Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக, பொறியியல் பீடம் மூடப்படாது - ரணில் உத்தரவாதம்

(மு.இ. உமர்அலி)

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் சம்மந்தமாக வெளியாகியுள்ள செய்திகள் சம்மந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் ரவுப் ஹகீம் உட்பட அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பைசால் காசிம்,  எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் பெந்தோட்டை தாஜ் ஹோட்டலில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒரு நாள் வதிவிட செயலமர்வின் போது உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பிரதம மந்திரி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் மேற்படி பிரச்சினை பற்றி பிரஸ்தாபித்தனர். 

இதனை உன்னிப்பாக செவிமடுத்த பிரதமர் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு கற்கை நெறியும் தென்கிழக்கு பல்கலைக்கழத்திலிருந்து நிறுத்தப்படமாட்டாது. மாறாக அங்கு நிலவுகின்ற குறைபாடுகள் அனைத்தும் உடனடியாக தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

எனவே, அரசியல் மட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்ற பொறியியல் பீடம் அபிவிருத்தி செய்யப்பட்டு மாணவர்களின் குறைபாடுகள் தீர்க்கப்படுவதற்கு இப்பிரதேச மக்களது பேராதரவை பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போதியளவு நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுத்து வருகின்றது.

2 comments:

  1. Allahu Akbar

    ReplyDelete
  2. Where is the Sainthamaruthu Local Government body which was also promised by these two ?
    How can we believe these two?

    ReplyDelete

Powered by Blogger.