Header Ads



ஒட்டுமொத்த நாட்டையும், மீண்டும் கைப்பற்றுவதாக ஆசாத் சபதம்

சிரியாவில் போர்க்குற்றங்கள் நடப்பதாக ஐ.நா. கூறிய குற்றச்சாட்டை அதிபர் ஆசாத் மறுத்துள்ளார். 

சிரியாவில் அதிபர் பசார் அல் ஆசாத்தின் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சிப் படைகளுக்குமிடையே உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. தீவிரவாத இயக்கங்கள் மீது ரஷ்யாவின் விமானப்படையும் குண்டு வீசி தாக்குதல் நடத்துகிறது. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். எனவே, சிரியாவில் தொடர்ந்து அமைதியற்ற சூழ்நிலை காணப்படுகிறது. 

இந்நிலையில், சிரியாவில் உள்ள சிறைகள் மற்றும் தடுப்பு மையங்களில் உள்ள கைதிகளை ஆசாத்தின் அரசாங்கம் ஒட்டுமொத்தமாக அழிப்பதாக கூறி ஐ.நா. சமீபத்தில் கண்டனம் தெரிவித்தது. மேலும், அதிபர் ஆசாத்தின் ஆட்சியில் போர்க்குற்றங்கள் நடப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தது. 

இதனை நிராகரித்துள்ள அதிபர் ஆசாத், இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், அவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும் குறிப்பிட்டார். 

அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய அவர், தீவிரவாதத்துக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்தி ஒட்டுமொத்த நாட்டையும் மீண்டும் கைப்பற்றுவதாக சபதம் செய்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

1 comment:

  1. முழு நாடே இரத்தவெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில்...இரத்தக் காட்டேரியன் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுகிறான்....
    யா அல்லாஹ் இவனை நரகத்தின் எறிகட்டைகளாக ஆக்கிவிடு...

    ReplyDelete

Powered by Blogger.