Header Ads



உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, வாஸ் குணவர்த்தனவின் மனைவி அறிவிப்பு

கொலைக்குற்றச்சாட்டின்பேரில் வாஸ்குணவர்த்தன உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவரது மனைவி அறிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட்சியாமை கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன , அவரது மகன் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட ஆறுபேருக்கு எதிராக மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாஸ் குணவர்த்தனவின் மனைவி ஷியாமலி குணவர்த்தன இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதில் கருத்துத் தெரிவித்திருந்த அவர், வாஸ் குணவர்த்தன உள்ளிட்டோருக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன் இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதுடன், தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாஸ் உள்ளிட்டோரை பாதுகாக்கவும் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கவும் தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.