Header Ads



22 மாதங்களில் 4,144 பேரை படுகொலை செய்த IS காட்டுமிராண்டிகள்


ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4000 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 22 மாதங்களில் 4,144 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தலையை வெட்டுதல், துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது, கல்லால் அடித்துக் கொல்வது போன்ற கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும், இதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 2,230 பேர் பொதுமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சன்னி மற்றும் குர்திஷ் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பொது மக்களை தவிர சிரிய அரசு படைகளை சேர்ந்தவர்கள், கிளர்ச்சி படையை சேர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள், மது கடத்தலில் ஈடுப்பட்டவர்கள், மதத்திற்கு எதிராக பேசியவர்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளார்கள். 

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூரங்களை தடுக்க ஐ.நா. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.