Header Ads



உலகில் அதிகம் வாசிக்கப்படுவது குர்ஆன், பைபிள் வாசிப்பு குறைகிறது - யுனெஸ்கோ தகவல்..!


கடந்த 20 வருடங்களாக மேற்குலகம் பைபிள் வாசிப்பதை புறக்கணித்து வருவதாக 'யுனெஸ்கோ' உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் கூறியுள்ளன.

இன்றைய உலகில் அதிகம் வாசிக்கப்படும் நூலாக திருக்'குர்ஆன்' இருப்பதாகவும், அதே வேளையில், உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

'யுனெஸ்கோ' வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 20, 25 ஆண்டுகளாக மேற்குலக கிருஸ்தவர்களிடம் 'பைபிள்' வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து வருவதே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில் திருக்'குர்ஆன்' வாசிக்கும் பழக்கம் முஸ்லிம், முஸ்லிம் அல்லாத மக்கள் என அனைவரிடமும் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட 158 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள குர்ஆன் அதிகம் வாசிக்கப்படும் நூலாக இருக்கிறது.

இஸ்லாமிய வழிபாடுகள் அதிகரித்து வரும் வேளையில், கிறிஸ்தவர்களின் வழிபாடுகள் மிகவும் குறைந்து வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் சர்ச்சுகளுக்கு மக்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்படும் சூழல் இருப்பதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

3 comments:

  1. Bible read panrathu innum kurayum. Bcoz ithu kadaisi naatkal. Bible la ullathu ethuvo athu nichayam niraiverum.

    ReplyDelete
  2. Quan is true and straight path from Allah for human beings and it remain till the world demolish. Most of the peoples read the Quran and converto Islam, not by miracle. Alhamdulillah...

    ReplyDelete

Powered by Blogger.