Header Ads



இந்து கடவுள் விஷ்ணுவுக்கு, பெண் குழுந்தைகளை திருமணம் செய்துவைக்கும் பெற்றோர்


நேபாளத்தில் பெண் குழந்தைகளுக்கு இந்து கடவுள் விஷ்ணுவுடன் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நடத்தப்படுகிறது.

காத்மண்டுவைச் சேர்ந்த நேவார் சமூகத்தினர், வயதுக்கு வராத பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு இந்த திருமணத்தை செய்து வைக்கின்றனர்.

இந்து மதம் மற்றும் புத்த மதம் ஆகிய இரண்டிலும் உள்ள சடங்குகளை இணைத்து செய்யும் இந்த சமூகத்தினர், இந்த திருமண விழாவை 2 நாட்கள் நடத்துகின்றனர்.

அதாவது, இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளை அழிவே இல்லாத விஷ்ணுவுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால், அந்த பெண் குழந்தைகள் காலம் முழுவதும் விதவையாக மாட்டார்கள் என்ற நம்பிக்கை அந்த சமூக மக்களிடம் உள்ளது.

பெல் பழம் எனப்படும் பழத்தை அந்த பெண் குழந்தைகள் ஒரு கையில் வைத்துக் கொண்டு, மறு கையால் விஷ்ணு சிலையை தொடுவதன் மூலம், திருமணம் நடப்பதாக கருதப்படுகிறது.

இதையடுத்து திருமண விழாவை போலவே விருந்தினர்களுக்கு உணவளித்து மகிழ்கின்றனர் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள்.

காலம் காலமாக முன்னோர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றிவருவதால் நாங்களும் இதனை தவறாமல் செய்து வருகிறோம் என பெண் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

2 comments:

  1. 1:29 وَمَنْ يَّقُلْ مِنْهُمْ اِنِّىْۤ اِلٰـهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِيْهِ جَهَـنَّمَ‌ؕ كَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ‏ 21:29. இன்னும், அவர்களில் எவரேனும் “அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்” என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு - நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் - இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.

    ReplyDelete
  2. 1:29 وَمَنْ يَّقُلْ مِنْهُمْ اِنِّىْۤ اِلٰـهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِيْهِ جَهَـنَّمَ‌ؕ كَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ‏ 21:29. இன்னும், அவர்களில் எவரேனும் “அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்” என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு - நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் - இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.