Header Ads



மனைவியின் பிரசவத்திற்கு விடுமுறை அளிக்க மறுப்பு, பதவியை ராஜினாமா செய்த Mp

ஜப்பான் நாட்டில் முதன் முறையாக குழந்தை பெற்ற மனைவியை கவனித்துக்கொள்ள ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க மறுத்ததால் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டில் சுதந்திர ஜனநாயக கட்சியில் Kensuke Miyazaki(34) என்பவர் உறுப்பினராக மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினராகவும்(MP) செயல்பட்டு வருகிறார்.

இவரும் இதே கட்சியில் உறுப்பினராக உள்ள பெண் அரசியல்வாதியான Megumi Kaneko என்பவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துக்கொள்ளாமல் கணவன் – மனைவி போல் சேர்ந்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் மனைவி கர்ப்பம் ஆகியுள்ளார். மனைவிக்கு முதல் குழந்தை பிறக்கபோவதால், அதற்கு பிறகு அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என எம்.பி முடிவு செய்துள்ளார்.

ஜப்பான் நாட்டு சட்டப்படி, மனைவிக்கு பிரசவம் ஆனால், அவரை கவனித்துக்கொள்ள கணவருக்கு 60 சதவிகித ஊதியத்துடன் 52 வாரங்கள் விடுமுறை அளிக்கப்படும்.

இவ்வேளையில், கடந்த 5ம் திகதி எம்.பியின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து, தனக்கு ஊதியத்துடன் கூடிய 52 வாரங்கள் விடுமுறை வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பான் நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக அரசியல்வாதியான இவர் மட்டுமே இந்த கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், எம்.பியின் இந்த கோரிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான Renho என்பவர் பேசுகையில், ‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களுக்காக சேவை செய்ய தெரிவு செய்யப்பட்டுருக்கிறார்கள்.

இந்த 52 வாரங்களுக்கு தான் மக்களுக்கு சேவை செய்யாமல் விடுப்பில் இருப்பேன் என Kensuke Miyazaki கூறுவது வேதனை அளிக்கிறது.

நாம் தான் மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், பொதுமக்கள் இடையே தனக்கு இருக்கும் முக்கியக் கடமைகளை மறந்துவிட்டு விடுமுறையை கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி அந்நாட்டு ஊடகங்களும் எம்.பியின் கோரிக்கைக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வந்தன.

இதனால் வேதனை அடைந்த Kensuke Miyazaki ‘தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், இதற்காக தான் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும்’ இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

பிரசவ கால விடுமுறையை அளிக்க மறுத்ததால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை Kensuke Miyazaki ராஜினாமா செய்துள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.