Header Ads



மகிந்த ராஜபக்ச, தெரிந்தா பேசுகிறார் - மைத்திரி கேள்வி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயருடன் செய்து கொள்ளப்பட்ட மேல் நாட்டு உடன்படிக்கை பற்றி தெரிந்தா பேசுகிறார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

பொலன்நறுவை வெலிகந்த பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வந்த யோசனைக்கு இலங்கை ஆதரவு வழங்கியமையானது 1815 ஆம் ஆண்டு மேல் நாட்டு உடன்படிக்கைக்கு இணையானது என மகிந்த ராஜபக்ச அண்மையில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல போகின்றனர் என்று கதறியவர்களை எமது அரசாங்கமே காப்பாற்றியது எனக் கூறியுள்ளார்.

1 comment:

  1. எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று அலைவதுபோல எதையாவது செய்து அல்லது பேசி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும்(பகல்)கனவோடு அலைபவர்தானே மகிந்தர்.

    நக்குகின்ற இரண்டெழுத்து தெருவிலங்குக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் பேதம் தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.