Header Ads



தய்யிப் எர்டோகனை சந்திக்க மறுத்த விளாமிடிர் புட்டின்

ரஷ்ய போர் விமானம் துருக்கியில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் துருக்கி அதிபரை நேருக்கு நேர் சந்திப்பதற்கு ரஷ்ய அதிபர் மறுத்துவிட்டார்.

சிரியா அருகேயுள்ள ஐ.எஸ். அமைப்பு மீது தாக்குதல் நடத்த சென்ற ரஷ்ய போர் வீமானம், தனது நாட்டின் வான் எல்லையில் அத்துமீறி பறந்ததாகக் கூறி, துருக்கி அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இச்சம்பவத்தில் அந்த விமானத்தில் இருந்த ஒரு விமானி இறந்தார். இறந்த விமானியின் உடல் ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன்  ஆகியோர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபரை சந்திக்க, துருக்கி அதிபர் விரும்பினார். எனினும் அவரை நேருக்கு நேர் சந்திப்பதற்கு புதின் மறுத்துவிட்டதாக, ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.

இதனிடையே துருக்கி மீது ரஷ்யா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும், கடவுச்சீட்டு இல்லாமல் துருக்கியர்கள் ரஷியாவுக்கு வரும் நடைமுறை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. மறுபடியும் ரஷ்ய விமானங்கள் எமது எல்லைக்குள் வந்தால் மறுபடியும் தாக்குவோம், இறைவனை தவிர எவருக்கும் அடிபடிய மாட்டோம் என்று கோபமாய்க் கர்ஜித்தார் எர்துகான். தற்பொழுது மன்னிக்க வேண்டுகிறேன், இனி இப்படி தவறு நடைபெறாது, சந்திக்க விரும்புகிறேன் என்று எதார்த்தமாக நடக்கிறார்.

    ReplyDelete
  2. எர்துர்கான் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. அவரது நியாயமான கொள்கை அப்படியே உள்ளது. ஆனால், முஸ்லிம்கள் எப்போதுமே விட்டுக்கொடுப்புடனும், இணக்கப்பாட்டுடனும், சமத்துவத்தோடும் வாழ விரும்புபவர்கள் என்பதாலும், புட்டினின் தவறான எண்ணத்தை புரியவைப்பதற்காகவுமே புட்டினை சந்திக்க விரும்பினார். ஆனால் புட்டினிடம் இறுமாப்பும், பழிவாங்கும் எண்ணமும் இருப்பதால் அவரை மறுத்துவிட்டார்.

    அது மட்டுமல்லாது எர்துர்கானுக்கு எதிராக புதுப்புது கட்டுக்கதைகளையும் கட்டவிழ்த்து நிலவன், செல்வன், போன்றோரையும் சந்தோசப்படுத்துகிறார்... அவ்வளவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.