Header Ads



உறங்கிய பாய்க்கு கூட சொல்லாமல் UNP டன் இணைந்த மைத்திரி, தீர்மானத்தையும் தீயிட்டு கொளுத்தினர்


ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி கட்சியின் தீர்மானத்திற்கு பலத்த எதிர்ப்பு வௌியிட்டனர். 

வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உதேனி அத்துகோரல, மகரகம நகரசபையின முன்னாள் தலைவர் காந்தி கொடிகார, பொரலஸ்கமுவ நகர சபையின் முன்னாள் தலைவர் அருண பிரியசாந்த, அத்தனகல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிரியந்த புஷ்பகுமார, கம்பஹா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரஞ்சித் குணவர்தன, மீரிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சனத் நந்தசிறி உள்ளிட்டவர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கல்லாமல் அதனை பாதுகாப்பதற்கு உரமளித்த மஹிந்த ராஜபக்‌ஷவை பாதுகாப்பது தமது உறுப்புரிமைகள் நீக்கப்படுவதற்கு காரணமா என்று அவர்கள் வினவியிருந்தனர். 

மைத்திரிபால சிறிசேன உறங்கிய பாய்க்கு கூட கூறாமல் சென்று ஐதேக வுடன் இணைந்து கொண்டு கட்சியை இரண்டாக பிளவுபடுத்தியதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். 

இதன்போது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக 14 நாட்களுக்குள் விளக்கமளிக்க கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை, வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தீ வைத்து கொழுத்தினார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எடுக்கும் முடிவு எதுவோ அதன்பக்கமே தாம் தொடர்ந்தும் இருக்கப் போவதாகவும் மேலும் காலம் தாழ்த்தாமல் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை அரசாங்கம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். s

1 comment:

  1. 'பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னுமாம் சாத்திரங்கள்' என்பதற்கிணங்க, மகிந்தரின் எதேச்சார அரசில் ஒட்டிக்கொண்டு இருந்தவர்கள்தான் நீங்கள்.

    ஆனால் கட்சியின் செயலாளராக இருந்தபடியே கட்சிக்கும் நாட்டின் பொருளாதாரம், நீதித்துறை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கும் களங்கம் ஏற்படுத்திவந்த மகிந்தரின் வெள்ளைவேன் கலாசாரத்தைப் புரிந்துகொண்டு மக்களுக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் சாதுரியமாக சரியான தருணத்தில் கழன்றுவந்து தீர்க்கமான முடிவை எடுத்து நமது நாட்டிற்கு இரண்டாவது சுதந்திர தினத்தை உருவாக்கியவர்தான் திரு.மைத்திரிபால.

    அவர் உங்களைப்போல ஒருபோதும் கீழ்த்தரமாக நடந்துகொள்ளவில்லை. அவரோடு உங்களை ஒப்பிடுவதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் நகைச்சுவை!

    ReplyDelete

Powered by Blogger.