Header Ads



கூட்டு எதிர்க்கட்சியினர் இனவாத கருத்துக்களை, மாத்திரமே முன்வைக்கின்றனர் - டியூ

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து வேறு கட்சியை ஏற்படுத்தும் தீர்மானமானது நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்லும் தீர்மானம் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்கும் நடவடிக்கைக்கு தமது கட்சி ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

வேறு ஒரு கட்சியை ஆரம்பித்து அதன் தலைமைத்துவத்தை பெறும் நபருக்குபு நன்மை ஏற்படுமேயன்றி, இந்த தீர்மானத்தினால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.

புதிய கட்சி தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வரும் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ஸ ஆகிய இருவரும் கடும் இனவாதிகள் என்பதால், புதிய கட்சியானது எந்த விதத்திலும் கம்யூனிச மற்றும் முற்போக்கான கொள்ளைகளுடன் செயற்படாது.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்க வேண்டிய விமர்சனங்கள் இருந்தாலும் எதிர்க்கட்சி அணியினர் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக இனவாத கருத்துக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றனர் எனவும் முன்னாள் அமைச்சருமான டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Well comrade, When did you change your camp?You seem to be a cat on the wall(mathil meal poonai).

    ReplyDelete
  2. ஊத்தை அரசியல் மட்டுமே தெரிந்தவர்கள் ஒன்றாக சேர்ந்தால், தெரிந்ததைத்தானே பேச முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.