DATA ENTRYபோன்ற வேலைகளையாவது செய்வதற்கான பயிட்சியாவது எடுத்துக்கொண்டால் சாதாரண ஒரு தொளிலையாவது தேடிக்கொள்ள வசதியாக இருக்கும். இல்லைஎன்றால் சாதாரண ஒருவரைப்போன்று ஒரு DRIVER அல்லது HELPER OFFICE BOY போன்ற வேலைகளைக்கூட தேடி எடுப்பது கஷ்டமாக உள்ளது.இதனால் 7,8 வருடம் ஓதியது காலம் வீனாக போய்விட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.