Header Ads



ரஷ்யா நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் - துருக்கி

ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே பகைமை வலுப்பெற்று வரும் நிலையில், ரஷ்யா நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு துருக்கி அரசு அறிவுறை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் தாக்கியதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

துருக்கியின் அடாவடி தனத்திற்கு எதிர்ப்பு காட்டும் வகையில், இரு நாடுகளுக்கு இடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள ரஷ்ய அரசு கடந்த வியாழக்கிழமை அதிரடியாக தடை விதித்தது.

ரஷ்யாவிற்கு பதலடி கொடுக்கும் வகையில், துருக்கி ஜனாதிபதி நேற்று பரபரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், ‘ரஷ்யா நெருப்புடன் விளையாடிவருகிறது’ என பகிரங்கமாக சாடியுள்ளார்.

இந்நிலையில், சற்று முன்னர் வெளியான செய்தியில், ‘ரஷ்யா நாட்டிற்கு மிக அவசர பயணங்கள் தவிர்த்து பொதுவாக அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டு பொதுமக்களுக்கு அறிவுறை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கி நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 170 பில்லியன் டொலர் வருமானம் அந்நாட்டு சுற்றுலா துறை மூலமாக கிடைக்கிறது.

மேலும், ரஷ்ய குடிமக்கள் துருக்கி நாட்டிற்கு சுற்றுலா செல்வதால், ஆண்டுக்கு 30 பில்லியன் டொலர் வரை துருக்கி நாட்டிற்கு வருமானம் கிடைக்கிறது.

ஆனால், இரு நாடுகளுக்கு இடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள ரஷ்ய தடை விதித்திருப்பது துருக்கி நாட்டின் வருமானத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. துருக்கிக்கு அள்ளாஹ் வழிகாட்டுவான்!

    ReplyDelete

Powered by Blogger.