April 30, 2016

காதுக்குள் குடித்தனம், நடத்தும் எறும்புகள்

அகமதாபாத்தில் 12 வயது சிறுமியின் காதுக்குள் 15 எறும்புகள் உயிருடன் இருந்திருக்கின்றன. அந்தச் சிறுமிக்கு எந்த வலியும் தெரியவில்லையாம். சில நேரங்களில் குறுகுறு உணர்வு மட்டும் காதுக்குள் இருந்ததாம். அந்த எறும்புகளும் சிறுமியின் காதுக்குள் எந்த வம்பும் பண்ணாமல் சமர்த்தாக இருந்திருக்கின்றன. ‘எனது மருத்துவ அனுபவத்தில் இது போன்ற பிரச்னையை கண்டதில்லை’ என சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறியிருக்கிறார். சிறிய ஈ அல்லது கொசு காதுக்குள் நுழைந்தாலே பெரியவர்களே படாதபாடு படுவார்கள். 

இந்தச் சிறுமி 15 எறும்புகளை காதுக்குள் வைத்துக் கொண்டு எப்படி நிம்மதியாக இருந்திருக்க முடியும்? அதற்கான  சாத்தியங்களையும், தனது அனுபவத்தில் இப்படி சந்தித்த வினோத அனுபவங்களையும், காதுக்குள் எறும்போ அல்லது ஈயோ நுழைந்துவிட்டால் செய்ய வேண்டியவை பற்றியும் விளக்குகிறார் காது மூக்கு தொண்டை நிபுணர் குமரேசன்...

வட இந்தியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அது ஆங்கில மீடியாக்களின் மிகப்பெரிய கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதை விட பெரிய சம்பவங்கள் எல்லாம் நமது தமிழ்நாட்டில் நடந்துள்ளன.  ஒருவர் காதுக்குள் ஈ முட்டைகள் இட்டு சென்றுவிட்டது. முட்டைகள் லார்வா பூச்சிகளாக மாறி 20 முதல் 25 பூச்சிகள் காதுக்குள் இருந்தன. அவற்றை நான்தான் சுத்தம் செய்து எடுத்தேன். அந்த நபர் 20 பூச்சிகள் உள்ளே இருந்தது தெரியாமல் கடைசிவரை சுகமாகத்தான் இருந்தார். சிலரின் காதுக்குள் எறும்புகள், பூச்சிகள் போய் உயிர் வாழும் அளவுக்கு கொஞ்சம் தாராளமாக இருக்கும். 

காதை அடிக்கடி குடைந்தாலோ அல்லது காதுக்குள் தண்ணீர் விட்டாலோ மட்டும்தான் அவை கடிக்க ஆரம்பிக்கும். மற்றபடி பிரச்னைகள் கொடுக்காது. சுத்தமில்லாத வாழிட சூழ்நிலையும், கண்ட இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதும் இதற்கு முக்கிய காரணம். ஒரு குழந்தை மோதிரத்தை விழுங்கி விட்டது.  சொன்னால் பெற்றோர் அடிப்பார்களோ என்ற பயத்தால் மறைத்திருக்கிறது. அடிக்கடி இருமல் வருகிறது என்று குழந்தையை அழைத்து வந்தார்கள். எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் தொண்டையில் ஒரு பகுதியில் மோதிரம் சிக்கியிருந்தது. வெளியே எடுத்தேன்.  

7 வருடங்கள் அந்த குழந்தையின் தொண்டையில் இருந்த மோதிரம் எந்த ஒரு பெரிய விளைவையும் ஏற்படுத்தவில்லை. 
பல ஆணிகளை முழுங்கியவர் பிழைத்துவிடுவார். ஒரு குண்டூசி உள்ளே போனவர் இறந்துவிடுவார். இது போன்ற வினோதமான நிகழ்ச்சிகள் நமது நாட்டில் மிக சகஜமானவை. அதனால்தான் குழந்தைகளை கண்ட இடத்தில் விளையாடவோ, சாப்பிடவோ விடாமல் கண்காணிப்பது அவசியம். சிலர் படுக்கையறையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். 

இது தவறான பழக்கம். இனிப்புகளை சாப்பிட்டால் வாய், கை, மூக்கு இவற்றை சுத்தமாக கழுவிக் கொள்வது அவசியம். அப்படிச் செய்யாவிட்டால்  இனிப்பு வாசனைக்கு எறும்புகள் தேடி வரும். அதற்கு பிடித்த இடமான காதுகளுக்குள் போய் செட்டிலாகிவிடும். காதுக்குள் எறும்பு போனால் தண்ணீரை ஊற்றுவார்கள். அப்படி ஊற்றினால் எறும்புகள் எளிதில் சாகாது. தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உயிர்வாழ ஆரம்பித்துவிடும். வெளியேவும் வராது. 

சில துளிகள் எண்ணெய் ஊற்றினால் இறந்து வெளியே வந்துவிடும். எண்ணெயில் எறும்புகளால் உயிர்வாழ முடியாது. சிலர் காதுகளை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். இது சரியான பழக்கம் கிடையாது. காதுகளின் பாதுகாப்பு அரணான இயற்கையான மெழுகுச் சுரப்பை அடிக்கடி சுத்தம் செய்வது தடை செய்துவிடும். மெழுகுச் சுரப்பு சரியாக இருந்தால்  எறும்பு, ஈக்கள் அந்த வாசனைக்கு காதுகளுக்குள் செல்லாது. 

காதுகளில் ஏதாவது குறுகுறுப்பு, வலி, ரத்தக்கசிவு வந்தாலோ, காது மற்றும் மூக்கில் கெட்ட வாடையை உணர்ந்தாலோ உடனடியாக காது மூக்கு தொண்டை நிபுணரை பார்த்து பரிசோதனை செய்துவிடுவது நல்லது. சிலருக்கு காதுகளில் வீக்கம் கூட ஏற்படும். எங்களிடம் அவர்கள் வரும் போது எண்டோஸ்கோப் வழியாக காதுகளை பரிசோதனை செய்து உள்ளே ஈ, எறும்பு இருந்தால் எடுத்துவிடுவோம். இன்னும் சிலருக்கு காதில், மூக்கில் வெள்ளையாக சிறு பூக்கள் மாதிரி கொட்டும். கெட்ட வாடை அடிக்கும். இந்த அறிகுறிகள் வந்தால் மூக்கில், காதில் பூஞ்சை தாக்குதல் இருக்கிறது என்று அர்த்தம். பருத்தி தொழிற்சாலைகள் அதிகமுள்ள வாழ்விடங்களில் ஏற்படும் மாசுக்கேடால் இவ்வித பூஞ்சை தாக்குதல் அதிகமாக இருக்கும். இதையும் எளிதாக சுத்தப்படுத்தி குணப்படுத்திவிடலாம்.’’

சியோனிஸத்தை விட, ஷியாயிஸம் ஆபத்தானது

-Khanbaqavi-

இன்றைய மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளைப் பற்றி எழுதுவதென்றாலே மனம் பதைக்கிறது. பேனா மறுக்கிறது. சிந்தனை தடைபடுகிறது. அந்த அளவிற்கு அங்கே ஓயாத மரண ஓலங்கள். பீரங்கி சப்தங்கள். துப்பாக்கி ரவைகளின் பாய்ச்சல்கள். கட்டட இடிபாடுகள். குடும்பங்குடும்பமாக அகதிக் கூட்டங்கள். பச்சிளங்குழந்தைகளின் அலறல்கள். ஒருவேளை சோற்றுக்கும் குடிநீருக்கும் கதறல்கள். தினமும் நெஞ்சைப் பிளக்கும் காட்சிகள். மனிதர்கள் வாழும் நாடுகளா? விலங்குகள் வசிக்கும் காடுகளா? பிரித்துப் பார்க்க முடியாத வன்கொடுமைகள். இரத்தக் கிளரிகள். சகிக்க முடியாத சண்டைகள். இரண்டு பக்கமும் மடிவது முஸ்லிம் உயிர்கள். அந்நிய சக்திகளின் உதவியோடும் கண்காணிப்போடும் அடித்துக்கொண்டு சாகும் ஒரே மண்ணின் மைந்தர்கள். எல்லாம் ஆட்சியதிகாரத்திற்காகவும் நாடு பிடிக்கும் பேராசைக்காகவும்தான்! இதில் பழைய பாரசீகமான ஈரானுக்கே முதலிடம்! ஈரானுக்குள்ள வெறியைப் பற்றி ‘அல்முஜ்தமா’ இதழுக்குக் கட்டுரை எழுதத் தொடங்கிய முஹம்மது ஃபாரூக் அல்இமாம் எனும் அரசியல் விமர்சகர் இப்படிக் குறிப்பிடுகிறார்: முஹம்மது ஃபாரூக் அல்இமாம் இதை எழுதுவதற்கு வருத்தமாக இருக்கிறது. இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மோஷா தய்யான் ஃபிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளிக்கிறார். 1967 ஜூன் 5ஆம் நாள் சினாய், ஜவ்லான், கிழக்குக் கரை ஆகிய பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் படைகள் கைப்பற்றுவதற்குமுன் இப்பேட்டி நடக்கிறது. அதுவும் 18 நாட்களுக்குமுன்! செய்தியாளர், “இந்த ஆபத்தான திட்டத்தை எவ்வாறு தீட்டினீர்கள்?” என்று வியப்போடு வினவுகிறார். கிண்டலும் கேலியுமாக தய்யான் அளித்த பதில் என்ன தெரியுமா? “அரபுகள் படிக்கிறார்களா?” படிப்பதாக வைத்துக்கொள்வோம். இது செய்தியாளரின் இடைமறிப்பு. அதற்கு தய்யானின் பதில்: படித்தாலும் விளங்கமாட்டார்கள். 

உண்மை என்ன? 

இது, நம்மைப் பற்றி நம் எதிரி சொன்னதானாலும் உண்மை என்ன? ஈரானின் ஆபத்தைப் பற்றி எத்தனை முறை எத்தனை எழுத்தாளர்கள் உணர்த்தியும் எச்சரித்தும் எழுதினார்கள்! அவர்களில் டாக்டர் அப்துல்லாஹ் நஃபீசி, குவைத் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் வழக்குரைஞருமான நாஸிருத் துவைலா ஆகியோரும் அடங்குவர். ஆனால், இவர்களின் எச்சரிக்கை அரபுகளின் எள்ளலுக்கும் நகைப்புக்கும்தான் ஆளானது. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பொன்மொழிகள் பலவற்றை நம் முன்னோர்கள் உதிர்த்துவிட்டுத்தான் சென்றுள்ளனர். “புழுக்கை கிடந்தால், அங்கு ஒட்டகம் இருக்கிறது என்று அர்த்தம்” என்பதும் அவற்றில் ஒன்று. ஈரானின் புழுக்கைகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை அங்கும் இங்குமாக விதைத்துவருகின்றன; கலாசார மையங்களை உருவாக்கிவருகின்றன. ஈரான் சார்புள்ள அரசியல் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் மார்க்க ஆட்களும் வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றனர். நாம் நான்கு அரபு தலைநகரங்கள்மீது அதிகாரம் செலுத்துகிறோம் -என்று பஃக்தாத் (இராக்), பைரூத் (லெபனானன்), திமஷ்க் (சிரியா), ஸன்ஆ (ஏமன்) குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

ஈரானின் கை ஓங்குகிறது 

எதார்த்தமும் அதுதான். இராக் தலைநகர் பஃக்தாதில், ஈரானுக்கு ஆதரவான ஒரு குழுவே அதிகாரம் செலுத்துகிறது. இராக் இராணுவப் படை, குடிப்படை (Militia) எல்லாமே அக்குழுவைச் சேர்ந்தவையே. இந்தக் குடிப்படைதான் இராக்கில் சீரழிவைத் தூண்டிவருகிறது. அவ்வாறே, லெபனானை அதிகாரம் செய்யும் ‘ஹிஸ்புல்லாஹ்’வும் அதே குழுவினர்தான். சிரியாவில் என்ன நடக்கிறது? அங்கு ஈரான் புரட்சிப் படையினர் 2 லட்சம்பேர் இருக்கிறார்கள். அத்தோடு ‘ஹிஸ்புல்லாஹ்’ குடிப்படை, உலகம் முழுவதிலிருந்தும் ஈரான் திரட்டியுள்ள கொலைகாரக் கூலிப்படை ஆகியவையும் சிரியாவில் களமாடுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாத் தன் சொந்த மக்கயே படுகொலை செய்துகொண்டிருக்கும் பஷ்ஷார் அசதுக்கு ஆதரவாக இக்குழுக்கள் போரிட்டுவருகின்றன. ஏமன் நாட்டிலும் இதேநிலை. ஹூஸிக்களின் கை அங்கே ஓங்கியுள்ளது. தஹ்ரானின் (ஈரான்) கூலிப்படைகளும் அவர்களுடன் இணைந்து, பதவியிலிருந்து விரட்டப்பட்ட அலீ அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு ஆதரவாகப் போரிட்டுவருகின்றனர். தலைநகர் ஸன்ஆவிலும் ஏமன் நகரங்கள் அனைத்திலும் அதிகாரத்தைக் கைப்பற்ற களமிறங்கியுள்ளனர். சில வாரங்களுக்குமுன் “பஹ்ரைன், ஈரானின் ஒரு மாகாணம்” என்று அறிவித்துக்கொண்டார்கள். சுருங்கக் கூறின், வளைகுடா நாடுகளில் குற்றம், கொலை, நாசம் ஆகிய வலைகளை ஈரானிய ஷியாக்கள் பின்னிவருகின்றனர். சதிவலைகளில் சில கண்டுபிடிக்கப்பட்டாலும் வேறுசில திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டுவருகின்றன. ஆனால், அரபியர் உள்ளூர் சமாதானம், மனித உரிமைகள், சமூக இணக்கம் என்று சொல்லி உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் -என்று சாடுகிறார் விமர்சகர் ஃபாரூக் இமாம். 

தாஇஷ் - கொலைகாரர்கள் 

இதற்கிடையே மத்தியகிழக்கில் பயங்கரவாத இயக்கமான ‘தாஇஷ்’ (ஐஎஸ்) எனும் கொலைகாரக் கூட்டத்தை ஈரானும் அதன் ஏஜெண்டுகளும் உருவாக்கிவிட்டனர். “அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சாவு; யூதர்களுக்கு சாபம்” என்ற அதன் கோஷம் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இஸ்ரேல், ரஷியா, இராக் மற்றும் சிரியாவின் ஷியா அரசுகள் ஆகியவற்றுடன் கூட்டுச்சேர்ந்து அரபுகளுக்கெதிரான போரை ஈரான் நடத்திவருகிறது. அரபுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான கூட்டுச் சதியே இது. கொலை வெறிபிடித்த அசதை எதிர்த்து சிரியாவில் போராடிவரும் ஆயுதக் குழுக்களை அழித்தொழிப்பதே இந்த ஐ.எஸ்.ஸின் முக்கிய இலக்காகும். ரஷியாவின் போர் விமானங்கள் சிரியாவின் நூற்றுக்கணக்கான கிராமங்களையும் கட்டடங்களையும் தரைமட்டமாக்கிவிட்டன. பெண்கள், குழந்தைகள், முதியோர், சிவிலியன்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட்டனர். ஈரானோ அதன் புரட்சிப் படைகளோ ஒரு சிறு துரும்பையும் பாதுகாக்கவில்லை. அப்படியானால், ஈரானின் நோக்கம் என்னவென்று புரிகிறதல்லவா? இக்கட்டான இந்தச் சூழ்நிலையில், அரபுகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, குறிப்பாக வளைகுடா நாடுகள் இணைந்து ஈரானை அதன் எல்லைக்குள் கட்டுப்படுத்திவைக்க சாத்தியமான எல்லா முயற்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டியதிருக்க, நடந்துகொண்டிருப்பது என்ன? 

அநியாயமாக வீழ்த்தப்பட்ட முர்சி 

எகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது முர்சீ அரபுகளின் திண்ணையான எகிப்து நாட்டில், சுதந்திரமான தேர்தல்வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரபுத் தலைவரான முஹம்மது முர்சியை வீழ்த்த அரபுக் குழுக்களே வேலை செய்தன. (சலஃபிகளான ‘அந்நூர்’ கட்சியினரும் அவர்களில் அடக்கம்.) முர்சியின் முதல் நடவடிக்கை என்னவாக இருந்தது தெரியுமா? கனரக ஆயுதங்களை சினாய் பகுதிக்குக் கொண்டுசென்று, ‘ஃகஸ்ஸா’மீது கைவைத்தால் நடப்பதே வேறு என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்ததுதான். ‘ஃகஸ்ஸா’ மக்கள்மீதான முற்றுகையை அகற்றுவதற்கு வசதியாக எகிப்தின் கடற்கரைப் பகுதியான ‘ரஃபஹ்’ வழியைத் திறந்துவிட்டதும்தான். சிரியா புரட்சிக்கு முர்சி ஆதரவளித்தார். இதையெல்லாம்விட, ஈரான் தலைநகர் தஹ்ரானில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டது மட்டுமன்றி, கண்ணியமிக்க நபித்தோழர்கள் ஏசப்படும் ஒரு நாட்டில் நபித்தோழர்களைக் கண்ணியத்தோடு குறிப்பிட்டு, மரபுப்படி ‘ரலியல்லாஹு’ சொன்னவர் முர்சீ. அமீருல் முஃமினீன் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைக் கொலை செய்த மஜூசியான அபூலுஃலுஆவுக்கு ‘மஸார்’ (நினைவிடம்) எழுப்பப்பட்டுள்ள ஒரே நாடு ஈரான்தான். அந்த நாட்டில் வைத்துத்தான் தைரியமாக, கலீஃபா உமர் (ரலி) அவர்களின் புகழ் பாடிவிட்டுவந்தார் முர்சி. தற்போதுள்ள நிலை எகிப்தில் நீடித்தால்... சிரியாவின் புரட்சி அணைந்தால்... டமாஸ்கஸில் ஈரான் காலூன்றினால்... அரபுகள் கசப்பான, கடினமான, மிகத் தீங்கான முடிவை எதிர்பார்க்க வேண்டியதுதான். ஈரானியர் செய்துவரும் அட்டூழியங்களைப் பார்க்கும் எவருக்கும் ஈரான் ஒரு பேரபாயம் என்பது விளங்காமல்போகாது. 

கேன்சர் கட்டி 

எனவே, இந்த கேன்சர் கட்டியை அகற்றும் நேரம் முஸ்லிம்களுக்கும் அரபுகளுக்கும் வந்துவிட்டது. இந்த கேன்சர் அரபுடலைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருக்கிறது. சியோனிஸ ஆபத்தைவிடப் பன்மடங்கு ஆபத்தானது. ‘தூ கார்’ சம்பவத்தின்போது நம் முன்னோர்களான அரபுகள் பாரசீகர்கள்மீது எடுத்த துணிச்சலான அதே நிலைப்பாட்டை இப்போது எடுத்தாக வேண்டும் -என்கிறார் அரசியல் விமர்சகர் முஹம்மது ஃபாரூக் அல்இமாம். (அல்முஜ்தமா) இதிலிருந்து ஈரானின் கனவு என்ன என்பது புரிந்திருக்கும். ஈரானின் தலைமையில் இராக், ஏமன், பஹ்ரைன், லெபனான், சிரியா, சஊதி முதலான நாடுகளைக் கொண்ட அகண்ட பாரசீகத்தை உருவாக்குவதுதான்! அதாவது சுன்னத் ஜமாஅத் கொள்கைளை ஒழித்துவிட்டு ஷியாயிஸத்தை நிலைநாட்டுவதுதான் ஈரானின் கனவு! இதை எப்படி அனுமதிக்கலாம்?

எதுவும் நம்முடையதில்லை..!

வெளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார்.

ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை அந்த மனிதர் மிகவும் விரும்பினார். ஊரில் பலரும் அந்த வீட்டுக்கு இரட்டை விலை கொடுத்துப் பெறத் தயாராக இருந்தனர்.

ஆயினும் அந்த மனிதர் அந்த வீட்டை விற்க விரும்பவில்லை. அந்த வீடு இன்று தன் கண்முன்னால் நெருப்புக்கு இரையாவதைக் கண்டு அவருக்கு சொல்லொணாத் துயரம். துக்கம். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த ஒரு பெரும் கூட்டம் வீடு எரிந்து அடங்குவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

தீயின் உக்கிரம் மிகப் பெரியதாக இருந்தது. அணைத்துவிட முயற்சி செய்வதிலும் எந்தப் பலனும் இல்லை என்பது புரிந்தது. கரிக்கட்டைகளே மிஞ்சும் என்று தெளிவாகத் தெரிந்தது. பார்த்துப் பார்த்து கட்டிய வீடு நெருப்பில் எரிவதைக் காணச் சகிக்கவில்லை. அந்த மனிதருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

அச்சமயம் அந்த மனிதரை நோக்கி அவருடைய மகன் ஒருவர் வேகமாக ஓடிவந்து காதில் சொன்னார் : "அப்பா, கவலைப்படாதீர்கள். இந்த வீட்டை நாம் விற்றுவிட்டோம், அதுவும் மூன்றுமடங்கு விலைக்கு. நல்ல விலை கிடைத்ததால் நீங்கள் வரும்வரை காத்திருக்காமல் விற்றுவிட்டோம்"

"அப்படியானால் இது, இந்த வீடு நம்முடையது அல்ல அல்லவா" - அந்தத் தந்தைக்கு மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அழிந்துகொண்டிருக்கும் பொருள் தம்முடையதாக இல்லாதிருப்பதில் மனிதனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. "இறைவா நன்றி, இது எம்முடையதில்லை" என்று மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். வேடிக்கைப் பார்க்கும் ஆயிரக்கணக்கானோரில் தானும் ஒருவராக அந்தத் தந்தை மாறிப் போனார்.

ஒரு கண நேரத்தில் உணர்வுகளின் மாற்றம் தான் எத்தனை வேகமானது. தன்னுடையதாக எண்ணும் போது அதன் அழிவில் பெருவருத்தமும், பிறருடையது என்னும் போது வேடிக்கை மனநிலையும்.

வேடிக்கை மனநிலையில் தந்தை இருந்த அந்த நேரம் பார்த்து இரண்டாவது மகன் ஓடிவந்தான் "அப்பா, என்ன இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நமது வீடு எரிந்து கொண்டிருக்கிறதே?!" என்றான்.

இரண்டாவது மகனுக்குச் செய்தி தெரியாது என்று நினைத்த தந்தை சொன்னார் : " உன் அண்ணன் நேற்றே வீட்டை விற்றுவிட்டான் மகனே, அதனால் நமக்கு இதில் இழப்பு ஏதுமில்லை"

அதற்கு அந்த மகன் சொன்னான்: "அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?, நாம் முன்பணம் மட்டும் தான் வாங்கியிருக்கிறோம். இனியும் வீடு வாங்கியவர் வந்து மீதப் பணத்தைத் தருவாரா? என்ன?"

அவ்வளவு தான், இரண்டாவது மகன் சொன்னதைக் கேட்டதும் அந்தத் தந்தைக்கு மீண்டும் கண்களும் மனமும் கலங்கலானது. புன்னகை மறந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது. "என்ன சொல்கிறாய் மகனே, அப்படியானால் பணம் கிடைக்காதா?" என்று கவலையுடன் கேட்கலானார்.

அதே வீடு, அதே நெருப்பு, அதே சூழல், ஆனால் ஒரு கணப்பொழுதிற்கு முன்பு இருந்த மனநிலை மாறிவிட்டது.

அவரிடம் இருந்த வேடிக்கைப் பார்க்கும் மனநிலை கணப்பொழுதில் மாறிப் போனது. மீண்டும் கவலை ஆட்கொண்டது.

என்னுடையது, என்னுடையதில்லை என்கிற எண்ணம் மட்டுமே கவலைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாகிறது.

அப்போது அவரிடம் மூன்றாவது மகன் ஓடிவந்தான் "அப்பா, நான் வீட்டை யாருக்கு விற்றோமோ அந்த மனிதர் மிகவும் நாணயமானவர். வாக்குத் தவறாதவர். அவரிடமிருந்து தான் இப்போது வருகிறேன். 'வீட்டை வாங்கியது வாங்கியது தான். தீப்பிடிக்கும் என்று நானோ நீங்களோ அறியமாட்டோம், ஆகவே வாக்களித்த படி மீதப் பணத்தைத் தந்துவிடுகிறேன்' என்று சொன்னார்."

இதைக் கேட்ட தந்தைக்கு மீண்டும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ' வேடிக்கைப் பார்க்கும் மனநிலை' திரும்ப வந்து தொற்றிக்கொண்டது.

உண்மையில் எதுவும் மாறவில்லை. அதே வீடு. அதே நெருப்பு. சூழலில் இல்லை சோகமும் சந்தோஷமும். மாறாக, தன்னைப் பிணைத்துக் கொள்ளும் தன்மையில், அந்த எண்ணத்தில் இருக்கிறது. என்னுடையது, என்னுடையதில்லை என்கிற எண்ணம் மட்டுமே கவலைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாகிறது.

நினைத்துப் பாருங்கள், உங்களுடைய எண்ணங்கள் உண்மையில் உங்களுடையனவா? உண்மையில் அவை உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், நீங்கள் படித்த நூல்கள், பார்த்த காட்சிகள், ஊடகங்கள் ஆகியவற்றின் தாக்கங்களால் விளைவன அல்லவா!

உங்கள் மீது திணிக்கப்படும் எண்ணங்கள். நீங்களே திணித்துக்கொள்ளும் எண்ணங்கள் என்று இருவகையாக பிற(ர்) எண்ணங்களால் நீங்கள் ஆளப்படுகிறீர்கள்.

எண்ணம் விதையுங்கள். செயல் விளையும்.
செயல் விதையுங்கள்.பழக்கம் விளையும்.
பழக்கம் விதையுங்கள். குணநலன் உருவாகும்.
பிறகு உங்கள் குணநலனே எழுதிவிடும் உங்கள் தலைவிதியை.
யாவும் இறைவனுடையதே என்று உணர்ந்தார்க்கு இழப்புகளில்லை ஒருபோதும்.

(ஆங்கில மடல் ஒன்றின் தழுவல்) தமிழாக்கம்: இப்னு ஹம்துன்

சிரியாவிலிருந்து வரும் 10,000 அகதிகளுக்கு, அமெரிக்கா புகலிடம் அளிக்கும் - ஒபாமா

சிரியாவிலிருந்து வரும் 10,000 அகதிகளுக்கு அமெரிக்கா புகலிடம் அளிக்கும் என்று அதிபர் ஒபாமா கூறினார்.

 தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

 திட்டமிட்டிருந்த எண்ணிக்கையில் கடந்த ஆண்டு சிரியா அகதிகளுக்குப் புகலிடம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 சிரியாவில் உள்நாட்டுப் போர் கடுமையாக நிகழ்ந்து வந்த நிலையில், பெரும் எண்ணிக்கையில் அந்த நாட்டைவிட்டு மக்கள் வெளியேறி வந்தனர்.

 திடீரென அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்பது தொடர்பாக அமெரிக்க மக்களுக்கு எழக் கூடிய கவலைகளைப் போக்குவது அவசியமாக உள்ளது. அதன் காரணமாகவே, கடந்த ஆண்டில் நான் எண்ணியபடி, அதிக எண்ணிக்கையில் சிரியா அகதிகளுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் தர முடியவில்லை.

 இந்த விவகாரத்தின் உண்மை நிலையை அமெரிக்க மக்கள் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். எனவே, இந்த ஆண்டு 10,000 அகதிகளை ஏற்க இயலும் என்று உறுதியாகக் கூற முடியும். அகதிகளாக வருவோரின் பின்னணி உள்ளிட்டவற்றை நன்கு ஆராய்ந்து, சந்தேகத்துக்கு இடமின்றி அவர்களைப் பற்றிய விவரங்கள் உறுதி செய்யப்படும். இதற்கான தகவல் கட்டமைப்பு இப்போது தயார் நிலையில் உள்ளது என்று ஒபாமா கூறினார்.

22 மாதங்களில் 4,144 பேரை படுகொலை செய்த IS காட்டுமிராண்டிகள்


ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4000 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 22 மாதங்களில் 4,144 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தலையை வெட்டுதல், துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது, கல்லால் அடித்துக் கொல்வது போன்ற கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும், இதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 2,230 பேர் பொதுமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சன்னி மற்றும் குர்திஷ் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பொது மக்களை தவிர சிரிய அரசு படைகளை சேர்ந்தவர்கள், கிளர்ச்சி படையை சேர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள், மது கடத்தலில் ஈடுப்பட்டவர்கள், மதத்திற்கு எதிராக பேசியவர்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளார்கள். 

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூரங்களை தடுக்க ஐ.நா. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

இந்து கடவுள் விஷ்ணுவுக்கு, பெண் குழுந்தைகளை திருமணம் செய்துவைக்கும் பெற்றோர்


நேபாளத்தில் பெண் குழந்தைகளுக்கு இந்து கடவுள் விஷ்ணுவுடன் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நடத்தப்படுகிறது.

காத்மண்டுவைச் சேர்ந்த நேவார் சமூகத்தினர், வயதுக்கு வராத பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு இந்த திருமணத்தை செய்து வைக்கின்றனர்.

இந்து மதம் மற்றும் புத்த மதம் ஆகிய இரண்டிலும் உள்ள சடங்குகளை இணைத்து செய்யும் இந்த சமூகத்தினர், இந்த திருமண விழாவை 2 நாட்கள் நடத்துகின்றனர்.

அதாவது, இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளை அழிவே இல்லாத விஷ்ணுவுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால், அந்த பெண் குழந்தைகள் காலம் முழுவதும் விதவையாக மாட்டார்கள் என்ற நம்பிக்கை அந்த சமூக மக்களிடம் உள்ளது.

பெல் பழம் எனப்படும் பழத்தை அந்த பெண் குழந்தைகள் ஒரு கையில் வைத்துக் கொண்டு, மறு கையால் விஷ்ணு சிலையை தொடுவதன் மூலம், திருமணம் நடப்பதாக கருதப்படுகிறது.

இதையடுத்து திருமண விழாவை போலவே விருந்தினர்களுக்கு உணவளித்து மகிழ்கின்றனர் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள்.

காலம் காலமாக முன்னோர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றிவருவதால் நாங்களும் இதனை தவறாமல் செய்து வருகிறோம் என பெண் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

நான் தற்கொலைப்படை தீவிரவாதி, நடுவானில் பீதியைக் கிளப்பிய பெண்


பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு விமான பயணம் மேற்கொண்ட இளம்பெண் ஒருவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதியென கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரம் நோக்கி இளம்பெண்கள் இருவர், தங்களில் ஒருவரது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

விமானம் புறப்பட்டதில் இருந்தே இருவரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் பல முறை சக பயணிகள் எரிச்சலுற்று எச்சரிக்கையும் செய்துள்ளனர்.

பல முறை விமான ஊழியர்களிடம் மோதல் போக்கையும் கடைபிடித்து வந்துள்ளனர். சத்தமாக பாட்டு வைத்து சக பயணிகளின் கோபத்திற்கு ஆளானார்கள், மட்டுமின்றி விமானத்தில் அதிக மது வழங்க கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், அந்த இருவரில் ஒரு இளம்பெண் திடீரென்று கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்த அவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதி என விமான பயணிகளை அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து பீதியடைந்த விமான ஊழியர்கள், இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதை உணர்ந்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பார்சிலோனா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் விசாரணையில் அவர்களிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை எனவும், சக பயணிகளை அச்சுறுத்தவும், மது தராத விமான ஊழியர்களை பீதி காட்டவும் இதுபோன்று கூறியதாக அந்த இருவரும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

50000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறது, பின்லாடன் நிறுவனம்


இன்றைய சவுதி கெஜட்டின் செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பொருளாதார மந்த நிலை காரணமாக உற்பத்தி பாதிப்பினால் கிட்டத்தட்ட 50000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நான்கு மாத சம்பளம் வேறு பலருக்கு பாக்கியிருக்கிறது. இதில் பாதிக்கப்படுவது அதிகம் இந்தியர்களே! அடி மட்ட தொழிலாளர்களிலிருந்து உயர் தர டெக்னீஷியன் வரை பணி புரிவது அதிகம் இந்தியர்களே! அதற்குள் நிலைமை சீரடைந்தால் இவர்கள் தப்புவார்கள். இல்லை என்றால் இந்தியாவை நோக்கி போக வேண்டியதுதான். 

இதனால் இந்திய பொருளாதாரமும் மிகப் பெரிய சிக்கலில் மாட்டும் அபாயம் உள்ளது. நம் நாட்டு அரசியல் கொள்ளையர்கள் கோடி கோடியாக கொள்ளையடித்தாலும் பொருளாதாரம் சரிந்து விடாமல் இருக்க முக்கிய காரணமே அந்நிய செலாவணியாக நாம் மாதா மாதம் அனுப்பும் சம்பள பணங்களே! பின் லாடன் போன்ற பெரிய கம்பெனிகளுக்கே இந்த நிலை என்றால் மற்ற கம்பெனிகளைப் பற்றி சொல்ல வேண்டாம்.

எனவே வளைகுடாவை நம்பியிருக்கும் குடும்பங்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு ஊரில் ஏதாவது தொழில் தொடங்க பணத்தை இப்போதே சேகரிக்க தொடங்குங்கள். எந்த நிலைமையையும் எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்க, இஸ்ரேலிய பிணந் தின்னி கழுகுகளால் மொத்த வளைகுடா நாடுகளும் அச்சத்தில் உள்ளன. இறைவன்தான் இந்த நிலையை சீராக்கி சகஜ நிலைக்கு வளைகுடா பொருளாதாரத்தை கொண்டு வர வேண்டும்.

http://saudigazette.com.sa/saudi-arabia/50000-binladin-workers-issued-exit-visas/

சுவனப் பிரியன்


அஸ்மா பேகத்தின் 'செங்குருதியும் பச்சோந்தியும்'


புரவலர் புத்தகப் பூங்காவின் 36வது வெளியீடான பூகொடயூர்  அஸ்மா பேகத்தின் செங்குருதியும் பச்சோந்தியும் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா , 07.05.2016 சனிக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு பூகொடை குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலையில்  நடைபெறும்.

இவ்விழாவிற்கு குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.எம். ஸர்ஜூன் அவர்கள்  தலைமை வகிப்பார். வரவேற்புரையை பிரதி அதிபர் எம்.ஆர்;.எம். இர்ஷாத்  அவர்கள் நிகழ்த்துவார்.

நூலின் முதற்பிரிதியினை அல்ஹாஜ் எல்.ஐ.ஏ.எம். ஸப்வான் (JP) அவர்கள் பெற்றுக் கொள்வார்.

கருத்துரைகளை சமூகஜோதி ரபீக், ITN செய்தி ஆசிரியர், அல்ஹாஜ் சித்தீக் ஹனீபா ஆகியோர்  வழங்குவர்கள்.

மேமன்கவி சிறப்புரை ஆற்றுவார்.

ஏற்புரையையும்; நன்றியுரையையும் நூலாசிரியர்  பூகொடயூர் எம். என். அஸ்மா பேகம் நிகழ்த்துவார்.

கணித ஆசிரியர் எம்.டி. இக்பால் நஸார்  நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்;.

மக்கள் வெள்ளம், திரளுவதனை தடுக்க முடியாது - விமல்


தடையுத்தரவுகளின் மூலம் எம்மை தடுக்க முடியாது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் அஞ்சி நீதிமன்றிற்கு பிழையான தகவல்களை வழங்கி சாலிகா மைதானத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் பயன்படுத்த விடாமல் தடுத்த போதிலும், மே தினக் கூட்டத்திற்கு மக்கள் வெள்ளம் திரளுவதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் சாலிகா மைதானத்திலிருந்து பேரணி நடாத்த திட்டமிட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினருடன் பேசி சில வீதிகளை பேரணிக்காக ஒதுக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தூவானம் கலை விழா

தமிழ் முஸ்லிம் நல்லுறவை வளர்க்கும் வகையிலும் கலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கலை இலக்கியப் பகுதியின் ஏற்பாட்டில் தூவானம் கலை விழா எதிர்வரும் மே 02 திங்கட்கிழமை மாலை 04.45 க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தலைவர் எம.எல்.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கௌரவ அதிதிகளாக கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஜீ. இராஜகுலேந்திரா, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ் ஆகியோரும் கலந்து கொள்வதுடன் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம். மன்ஸூர் சிறப்புரையாற்றவுள்ளார்.

இந்நிகழ்வில் இன மத பேதமின்றி அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 0772101202 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

இவ்வண்ணம்,
றுடானி ஸாஹிர்
பொதுச் செயலாளர்
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்LTTE க்கு மீண்டும் இடமளிக்கப்படமாட்டாது - முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் ரணில்


பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்த விடயத்தைக் கூறினார்.

எல்.ரி.ரி.ஈ.யினருக்கு மீண்டும் பயங்கரவாதத்தை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார். அதுகுறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.


துப்பாக்கியால் சுடப்பட்ட, மூவரின் சடலங்கள் மீட்பு

அநுராதபுரம், திறப்பனை பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (30) பிற்பகல் 3.00 மணியளவில் திறப்பனை, ஹிந்தகொல்ல பாதையில் வைத்தே குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதார் மற்றும் வாகனத்தில் பயணித்தோர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மஹிந்தவின் பாதுகாவலர்களாக, 1000 கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ படையணி!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பணியில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஆயிரம் பேரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேதினத்தின் பின்னர்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.

பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் அவரின் பாதுகாப்பு பணிகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் மஹிந்த தரப்பிலிருந்து இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஆயிரம் பேரை மஹிந்தவின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மஹிந்தவின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக செயற்படவுள்ளனர்.

தெற்கு அதிவேக பாதையில், நாளை இலவசமாக பயணிக்கலாம்

-வீரகேசரி-

தெற்கு அதிவேக பாதையில் மே தினத்தை முன்னிட்டு நாளை காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை இலவசமாக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாவலர்களின் தவறு, கடுமையாக திட்டிவிட்டு, மன்னிப்புக்கேட்ட மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாவலர்கள் அசட்டையாக செயற்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரும் கோட்டை விடுவதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கான அண்மைய உதாரணம் கடந்த 27ம் திகதி நடைபெற்றுள்ளது.

குறித்த தினம் விளையாட்டுத்துறை அமைச்சின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதன் பின்னர் சினமண்ட் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் சாட்சிக் கையெழுத்திடுவதற்காக திட்டமிட்டிருந்தார்.
 
இந்த திருமண நிகழ்வின் பின்னர் கல்கிஸ்சையில் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார்.

எனினும், விளையாட்டுத்துறை அமைச்சின் நிகழ்வு முடிந்து காரில் ஏறி அமர்ந்த ஜனாதிபதி, தன் கையில் இருந்த சில கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது அவரது பாதுகாவலர்கள் நேரே கல்கிஸ்சை நிகழ்வுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சென்றபின் தான் தனது பாதுகாவலர்களின் தவறை உணர்ந்த ஜனாதிபதி மைத்திரி, அவர்களைக் கடுமையாக திட்டிவிட்டு, சினமண்ட் ஹோட்டலுக்கு விரைந்துள்ளார்.

பின்னர் மீண்டும் சுகாதாரத்துறை விருது வழங்கல் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி தனது தாமத வருகை குறித்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன்னரும் காலிக்கு செல்வதற்காக ஜனாதிபதிக்கு ஹெலிகொப்டர் தயார் நிலையில் இருந்த போது அவரது பாதுகாவலர்கள் தரைப்பாதை வழியாக அவரை அழைத்துச் சென்றிருந்தனர்.

அத்துடன், நிகழ்வொன்று முடிந்து திரும்பிச் செல்லும் வழியில் ஜனாதிபதியின் வாகனத்திற்கு பதிலாக பிரதமரின் வாகனத்தில் அவரை ஏற்றி உட்கார வைத்துள்ளனர்.

ஒரு நாட்டின் ஜனாதிபதியின் பாதுகாப்பை பொறுப்பில் எடுத்திருக்கும் பாதுகாப்புத் துறை இவ்வளவு தூரம் அசட்டையாக இருப்பது பல தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கள் எயார்லைன் நிறுவன, 40 வீதமான பங்கினை கட்டார் வாங்குகிறது..?

சமகால அரசாங்கத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நட்டத்துடன் இயங்கும் ஸ்ரீலங்கள் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 40% வீதமான பங்கினை கட்டார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்கவிடம் வினவிய போது, இன்னமும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

46 ஆயிரம் கோடி ரூபா வரையில் நட்டமடைந்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை நடத்தி செல்வதற்கு, அரசாங்கம் 250 டொலர் மில்லியன் வழங்க தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதனை உரிய முறையில் தயாரித்த பின்னர் அந்த வேலைத்திட்டத்தை பிரதமர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

1998ம் ஆண்டிற்குள் எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை தமது பங்கில் 40% வீதத்தை வழங்கிய நிலையில் இம்முறை 40% மற்றும் 60% வீதமான பகுதி விமான சேவை மற்றும் அரசாங்கத்திற்கு இடையில் பிரிந்து செல்லவுள்ளன.

இதேவேளை, கடந்த காலத்தில் இலங்கைக்கு வருகை தந்த கட்டார் அரசாங்கத்தின் பிரதானி, கட்டார் எயார்வேஸ் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கட்டார் எயார்வேஸ் நிறுவனம் உலகத்தில் பிரதான விமான சேவைகளுக்கு இடையில் முன்னிலையில் உள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சிக்காக வெட்கப்படுகிறோம் - புதிய தலைமுறை அமைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை கவிழ்த்து விட்டு நல்லாட்சியை கொண்டு வரும் வேலைத்திட்டத்தில் சம்பந்தப்பட்டமை குறித்து வெட்கப்படுவதாக புதிய தலைமுறை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் புதிய தலைமுறை அமைப்பினர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது தாக்குதல் நடத்திய நபரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமித்தமையை கண்டிப்பதாக அந்த அமைப்பினர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளனர்.

கட்சி அரசியல் என்ற சேற்றுக்குழிக்குள் இவ்வாறான சம்பவங்கள் புதிதல்ல என்ற போதிலும் உயிர் அச்சுறுத்தல்கள், அவமதிப்புகளுக்கு மத்தியில் வென்று கொடுத்த இடம் இந்தளவு விரைவாக காட்டிக்கொடுக்கப்படும் என்பதை நாம் நினைத்து பார்க்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

புதிய தலைமுறை அமைப்பு நாட்டு மக்களுக்காகவும் ஜனநாயகத்திற்காகவுமே எப்போதும் குரல் கொடுத்து வந்துள்ளதே அன்றி கட்சி ஒன்றின் நலனுக்காக குரல் கொடுக்கவில்லை எனவும் அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், நடிகை சமனலி பொன்சேகா, காமினி வியங்கொட, லக்ஷ்மன் விஜேசேகர ஆகியோர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

பெருமளவு கலகத் தடுப்பு பொலிஸாரின், உதவியுடன் கைதுசெய்யப்பட்ட பிக்கு

பதுளை - வெலிமடை, நுகத்தலாவ, திவுரும்பொல விகாரையில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க போதி மரத்தை வெட்டி பலகைகள் ஆக்கியமை சம்பந்தமாக விகாரையின் விகாரதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விகாரதிபதியை வெலிமடை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருள் பெறுமதி மிக்க இந்த போதிமரம் இருந்த இடத்திலேயே, சீதை தான் தூய்மையான பெண் என்பதை காட்ட தீயில் இறங்கி சத்தியம் செய்ததாக புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளன.

விகாரதிபதி கைது செய்யப்படும் போது, அங்கு விகாரைக்கு பங்களிப்புச் செய்யும் சிலர் கூடியதால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

விகாரையில் கலகத் தடுப்பு பொலிஸாரும், மூன்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போதி மரத்தை வெட்டி பலகை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார்.

அத்துடன் விகாரையில் இருந்து மரம் வெட்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய ஆட்சியிலேயே, முஸ்லிம்ளுக்கு பாரிய அச்சுறுத்தல் - பொங்குகிறார் அஸ்வர்

வடக்கு, கிழக்கு என முஸ்லிம்களிடையே பாகுபாட்டுடன் உறவை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை பிரிக்கவோ நாம் ஒருபோதும் எண்ணவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -30- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தாம் எப்போதும் நல்லிணக்க அடிப்படையில் ஆட்சி செய்வதையே விரும்புவதாகவும் ஏ.எச்.எம்.அஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் நாட்டை பிரிக்கும் செயற்பாட்டை மேற்கொள்வதாகவும் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் துணை நிற்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு பாரியளவில் அச்சுறுத்தல் காணப்பட்டதாக தற்போதைய அரசு கூறுகிறது. ஆனால் தற்போதைய ஆட்சியிலேயே அவ்வாறான அச்சுறுத்தல் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொது பல சேனா அமைப்பை உருவாக்கியதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தொடர்பு உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு இல்லை என பதிலளித்ததுடன், இந்த அமைப்பு முஸ்லிம் மக்களிடையேயும் சிங்கள மக்களிடையேயும் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.

கதாபி + பஷர் போல் துருக்கியை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லுகிறாரா எர்டொகன்..?

-லத்தீப் பாரூக்-
செழுமை மிக்க லிபியாவை முஅம்மர் கதாபி அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று கட்டாந்தரை ஆக்கியது போல், தன்னுடைய கொடூரம் மிக்க ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக செழிப்பான சிரியாவை அந்த நாட்டின் கசாப்புக் கடைக்காரன் என வர்ணிக்கப்படும் பஷர் அல் ஆஸாத் இரத்த ஆறாக மாற்றியது போல் வரலாற்றுப் புகழ் மிக்க துருக்கி தேசத்ழைதயும் அந்த நாட்டின் ஜனாதிபதி தய்யிப் எர்டொகன் அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றாரா? 
மக்களின் குரலை நசுக்குவதற்காக இன்று ஜனாதிபதி எர்டொகன் கடைப்பிடிக்கும்; கடும்போக்கு கொள்கைகள் எழுப்பியுள்ள பிரதான கேள்வி இதுதான். கடந்த சில நாற்களில் அந்த நாட்டின் ஊடகங்களை நசுக்கும் வகையில் அதிரடியான சில நடைமுறைகளை அவர் அறிமுகம் செய்துள்ளார். துருக்கியின் இஸ்லாமியப் போதகரும் கல்விமானுமான பதுல்லாஹ் குலென் தொடங்கிய குலென் இயக்கம் என மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளனர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்ககப்பட்டு வருகின்றன. கடந்த பல காலமாக இது நடந்து வந்தாலும் அண்மைய நாற்களில் இது மேலும் தீவிரமடைந்துள்ளது.
2016 ஏப்பிரல் 19 செவ்வாய்க்கிழமை அன்று நாடு தழுவிய நடவடிக்கையின் போது சுமார் நூறு பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது வீடுகளிலும் அலுவலகங்களிலும் இருந்தவர்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் போது அரசுக்கு எதிராக அமைதியீனத்தை தூண்ட முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்கள்.
ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகவும் துருக்கி கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இஸ்லாமிய சார்பு அரசு என கூறப்படும் ஆனால் சர்வாதிகாரப் போக்கு மேலோங்கி வரும் எர்டொகனின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் அழிவுக்கு இட்டுச் செல்பவை. லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் நிலைமைகளிலிருந்து அவர் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்குமான மக்களது குரல்கள் நசுக்கப்பட்டதால் அந்த நாடுகள் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டன.
2010 டிசம்பர் 18ல் டூனீஷியாவில் தொடங்கிய அரபு எழுச்சி பாரிய அளவிலான அரசியல் மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தியது. இதனால் உந்தப்பட்ட லிபிய மக்களும் சிறிய அளவு சுதந்திரம் வேண்டி அமைதியான ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர். அவர்கள் கதாபியின் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று எண்ணவில்லை. மக்களுக்கு பல்வேறு பொருளாதார நன்மைகளை வழங்கிய அந்த அடக்குமுறை ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அவர்கள் அமையவும் இல்லை.
ஆனால் கதாபி அந்த மக்கள் குரலை அடக்க திடசங்கற்பம் பூண்டார். அவரின் அடக்கு முறை நடவடிக்கை காரணமாகத் தான் அங்கு அரசுக்கு எதிரான ஆயத மோதல் தலைதூக்கியது. இப்படி ஒரு நிலைமைக்காக நீண்ட நாற்கள் காத்திருந்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா இஸ்ரேல் உட்பட யுத்த வெறிகொண்ட பல நாடுகள் நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தி புகுந்து விளையாடத் தொடங்கின. மக்களைக் காப்பதாகக் கூறிக் கொண்டு களமிறங்கிய அவர்கள் ஆபிரிக்காவின் செழுமை மிக்க ஒரு நாட்டடை இன்று எதுவுமே அற்ற கட்டாந்தரை ஆக்கிவிட்டனர். இன்று லிபியா சட்டம் ஒழுங்கு எதுவுமே அற்ற வெறும் கொலைகளமாகிலிட்டது. அங்கிருந்த 140 தொன் தங்கம் உட்பட எண்ணற்ற பல செல்வங்களை இஸ்ரேலும் ஏனைய யுத்த வெறியர்களும் சூறையாடிவிட்டனர்.
இந்தப் போராட்டத்தின் நடுவே பிரான்ஸின் அப்போதைய ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸி கதாபிக்கும் தனக்கும் இடையிலான சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களை மூடி மறைப்பதற்காக தனக்கு விசுவாசமான ஒரு உளவாளியை அனுப்பி கதாபியை பின் தொடரச் செய்து சரியான சந்தர்ப்பத்தில் அவரை கொன்று விட்டார்.
லிபியா போராட்டத்தின் ஆரம்பத்தில் அதனால் உந்தப்பட்ட அடக்குமுறைக்கும் கொடுமைக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருந்த சிரியா மக்களும் அமைதியான முறையில் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர். பஷர் அல் அஸாத்தின் மூர்க்கக் குணம் கொண்ட இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட தமது அன்புக்கு உரியவர்களுக்கு என்ன நடந்தது என்பது தான் அவர்கள் எழுப்பிய பிரதான கேள்வி.
அந்த மக்களின் நியாயமான குரல்களுக்கு செவி சாய்ப்பதற்கு பதிலாக பஷர் அல் அஸாத்தும் ஆள்கடத்தல் சித்திரவதை கொலை என மக்களுக்கு எதிராக மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டார். அவர் கட்டவிழ்து விட்ட காட்டுமிராண்டித் தனத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் துணைக்கு வந்தன. அப்போது மனித உரிமையின் காவலர்களாக கொக்கரிக்கும் அமெரிக்கா, பிரிட்டன், உட்பட பல நாடுகளும் நகரங்களும் கண்மூடி இவற்றை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன. சிரியாவில் போராடிய எதிராளிகளுக்கு சவூதி அரேபிய சர்வாதிகள் துணையாக நின்றனர்.
இன்று சிரியாவும் மக்கள் வாழ விரும்பாத ஒரு வெற்று பூமியாகிவிட்டது.
துருக்கியில் இன்று ஏற்பட்டுள்ள அமைதியீனத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி எர்டொகன் எடுத்து வரும் நடவடிக்கைகளும் இந்த நிலைமைகளுக்கு ஒத்ததாகவே உள்ளன. கதாபியும் அஸாத்தும் கடைபிடித்த தற்கொலை கொள்கைகளுக்கு ஒத்ததாகவே இவை காணப்படுகின்றன.
எர்டொகனின் நெருங்கிய உறவினர்களின் ஊழல்களை ஊடகங்கள் வெளிப்படுத்த தொடங்கியதும் அந்த கருத்துக்களுக்கு செவிசாய்க்க அவர் மறுத்துள்ளார். மாறாக ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் முடுக்கிவிட்டுள்ளார். சில ஊடக நிறுவனங்களை மூடிவிடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளமை அங்கு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் துருக்கியர்கள் மத்தியில் மட்டுமன்றி முழு உலகிலும் முஸ்லிம்கள் மத்தியில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. துருக்கியில் இஸ்லாத்தை அழித்தொழிக்க சங்கற்பம் பூண்டு அங்கு இஸ்லாத்துக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்த அந்த நாட்டின் தேசப்பிதா என வர்ணிக்கப்படும், ரோமானிய யூதராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படும் முஸ்தபா கமால் அதாதுர்க் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்ட கொடுங்கோல் ஆட்சி முறைக்கு முடிவு காணப்படலாம் என்பதே இந்த மகிழ்ச்சிக்கு காரணம்.
அண்மைக் காலத்தில் உலகில் இஸ்லாம் மீள் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. வரலாற்றுப் புகழ் மிக்க துருக்கி தேசம் மீது உலக முஸ்லிம்கள் கொண்டுள்ள ஆர்வம் காரணமாகவும் இஸ்லாத்தின் கடைசி ராஜ்ஜியமாக எஞ்சியிருந்த துருக்கி பேரரசின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவதற்காகவும் முஸ்லிம்கள் பலர் அங்கு வருகை தரவும் தொடங்கினர்.
அதேபோல் சிரியாவில் அழிவுகளை எதிர்நோக்கிய ஆயிரக்கணக்கான மக்களும் வேறு வழியின்றி துருக்கி நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். இதனால் துருக்கியின் அரசியல் நிலவரம் இரவோடு இரவாக மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது துருக்கி இந்தப் பிராந்தியத்தில் கொந்தளிப்பு மிக்க ஒரு தேசமாகவும் மாறிவிட்டது.
இவ்வாறான சிக்கலான ஒரு பின்னணியில் தான் ஜனாதிபதி எர்டொகன் குலென் இயக்கத்துக்கு சவால் விடுக்கத் தொடங்கியுள்ளார். கல்வி, தர்ம காரியங்கள் ஊடகப் பணி என பல்வேறு மனிதாபிமான சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்த இயக்கமே தற்போது அரசின் நெருக்குதலை எதிர்நோக்கியுள்ளது.
தமது குடும்பத்தினருக்கு எதிரான ஊழல்களை வெளியிட்டார்கள் என்பதற்காக ஊடகங்கள் மீது அவர் கை வைத்திருப்பது தற்கொலைக்கு சமமானதாகும். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா, பொஸ்னியா, கொசோவோ, சூடான், சோமாலியா என பல முஸ்லிம் நாடுகளை வரிசையாக வேட்டையாடி சீரழித்த யுத்த வெறிகொண்ட கழுகுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இஸ்ரேல் என்பன துருக்கியையும் துவம்சம் செய்யும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றன.
தற்போதைய நிலைமைகள் பற்றி குலென் நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் பகிரப்பட்ட விழுமியங்கள் கூட்டமைப்பின் தலைவருமான கலாநிதி லு.எல்ப் எஸ்லொங்கடன் கருத்து வெளியிடுகையில்: 
'எர்டொகனின் ஆட்சியை கவிழ்த்து அரசை கைப்பற்ற சதி செய்வதாக பதுல்லாஹ்வை பின்பற்றுகின்றவர்கள் மீதும் அவருக்கு அதரவாக செயற்படும் பதுல்லாஹ் பயங்கரவாத அமைப்;பு  (குநுவுழு) என அரசாங்கத்தால்  பெயரிடப்பட்டுள்ள சமாந்தர அரச கட்டமைப்பு (Pனுலு) ஆதரவாளர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக  தற்போது அஞ்ஞாதவாசம் இருந்து வரும் சமயப் போதகர் பதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
எர்டொகன் பதவிக்கு வந்த போது பதுல்லாஹ் அவரின் தீவிர ஆதரவாளராகவே இருந்தார். ஆனால் அதிகமாக ஊழல்கள் இடம்பெற்று 2013ல் அவை பற்றிய தகவல்கள் மற்றும் அரசின் சட்டபூர்வமற்ற செயற்பாடுகள், முறைகேடுகள் இயலாமை என்பன வெளிவரத் தொடங்கியதும் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின. அதனைத் தொடர்ந்து புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் மீதும் ஏனைய இரகசிய பொலிஸ் பிரிவு உயர் அதிகாரிகள் மீதும் இந்த ஊழல்களை வெளியிட்டதாகக் கூறி தற்போது வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சதி முயற்சியொன்றில் இணைந்து பணியாற்றியதாகக் கூறி குலென் மீதும் வழக்குத் தொடரப்பட்டு அவர் இல்லாமலேயே விசாரணைகள் நடத்தப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமான தொழிற்சார் நிபுணர்கள், வர்த்கர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என குலெனோடு இணைந்து பணியாற்றிய பலர் வழமையான நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் மீது குலென் கொண்டுள்ள ஆளுமையும் செல்வாக்கும் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இது ஒரு சர்ச்சைக்குரிய சமயப் பிரிவைப் போல் காட்டப்பட்டு வருகின்றது.
இதேவேளை குலென் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி எர்டொகனால்; பலிக்கடாக்கள் போல் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று தான் நம்புவதாக எஸ்லொங்கடன் கூறுகின்றார். இவற்றின் விளைவாக துருக்கியில் நீடிக்கும் துயரங்கள் துருக்கி சமூகத்தில் பாரிய அளவில் மனிதாபிமான நெருக்கடிக்கு வழியமைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் ஒட்டு மொத்தமாக அடிப்படை சுதந்திரத்தின் நிலை மிக மோசமான கட்டத்துக்கு சென்று கொண்டிருப்பதாகவே எஸ்லொங்கடன் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் வரலாற்றில் மிக முக்கியமான இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதி எர்டொகனுக்கு தேவைப்படுவது மக்களின் ஒருமித்த ஆதரவு. முன்னொரு போதும் இல்லாத பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் அந்த நாடு முகம் கொடுத்துள்ள நிலையில் மக்கள் ஓரணியில் அவர் பின்னால் திரண்டிருக்க வேண்டியதே மிகவும் அவசியமானதாகும்.
இன்றைய சூழ்நிலையில ஜனாதிபதி; ஒரு சிறு குழுவை கூட பகைத்துக் கொள்வது  இந்த நாட்டை அழிவைநோக்கி இட்டுச் செல்லும் தற்கொலை முயற்சியாகவே கருதப்படும். சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி முஸ்லிம் நாடான துருக்கியில் அழிவை ஏற்படுத்தி அதன் வளங்களைச் சூறையாடி அந்த நாட்டையும் வெற்று பூமியாக்க காத்திருக்கும் சக்திகளிடம் இருந்து துருக்கி தேசம் பாதுகாக்கப்பட வேண்டும்.

மே தின ஏற்பாடுகள் தயார் - பாதுகாப்பும் தீவிரம்

மே முதலாம் திகதியான நாளை 130 ஆவது உலக தொழிலாளர் தினமாகும். உழைக்கும் வர்க்கத்தினரைக் கௌரவிக்கும் முகமாக இலங்கையிலும் கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனையிட்டு 18 மே தினக் கூட்டங்களும் 17 ஊர்வலங்களும் நாளை நடத்தப்படவுள்ளன. இதனையொட்டி கொழும்பு, காலி உட்பட நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக பாதுகாப்புக் கடமைகளில் 6,500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடத்தவுள்ள கூட்டம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் சுதந்திர தொழிலாளர் சங்கம், பெண்கள் மற்றும் இளைஞர்களின் சங்கங்களும் ஒன்றிணைந்து பங்குபற்றவுள்ளன.

“நாட்டை வெல்லும் கரம் உலகம் வெல்லும் நாளை” என்பதே சு.கவின் தொனிப்பொருளாகும்.

இந்த ஊர்வலமானது காலி அதிவேக பாதை ஆரம்பிக்கும் இடத்திலிருந்தும் மஹாமோதர பெரியாஸ்பத்திரிக்கு அருகிலிருந்தும் இரண்டு வழிகளில் சமனல விளையாட்டரங்கை நோக்கி வந்தடையவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு பொரள்ளை கெம்பல் மைதானத்தில் மே தின கூட்டத்தை நடத்தவுள்ளது. தேசிய தொழிலாளர் சங்கம், பெண்கள் மற்றும் இளைஞர்களின் சங்கங்கள் ஆகியன இதில் ஒன்றிணைந்து பங்குபற்றவுள்ளன. “அர்ப்பணிக்கும் மக்களுக்கு புதிய நாடு” என்பதே இவர்களின் தொனிப்பொருளாகும். இதற்கான ஊர்வலம் மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்திலிருந்து காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த ஊர்வலமானது சங்கராஜா மாவத்தை, எல்பின்ஸ்டன், மருதானை, புஞ்சிபொரளை, பொரள்ளை, பேஸ்லைன் வீதியூடாக கெம்பல் மைதானத்தை வந்தடையவுள்ளது. இந்தக் கூட்டம் பிற்பகல் 03 மணியளவில் ஆரம்பமாகும்.

ஜே. வி. பி. மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய தொழிற்சங்கங்கள் தெஹிவளை எஸ். டி. எல். ஜெயசிங்ஹ பாடசாலை அருகில் 12 மணிக்கு ஆரம்பமாகும். கட்சி தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பிரதான கூட்டம் நடைபெறும்.

மஹிந்த ஆதரவு அணியின் மே தின கூட்டம் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்புடன் கிருலப்பனையில் நடத்தப்பட இருக்கிறது. இதில் 10 கட்சிகளும் 100 தொழிற்சங்கங்களும் பங்குபற்ற உள்ளதோடு மஹிந்த ராஜபக்ஷ உட்பட 16 பேர் உரையாற்றவுள்ளனர். சாலிகா விளையாட்டரங்கி்ற்கு அருகில் ஊர்வலம் ஆரம்பமாகி கிருலப்பனை மைதானத்தை அடைய உள்ளது.

ஐக்கிய சோஷலிச கட்சியின் மே தின கூட்டம் கொஸ்கஸ் சந்தியில் மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.

சுயாதீன தொழிற்சங்க கூட்டணியின் மே தின கூட்டம் முத்தையா மைதானத்தில் நடைபெறும். 18 தொழிற் சங்கங்கள் இதில் பங்குபற்ற இருப்பதோடு கொள்ளுப்பிட்டியில் இருந்து மே தின ஊர்வலம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஜனநாயக கட்சியின் மே தின ஊர்வலம் ராஜகிரியவில் ஆரம்பமாகி புத்ததாஸ விளையாட்டரங்கை அடைய உள்ளது. 1.00 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும்.

தொழிலாளர் சகோதரத்துவத்தின் மே தின கூட்டம் கொள்ளுப்பிட்டி பொல்வத்தை மிகாயெல் ஆலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலமும் கூட்டமும் இன்று (30) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்ட் கட்சி மாற்றுக்குழுவும், சமசமாஜ கட்சி பெரும்பான்மையான குழுவும், தேசிய தொழிற்சங்க முன்னணியும் இணைந்து நடத்தும் மே தின கூட்டம் 3.00 மணிக்கு நுகேகொட ஆனந்த சமரசிங்க திறந்தவெளி அரங்கில் நடத்தப்படும். ஊர்வலம் 1.00 மணிக்கு நாரஹேன்பிட்டி பொலிஸ் ஆஸ்பத்திரிக்கு அருகில் ஆரம்பமாகும்.

முற்போக்கு சோசலிச கட்சியின் மே தின கூட்டம் பெஸ்ரியன் வீதியில் நடத்தப்படும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு புதிய நகர மண்டபத்திலும் தமிழ் முற்போக்கு முன்னணியின் கூட்டம் நுவரெலியா தலவாக்கலையிலும் தோட்ட ஊழியர் சங்க மே தின ஊர்வலம் மத்துகமயிலும் நடத்தப்படும்.

த. தே. கூ. இன் மே தின கூட்டம் எதிர்க் கட்சி தலைவரின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் மே தின கூட்டமொன்றை நடத்துகிறது.

எம். எஸ். பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்

"மகிந்த குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு, மைத்திரிபாலவிடம் மாத்திரமே இருக்கிறது"


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரமே இருப்பதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி விவகாரங்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கட்சி சார்ந்தவர்களை மஹிந்த ராஜபக்ச, நேசிப்பாராக இருந்தால், அதிகாரத்தின் மீதுள்ள ஆசையை கைவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

துரதிஷ்டவசமாக அவ்வாறான ஒரு நிலைமையை முன்னாள் ஜனாதிபதியிடம் காண முடியவில்லை எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.

அவர் தெரிவித்த கருத்து வருமாறு,

"ஏதோ ஒரு அதிஷ்டம் காரணமாக மைத்திரி வந்து கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ளார்.

ஆகவே கட்சியை பொறுபேற்றதன் பிரதிபலனை கட்சியும் கட்சியினரும் அனுபவிக்க செய்து, கட்சியை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால், முன்னாள் ஜனாதிபதி சற்று பின்நோக்கி சென்று, கட்சியை வழிநடத்திச் செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடமளிக்க வேண்டும்.

துரதிஷ்டவசமாக அவடவாறு இடம்பெறுவதில்லை. அதற்கு பிரதான காரணம் அதிகாரத்தின் மீதுள்ள ஆசையை அவர் இன்னும் கைவிடவில்லை என்றார்.

இந்தப் பள்ளிவாசலுக்கு உதவலாமே..!


காத்தான்குடி. 4 ம் குறிச்சி முஸ்த்தபாஹாஜியார் லேன் குபா பள்ளிவாசலே இது.

மக்கள் ஜும்மா தொழுகையை நிறைவேற்றுவதற்காக 29.04.2016 வந்தபோது பிடிக்கப்பட்ட படங்கள் இவை.

பள்ளி விஸ்த்தரிப்பு பணிக்காக நிறுவாகத்தால் உதவிகோறப்படுகிறது. உங்கள் பாவங்களை அழிக்ககூடிய ஸதக்கா ஜாரியாவை வழங்கி மறுமையில் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மாளிகையின் பங்குதாரர்களாக மாறுங்கள்.

அல்லாஹ் உங்களின் அமல்களை ஒப்புக்கொள்வானாக

தொடர்பு களுக்கு : 

தலைவர் குபா மஸ்ஜித் 0776184916

Amana bank account 

no :01100043333001 

Kattankudy branch


பிரிவதற்கு விருப்பமில்லை - இரட்டைச் சகோதரிகள் அறிவிப்பு


தாய்­லாந்தில் இடுப்புப் பகு­தியில் இணைந்து தம்­மி­டைய இரு கால்­களை பங்­கீடு செய்த நிலையில் ஒட்டிப் பிறந்த அபூர்வ 7 வயது இரட்டைச் சகோ­த­ரிகள், தாமாக கைக­ளையும் கால்­க­ளையும் பயன்­ப­டுத்தி நட­மா­டவும் ஆடை அணி­யவும் மாடிப் படி­களில் வேக­மாக ஏறி இறங்­கவும் முச்­சக்­க­ர­வண்­டியை செலுத்­தவும் கற்றுக் கொண்டு அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்தி வரு­கின்­றனர்.

பாங்­கொக்கின் வடக்கே சுமார் 250 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள நகொன் ஸவான் என்ற பிராந்­தி­யத்தில் வாழும் பின் மற்றும் பான் ஆகிய இந்த சிறு­மிகள் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

அந்த சிறு­மி­களை பிரிக்க முடியும் என மருத்­து­வர்கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்ள நிலையில், அவர்­களோ தொடர்ந்து பிரி­யாது ஒன்­றி­ணைந்து இருக்கவே விருப்பம் தெரிவித்துள் ளமை குறிப்பி டத்தக்கது.

அண்ணன் மைத்திரி பக்கம், தம்பி மகிந்த பக்கம் - இது நீர்கொழும்பு அரசியல்


நீர்கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளான லான்சா தரப்பினர் மேதினக் கூட்டத்தின் போது பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் செயற்பாட்டில் இறங்கியுள்ளனர்.


கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தீவிர ஆதரவாளராக இருந்த போதும் நல்லாட்சி அரசாங்கத்தில் அவருக்கும் பிரதியமைச்சுப் பதவியொன்று கிடைத்திருந்தது.

இதன் காரணமாக மைத்திரி தரப்பில் இணைந்து செயலாற்றும் அவர் மேதினக் கூட்டத்தின் போதும் காலியில் நடைபெறும் மைத்திரி தரப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

நிமல் லான்சாவின் தம்பியான தயான் லான்சா, தனது அண்ணணின் செல்வாக்கில் கட்சியின் மூத்த அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு அண்மையில் நீர்கொழும்பின் பிரதி முதல்வர் பதவியை பிடித்துக் கொண்டிருந்தார்.

எனினும் தொடர்ந்தும் மஹிந்த தரப்பை ஆதரித்த அவர் நாளை நடைபெறவுள்ள மேதினக் கூட்டத்தின் போது தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு கிருலப்பனையில் நடைபெறும் கூட்டு எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

கொழும்பில் சில வீதிகள் மூடப்படும், தெற்கு அதிவேகப் பாதையிலும் விசேட வசதிகள்

மேதினத்தை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகளில் இன்றிரவு முதல் வாகனம் நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம் சங்கராஜ மாவத்தை( ஆமர் வீதி), மாளிகாவத்தை வீதி, ஜயந்த வீரசேகர மாவத்தை, பஞ்சிகாவத்தை வீதி, தொடக்கம் மருதானை மேம்பாலம் வரையான பகுதியில் வாகனங்கள் நிறுத்த முடியாது.

மருதானை வீதி தொடக்கம், மருதானை பாலத்திலிருந்து பொரளை வரையான வீதி, ஆனந்த ராஜகருணா மாவத்தையில் புஞ்சி பொரளை தொடக்கம் வெலிக்கடை சிறைச்சாலை வரையான பகுதி, பூங்கா (உத்தியான) மாவத்தையில் மருதானை தொடக்கம் பேஸ்லைன் வீதி வரையான பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக ஆமர் வீதி, பேஸ்லைன் வீதி, ஹைலெவல் வீதியில் நுகேகொடை தொடக்கம் டிக்மன் வீதி வரையான பகுதி, பார்க் வீதி, கிருல வீதி ஆகிய பிரதேசங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு தொடக்கம் மேதினக் கூட்டங்கள் முடிந்து பொதுமக்கள் முற்றாக கலைந்து செல்லும் வரை இந்தத் தடை உத்தரவு அமுலில் இருப்பதுடன், இப்பிரதேசங்களில் போக்குவரத்துப் பொலிசார் விசேட கடமைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

2

மேதினத்தை முன்னிட்டு தெற்கு அதிவேகப் பாதையில் விசேட வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக அதன் செயற்பாட்டு முகாமையாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

மேதினக் கூட்டங்களுக்கு பயணிகளை ஏற்றி வரும் பேரூந்துகளை முன்னிட்டு இந்த விசேட வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.

அதிவேகப் பாதையின் கட்டணம் அறவிடும் மையங்களில் மேதினக் கூட்டத்துக்காக பொதுமக்களை ஏற்றிச் செல்லும் பேரூந்துகள் வரிசையில் நிற்க வேண்டியிராது என்றும், அதற்காக விசேட உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு தனியான நுழைவு வாயிலூடாக குறித்த பேரூந்துகள் செல்ல வழியேற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளைய மேதினக் கூட்டங்களை முன்னிட்டு பெருமளவான வாகனங்கள் தெற்கு அதிவேகப் பாதையை பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

"லா - நினா" இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா..?


பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட, எல் நினோ எனப்படும் வெப்ப சலனத்தின் தாக்கத்தினால், பெரும்பாலான ஆசிய நாடுகள் கடும் வெப்பம், மற்றும் வரட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் லா –நினா என்ற குளிர் சலனத்தின் பிடியில் சிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கிய  எல்-நினோ கால நிலை மாற்றத்தினால், பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. இந்தியா, சிறிலங்கா போன்ற நாடுகளில் கடுமையான வெப்பம் வாட்டியெடுக்கிறது.

உலகில் மிக அதிகளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

சீனாவில் உற்பத்தியாகி, 6 தெற்காசிய நாடுகள் வழியாக ஓடும் மேகாங் ஆற்றில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் குறைந்து போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் வறட்சியும், உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், எல் நினோவின் தாக்கம், இந்த ஆண்டு நடுப்பகுதியில் குறைந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள், அதனைப் பின்தொடர்ந்து லா -நினா’ என்ற குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எச்சரித்துள்ளனர்.

லா- நினா’ காரணமாக, கடுமையான மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்றும்,  இதனால், ஏற்கனவே வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய உற்பத்தி, மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. உதவிச் செயலர் ஸ்டீபன் ஓபிரையன் கூறுகையில்,

இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் லா-நினா, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். எல்-நினோவினால்  ஏற்பட்ட பாதிப்புகளைவிட அது மிகக் கடுமையானதாக இருக்கக் கூடும்.

எல்-நினோவினால் ஏற்கெனவே உலகம் முழுவதும் 6 கோடிமக்கள்  அவசர நிவாரண உதவிகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், லா-நினாவால் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

லா- நினா காலநிலை மாற்றத்தினால், கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிறிலங்கா, இந்தியாவில் கடும் குளிரான கால நிலை காணப்பட்டதுடன், அதனால் பலர் இறக்கவும் நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.

உடனடியாக அமைச்சரவையில் மாற்றம் - மைத்திரி

உடனடியாக அமுலக்கு வரும் வகையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய -29- தினம் காலியில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்த அமைச்சரவை பதவி மாற்றங்களில் முக்கிய அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட மிக முக்கியமான அமைச்சர் ஒருவர் பதவி இழக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக தெளிவுப்படுத்துமாறு, பிரதமர் ரணில் உத்தரவு

நாடாளுமன்ற உள்ளக செயற்பாடுகள் தொடர்பில், ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்தமை தொடர்பில் உடனடியாக தெளிவுப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஊடக மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிமல் போபகேவுக்கு கட்டளையிட்டுள்ளார். 

அத்துடன் எதிர்வரும் 2ஆம் திகதியன்று, அலரிமாளிகைக்கு வந்து தன்னை சந்திக்குமாறும் பிரதமர் கட்டளையிட்டுள்ளார். 

April 29, 2016

இஸ்லாம் விடுக்கும், மே தினச் செய்தி

அன்வர் (ஸலபி)

உலகளவில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும் தொழிலாளர் தினமானது தொழிலாளர்களின் கோரிக்கைகள், உரிமைகள், சம்பள உயர்வு, அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள், அவலங்கள் என்பவற்றை முதலாளி வர்க்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக அமைகிறது. ஆனால் துரதிஷ்டம் யாதெனில் அன்றைய தினம் கடந்தவுடன் தொழிலாளிகளின் எந்த கோரிக்கைகளையும் முதலாளி வர்க்கம் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எனவேதான் இச்சந்தர்ப்பத்தில் உலக வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் தொழிலாளிகளின் உரிமைகள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அவசியமாகும்.

இஸ்லாம் பேசுகின்ற உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்டு நபியவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டவை: அவை ஏதோ ஓர் அரசினாலோ அல்லது சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவையல்ல: மனித உரிமைகள் சாசனம் ஒன்றை இந்த உலகில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது இஸ்லாம். உலகிலுள்ள அத்தனை உயிரினங்களுக்கும் உரிமைகளையும் கடமைகளையும் வகுத்தளித்திருக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம். இறையச்சத்தை அளவீடாக வைத்து இனம்,  நிறம், மொழி, பிரதேசம் ஆகிய வேறுபாடுகளையும் தாண்டி மனித சமத்துவத்தை நிலை நாட்டும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.

01. தொழில் உரிமை (right to work)

அனைத்து படைப்பினங்களிலும் அல்லாஹ் மனிதனையே உயர்வாகப் படைத்துள்ளான். தனக்குறிய தேவைகளைத் தேடிப் பெற்று உழைத்துச் சம்பாதிப்பதற்காக உடல் உறுப்புக்களைக் கொடுத்திருக்கிறான. கை கால்கள் நல்ல நிலையில் உள்ள ஒருவன் எந்த நிலையிலும் உழைக்காமல் சோம்பேறித்தனத்துடன் வாழ்வதையும் யாசகம் கேற்பதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதற்கான வழிகாட்டல்களை அல்-குர்ஆன் அல்-ஹதீஸில் நாம் காணலாம்.

பின்னர் (ஜம்ஆத்) தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப்) புமியில் பரவிச்சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். (63-10)
நாம் அவருக்கு (தாவூதுக்கு) இரும்பை மிருதுவாக்கியிருந்தோம் (மேலும் நிறைவான போர்க்கவசங்களைச் செய்வீராக அவற்றின் வளையங்களில் (அளவை) ஒழுங்குபடுத்துவீராக’ என்றும் கூறினோம் (34-10,11)

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்துகொண்டு விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்டு வாழ்வதை விடச் சிறறந்ததாகும். (புகாரி-3406)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மர்ருழ் ழஹ்ரான்) என்னுமிடத்தில் அராகான் (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பரித்துக் கொண்டிருந்தோம். “நபி (ஸல்) அவர்கள் அதில் கருப்பான பழத்தைப் பறியுங்கள் ஏனெனில் அவற்றில் அதுதான் நல்லது என்று கூறினார்கள்” மக்கள் நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா? எனக கேட்டார்கள் அதற்கு அவர்கள் ஆடு மேய்க்காத இறைத்தூதர் யாரேனும் உண்டா? என பதிலளித்தார்கள். (புகாரி-3406) ஆக நபி (ஸல்) அவர்கள் உற்பட அனைத்து நபிமார்களும் ஆடு மேய்த்திருக்கிறார்கள் ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

02. தொழிலாளர்களை கண்ணியமாக நடத்துதல் வேண்டும்: (right to honour)
தொழிலாளர்களை மரியாதையுடனும், மனிதாபிமானத்தோடும் அணுக வேண்டும்: அவர்களும் மனிதர்கள் அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ அவர்களது சுய கொளரவத்தை பாதிக்கும் வகையிலோ நடத்தாது சகோதரத்துவ வாஞ்சையோடு நடத்த வேண்டும். அல்லாஹ் நாடினால் தான் விரும்பியவரை உயர்ததுவான். தான் விரும்பியவரை தாழ்த்துவான் ஒரு நொடிப் பொழுதில் ஒரு செல்வந்தனை ஓட்டாண்டியாகவும் ஒரு ஓட்டாண்டியை செல்வந்தனாகவும் மாற்றும் வல்லமை மிக்கவன் அல்லாஹ்.

நபி (ஸல்) அவர்களுக்கு பணியாளராக கடமையாற்றிய அனஸ் பின் மாலிக் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள் “நான் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணியாளராக தொழில் புரிந்தேன் (என் மனம் புண்படும் படி) சீ என்றோ (இதை) ஏன் செய்தாய் என்றோ நீ (இதை) இப்படிச் செய்திருக்கக் கூடாதா? என்றோ அவர்கள் எனக்குச் சொன்னதில்லை. (புகாரி-6038)

இந்த வகையில் முதலாளிகள் தமது தொழிலாளிகள் ஏதும் தவறுகள் விடுகின்ற போது அல்லது அவர்கள் புறத்தில் ஏதும் குறைபாடுகள் நேரிடும் போது அவர்களை திட்டுவதோ, ஏசுவதோ, தண்டிப்பதோ, சித்திரவதை செய்வதோ கூடாது. மாறாக அவ்வேளைகளில் அவர்களின் நிறைகளை கவனத்திற்கொண்டு அன்பு காட்ட வேண்டும்: அவர்கள் விட்ட தவறுகனை முறையாக திருத்த வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் துதரே! எனது பணியாளரிடம் ஏதும் தவறுகளைக் காணும் போது அவரிடம் எத்தனை முறை மண்ணிப்பை மேற்கொள்ள எனக் கேட்டார்? அதற்கு நபி (ஸல்) அவர்கள் மொளனமாக இருந்தார்கள் அதற்கு அம்மனிதர் மீண்டும் அவ்வாறே கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளும் எழுபது முறைகள் மண்ணிப்பை மேற்கொள்வீராக என பதிலளித்தார்கள். (திர்மிதி)

03.தொழிலாளர்களின் உடல் நலன் பற்றி கவனம் செலுத்துதல் (right to good health)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “உங்களில் ஒருவரிடம் அவரது பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால்! அவர் அப்பணியாளரைத் தம்முடன் அமர வைத்துக் கொள்ளட்டும் அவ்வாறு அவரை அமர வைத்துக்கொள்ளாவிடினும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும் ஏனெனில் அதனை அவர் சமைக்கும் போது அதன் வெப்பத்தையும், அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். (புகாரி-5640)

மஃரூர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “நான் அபு தர் (ரழி) அவர்களை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ரபதா என்ற இடத்தில் சந்தித்தேன் அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் அதே போல் அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடை கிடப்பதையும் கண்டேன் அப்போது (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி நான் அவரிடம் கேட்டதற்கு (நான்) ஒரு முறை ஒருவருக்கு ஏசிவிட்டு அவரின் தாயைப் பற்றியும் குறை கூறிவிட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் “அபு தர்ரே! அவரையும் அவரது தாயையும் சேர்த்து குறை கூறிவிட்டீரே! அறியாமைக் கால பழக்கம் குடி கொண்டுள்ள மனிதராகவே இருக்கிறீர்! உங்களின் அடிமைகள் உங்களின் சகோதரர்கள் அல்லாஹ்தான் அவர்களை உங்களின் அதிகாரத்திற்கு கீழ் வைத்திருக்கிறான்! எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால்! தான் உண்பதிலிருந்து அவருக்கும் உண்ணக் கொடுக்கட்டும். தான் அணிவதிவதிலிருந்து அவருக்கும் அணியக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை கொடுத்து அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு நீங்கள் அவர்களை சிரமமான பணியில் அவர்களை ஈடுபடுத்தினால் அவர்களுக்கு நீங்கள் உதவியாய் இருங்கள் எனக் கூறினார்கள். இதனால்தான் நான் அணிவதைப் போல என் அடிமைக்கும் அணியக் கொடுத்தேன் என அபூதர் (ரழி) அவர்கள் கூறினார்கள். (புகாரி-30)

04. பணியாளர்கள் செய்ய முடியாத, சுமக்க முடியாத பணிகளை அவர்கள் மீது சுமத்துவது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும் (right to good physical). 

ஒவ்வொரு முதலாளியும் தன் கீழ் பணிபுரியும் தொழிலாளிகள் இயந்திர மனிதர்கள் அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். தான் அவர்கள் மீது சுமத்தும் பணிகள் அவர்களால் நிறைவேற்றப்பட சாத்தியமானவையா என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

“அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு நீங்கள் அவர்களை சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு உதவியாயிருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் அடிமை விடயத்தில் கூறினார்கள். (புகாரி-30)

05. உரிய நேரத்திற்கு ஊதியம் வழங்குதல் (right to wage)
“வியர்வை உலரமுன் பணியாளரின் கூலியை கொடுத்து விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதி-11434). அதாவது முதலாளி தன் பணியாளரிடமிருந்து தேவையான பணிகளை வாங்கிவிட்டு உரிய கூலியை கொடுப்பதில் இழுத்தடிப்புச் செய்வதோ மோசடி செய்வதோ கூடாது. “மறுமை நாளில் நான் மூன்று பேருக்கு எதிராக வாதாடுவேன் ஒருவர் சுதந்திரமான ஒருவனை அடிமையாக்கியவன் மற்றவர் வாக்குறுதி மீறியவர் (மூன்றாமவர்) ஒரு பணியாளரை கூலிக்கமர்த்தி, அவனிடமிருந்து வேலை வாங்கிவிட்டு அவனது கூலியை வழங்காதிருந்தவர். (புகாரி-2270)

தவிர தொழிலாளிகள் தமது உரிமைகள் தொடர்பில் குரல் கொடுக்கும் அதே நேரம் தமது கடமைகள் பொறுப்புக்கள் குறித்தும் பிரக்ஞையோடு இருத்தல் வேண்டும். அந்தவகையில் ஒவ்வொரு தொழிலாளியும் தான் செய்யும் தொழிலை வணக்கமாக பார்க்க வேண்டும். பொதுவாக இன்று எல்லா மதங்களும் உழைப்பை உலகில் பணத்தையும் பொருளையும் சம்பாதிப்பதற்கான வழிகளாகவே பார்க்கின்றன. மாறாக இஸ்லாமிய மார்க்கம் வாழ்வே வணக்கம் என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறது. ஒருவர் தொழுகை, நோன்பு, போன்ற இபாதத்களில் இருப்பது போல தொழிலில் ஈடுபடும் போதும் வணக்கத்திலே இருக்கிறார்.

“ உங்கள் (பணிகளை) திறன்படச் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (தம் பணியை) திறன்படச் செய்பவர்களை நேசிக்கிறான்” (02-195). எனவேதான் ஒவ்வொரு முதழிலாளியும் தன் கீழ் பணிபுரியும் தொழிலாளிகளின் உரிமைகளைப் பேணுகின்ற அதே வேளை ஒவ்வொரு தொழிலாளியும் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் கவனத்திற்கொண்டு செயற்பட்டால் நிச்சயம் இம்மையிலும், மறுமையிலும் பல நன்மைகளைப் பெறலாம்.

யா அல்லாஹ் என் வாழ்க்கையிலும், இதனைப்போல பறக்கத் செய்திடுவாயாக (உண்மைச் சம்பவம்)

(பேஸ்புக்கில் கிடைத்தது)

அன்று விடுமுறை நாள் என்பதால், நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பகல் சாப்பட்டிற்கு சென்று இருந்தேன்.

சமையல் அறையில் தான் உணவு உண்ணும் மேசையும் இருந்தது.

சாப்பிட அமர்ந்த போது சமையல் அறையில் உள்ள கப்பட்களில் இரண்டு இடங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், நான் எனது கனவனுக்காகவும், பிள்ளைகளுக்காயும் சமைக்கிறேன் என்ற ஒரு வாசகம் கானப்பட்டது.

இதைப் பார்த்து என் நண்பனிடம் என்ன இது எனக் கேட்க அவன் சொன்ன பதில்,

இது என் மனைவியின் வேலை எனக்கும் எம் பிள்ளைகளினதும் பசியை ஆற்ற தான் சமைப்பதை ஒரு இபாதாத் ஆக நினைத்து செய்கிறாள். அதே போல் உண்ணும் உணவினைக் கொண்டு வரக் கூடிய எந்த நோய்களும் எமக்கு வந்து விடக் கூடாது எனும் பிரார்த்தனையுடன் பிஸ்மில் சொல்லி தான் தினமும் சமைக்க ஆரம்பிப்பாள்,

இந்த வாசகத்தினை ஒட்டி வைத்தால் அவளுக்கு துஆ செய்வது மறக்காது என்றும் வீடு வரும் உறவினர்கள் நன்பர்கள் போன்றவர்கள் இது என்ன என்று நிச்சயம் கேட்பார்கள் அவர்களுக்கும் இதனை சொல்லிக் கொடுக்கலாம் எனும் நோக்கில் ஒட்டி வைத்து உள்ளால், அவளின் ஆசைப்படி இன்று உனக்கும் சொல்லியாச்சு என்று நண்பன் சொல்லி முடிக்கும் போது.  இறைவா என் வாழ்க்கையிலும் இதனைப் போல் பரக்கத் செய்து விடுவாயாக இந்த சகோதரிக்கும், இவள் குடும்பத்திற்கும் பரக்கத் செய்திடுவாயாக என்று எனக்குள் துஆ செய்து கொண்டேன்

நன்றி : பர்ஹான் முஹம்மட்


Newer Posts Older Posts Home