Header Ads



"சந்திரிக்காவுக்கு தலை, குழம்பிப் போயுள்ளது"

1996 ஆம் ஆண்டு குண்டு தாக்குதலை எதிர்கொண்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு தலை குழம்பிப் போயுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வெடி குண்டின் துகள்கள் இன்னும் அவரது தலையில் இருக்கின்றன. இதனால், ஏற்பட்டுள்ள நோய் காரணமாக அவர் நினைத்ததை எல்லாம் பேசி வருகிறார் எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இவர்களை போன்றவர்களுக்கு கௌரவத்தை வழங்கி ஒதுக்கி வைத்து விட வேண்டும். கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் அல்லாத திருடர்கள் வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில கூட்டங்களில் தெரிவித்துள்ளார்.

கூட்டத்திற்கு வந்தவர்கள் திருடர்கள் என்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால், அப்படியான கூட்டத்தை நடத்தி காட்டுமாறு சவால் விடுக்கின்றேன். அதேபோல், 17 ஆம் திகதி நடந்த கூட்டத்தில் நான் தடுக்கி விழுந்தது தொடர்பில் அனைவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

என்னை திரையில் காட்டாத தொலைக்காட்சிக்கு கூட நான் தடுக்கி விழுந்ததை ஒளிப்பரப்பியது. விழுந்து எழும் கௌரவம் எனக்கு உள்ளது.

கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரின் வெற்றிக்காக முன்னின்று செயற்பட்ட மாதுளுவாவே சோபித தேரர், பிற்காலத்தில் அரசாங்கம் மீது அதிருப்தியில் இருந்தார்.

சோபித தேரரின் மரணம் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.