Header Ads



"வெளியூர் அழகனைவிட, உள்ளூர் முடவன் சிறந்தவன்"


-S. Sabraz Nawaz-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது பீடமாக உருவாக்கப்பட்ட பொறியியல் பீடத்தைப்பற்றி சில இணையச் செய்தித் தளங்களில் பொறுப்பில்லாத முறையில் அடிப்படையும் ஆதாரமில்லாத செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றனவென்பது வருத்தத்திற்குரியதும் கண்டிக்கத் தக்கதுமான ஒரு சமகால உண்மையாகும். இவ்வாறான செய்திகளைப் பிரசுரிக்க முன்னர் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இவ்வாறான செய்திகளின் உண்மை நிலவரத்தையும் இற்றைத் தன்மையினையும் அறிந்து கொள்வது ஊடக தர்மமாகும்.

இந்த பொறியியல் பீடமானது வெறுமனே அரசியல்வாதிகளின் பரிந்துரைகள் மூலமோ அல்லது வேறு எந்தப் பின்கதவு வேலைகளாலோ பெற்றுக் கொள்ளப்பட்டதொன்றல்ல. பொறியியல் பீடமொன்றினைக் கொண்டுவர வேண்டும் என்று பல்கலைக் கழத்தின் வேந்தர் பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களிடமும் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களிடமு்ம் அடிமனதிலிருந்த தீராத ஆசையும் பொறியியல் பீடத்திற்கு அதிகமான மாணவர்களை உள்ளவாங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடும் காலத்தைக் கனியவைத்துக் கொடுத்ததன் மூலமாகவே இப்பீடத்தை இங்கு உருவாக்க வேண்டும் என்ற பேச்சையே ஆரம்பிப்பதற்கு வழிகோலியது.

இப்பீடத்தைப் பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுகளும் பிரேரனைகளும் உயர்கல்வி அமைச்சினாலும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவினாலும் நிபுணர்களின் மூலமாக ஆழமான, நேர்த்தியான முறையான மதிப்பீடுகளும் பரிசீலனைகளும் செய்யப்பட்டதன் பின்னர்தான் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்பட்டது. 

இதற்கான ஏராளமானவர்கள் இரவுபகல் பாராது அயராது உழைத்தனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது. பொறியியல் பீடம் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு வரக்கூடாதென்று உழைத்தவர்களும் வழங்கப்படுவதையறிந்து இது ஒலுவிலுக்குக் கொண்டு வரப்படாமல் அம்பாறைக்கோ அல்லது வேறு பகுதிக்கோ கொண்டு செல்லப்பட வேண்டும் என இரவுபகல் பாராது துரோகச் செயலில் ஈடுபட்டு சிற்றுள்ளங் கொண்ட அரசியல்வாதிகளும் தனவந்தர்களும் ஏராளமானோர். இறைவனின் நாட்டத்தாலும் இப்பல்கலைக் கழகத்தில் பாக்கியதை கொண்டோரது சுயநலமில்லாத உழைப்பினாலும் ஒலுவில் வளாகத்திற்கே இது கொண்டு வரப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்கள் சந்தர்ப்பம் காத்திருந்தனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பீடத்தினது பௌதீக மற்றும் மனித வளங்களானது பூரணத்துவமானதாக இருப்பதென்பது கற்பனைக்கெட்டாத ஒன்று. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபோது இடமேயில்லாமல் அட்டாளைச்சேனை அரசினர் கல்விக் கல்லூரியில்தான் பல்கலைக்கழகம் இயங்கிவந்தது. அச்சமயத்தில் எத்தனை விரிவுரையாளர்கள் கலாநிதிப்பட்டம் கொண்டிருந்தனர்? எத்தனை தட்டச்சு இயந்திரங்கள் இருந்தன? என்ன வசதிகள் இருந்தன? எத்தியாகம் செய்தேனும் படி்க்க வேண்டும் என்ற மாணவர்களும் எக்கஷ்டம் வந்தாலும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விரிவுரையாளர்களும்தான் இருந்தார்கள்.
தற்போது இப்பல்கலைக்கழகத்தின் நிலை என்ன? சர்வதேச ஆய்வரங்குகளை ஏனையவர்கள் வியக்குமளவிற்கு நடாத்திக் கொண்டிருக்கின்றது. எமது மாணவ வெளியீடுகள் இலங்கையில் மட்டுமல்லாத ஏனைய உலகநாடுகளிலெல்லாம் சிறந்துமிளிர்கின்றார்கள். இவர்களுக்கு எந்த industry exposure கிடைத்தது? 

இப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சமகால நிலையும் இப்பல்கலைக்கழகத்தின் ஆரம்பம்போன்றதுதான். முழுமையாக எல்லா வசதிகளும் கிடைப்பதென்பது ஆரம்பத்தில் சற்று கடினம் ஆனால் நாளடைவில் அது பூரணத்துவமடைந்துவிடும். பிறந்தவுடன் பிள்ளை ஓடிவிளையாட வேண்டுமென்று அடம்பிடிப்பது நியாயமற்றது.

தகவல் தொழில்நுட்பம் அளவுக்கதிகமான முறையில் வளர்ச்சியடைந்து காணப்படுகின்ற இக்காலகட்டத்தில் வருகைதரு விரிவுரையாளர்கள் ஒவ்வொரு நாளும் இங்குவந்துதான் கற்பிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்க வேண்டியதில்லை. செயல்முறை சார்ந்தவற்றைத் தவிர ஏனையவற்றை மெய்நிகர் விரிவுரையறைகள் மூலமாகவும் கொண்டு செல்லலாம். 

இப்பல்கலைக் கழகத்தின் பௌதீக மற்றும் மனித வளங்கள் தொடர்பான குறைபாடுகள் நீண்டகாலமாக முறைப்பாடுகளுக்கு உட்பட்டு வருகின்றதென்பது மறுக்க முடியாதது. ஆனால் அதனை ஒரு துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு அரசியல்வாதிகள் இப்பல்கலைக் கழகத்தினையும் இப்பிராந்தியத்தில் வாழும் மக்களையும் இரண்டாம் தரமானதாக நோக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் ஒலுவிலுக்கே வராதவர்கள் ஒலுவிலைப் பற்றிக்குறை பேசுவது கேளிக்கைக்குரியது.

இருக்கின்ற வளங்களைவைத்து பீடத்தைக் கொண்டுசெல்லும் அதேவேளை கட்டமைப்புசார் வசதிகளையும் மனிதவள அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதில் நிருவாகம் மிகவும் பிரயத்தனங்கள் எடுத்துவருகின்றதென்ற உண்மை மறுக்க முடியாதது. இப்பீடத்தின் மாணவர்கள் தியாகங்களுக்கு மத்தியில்தான் தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் என்பது தெளிவான உண்மை ஆனால் இந்த கஷ்டங்கள் நிரந்தரமானதல்ல. இவர்களுக்குப் பின்னர் வருபவர்கள் இக்கஷ்டத்தை அனுபவிக்கப் போவதுமில்லை.

இத்தியாகங்கள் செய்துகொண்டிருக்கும் இந்த இளம் மாணவர்களின் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் மனங்களில் ஒருசில விசமிகளினால் பின்புலப்படுத்தப்பட்ட குழுக்கள் இலகுவில் அழிக்க முடியாதவாறு பேராசைகளை ஊட்டி வழிகெடுத்து இந்த இளரத்தங்களை நெறிபுரளச் செய்து தற்போது இப்பீடத்திற்கெதிரான கோஷமாக மாற்றியிருப்பது மிகவும் மனவருத்தத்திற்குரிய ஒரு உண்மையாகும்.

இப்பீட மாணவர்களின் பெற்றோர்களிடமும் இவ்வாறான மனநிலையை இவர்கள் உருவாக்கியிருப்பது மிகவும் கவலையளிக்கின்ற விடயமாகும். தனது பிள்ளைக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது எந்தப் பெற்றோரதும் அவாவாகும். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திப் பாதகமான எண்ணங்களை வளர்த்திருக்கின்றனர் இந்தக் குள்ளநரிக்கூட்டம்.

எனவே இருக்கின்ற குறைபாடுகளை வெகுவிரைவாக நிவர்த்தி செய்து இப்பீடத்தைத் தொடர்ந்தியங்கவைத்து எமது அன்பு மாணவர்களுக்குத் தரமான பொறியியல் கல்வியை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திலேயே பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல், இன, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

Senior Lecturer in MIT
South Eastern University of Sri Lanka
Oluvil, Sri Lanka

15 comments:

  1. பொறியியல் பீடம் என்பது வெறும் கணனி மற்றும் புத்தகம் சார்ந்த கல்வி அல்ல. சகல வசதிகளையும் ஏற்படுத்திவிடடு ஆரம்பித்திருக்கலாமே? பிறகு வருபவர்கள் கஷ்டபட தேவையில்லை என்றால்.. இப்பொழுது இருக்கிற மாணவர்கள் நிலை என்ன?

    ReplyDelete
  2. மிகவும் யதார்த்தமான விடயம் எடுத்துக் கூரப்பட்டுல்லது. இந்த பொறியியல் பீடத்தின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்கு வகிக்க வேண்டியவர்கள் மாணவர்கள் தான். அவர்கள் மிகவும் பொறுமையாகவும் சில தியாகமும் அதே நேரம் கடினமான உழைப்பும் தேவை. நிட்சயமாக இதற்கு காலம் தேவை. பேராதனை பல்கலை கழகத்தினதும் மொரட்டுவை பல்கலைகலத்தினதும் முடியுமான வரை பெற்றுக் கொள்ள வேண்டும். நிட்சயமாக இந்த பீடம் நல்ல தொரு நிலைக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு காலம் தேவைப்படும். அந்த காலப் பகுதியில் சில புல்லுருவிகளும் சுயநல பொறமை பிடித்தவர்களும் குழப்பம் விளைவிப்பார்கள். மாணவர்களின் ( இதில் நேரடியாக பாதிக்கப்பட போகின்றவர்கள் ) உதவியால் முறியடித்து முன்னேறுங்கள். உழைப்புக்கும் உண்மைக்கும் என்றுமே தோல்வி கிடையாது.

    ReplyDelete
  3. என்ன இது புது கதை

    ReplyDelete
  4. தங்களது பிள்ளைகள் முடமாக்கப்படும் போது விளங்கும் அதன் வலியும் வேதனையும்

    எவருமே உதவி செய்யாத நியாயத் தீர்ப்பு நாளில் neethஇkkaaran அல்லாஹ் கேட்பான் ஒவ்வொரு வருடமும் 100 பிள்ளைகள் முடமாக்கப்படுவதை விட உனக்கு உனது பிரதேச வாதம் தான் பெரியதாய் போய் விட்டதா என்று

    அப்போது கூறுங்கள் எது சிறந்தது என்று
    நீங்கள் உணமையில் மறுமை நாளை நம்புபவர்களாக இருந்தால் உங்களுகே புரியும் நீங்கள் ஒரு எட்டு கூட நகர்த்த முடியாது என்று

    பிரதேச வாதம் மற்றும் இனவாதம் கதைத்து நீங்கள் செய்வதை செய்யுங்கள்

    எல்லாம் வல்லவனும் மகா சக்தியாளனும் சகலவற்றின் மீதும் ஆட்சியும் அதிகாரமும் உடையவன் அல்லாஹு அவனிடம் நான் எனக்கு தேவையான நீதியை பெற்றுக்கொள்கிறேன்

    எனக்கு எல்லாவற்றிற்கும் அல்லாஹ்வே போதுமானவன்
    பொறுப்பேற்பதில் அவனே மிகச் சிறந்தவன்
    அவனைத்தவிர வணங்குவதற்கு vaeru எவரும் இல்லை
    அவனிடமே என் சகல பொறுப்புகளையும் ஒப்படைக்கிறேன்
    அவனே மகத்தான அர்ஷின் இறைவன் அவான்
    அவனுக்கே புகழ் அனைத்தும்

    ReplyDelete
  5. தங்களது பிள்ளைகள் முடமாக்கப்படும் போது விளங்கும் அதன் வலியும் வேதனையும்

    எவருமே உதவி செய்யாத நியாயத் தீர்ப்பு நாளில் neethஇkkaaran அல்லாஹ் கேட்பான் ஒவ்வொரு வருடமும் 100 பிள்ளைகள் முடமாக்கப்படுவதை விட உனக்கு உனது பிரதேச வாதம் தான் பெரியதாய் போய் விட்டதா என்று

    அப்போது கூறுங்கள் எது சிறந்தது என்று
    நீங்கள் உணமையில் மறுமை நாளை நம்புபவர்களாக இருந்தால் உங்களுகே புரியும் நீங்கள் ஒரு எட்டு கூட நகர்த்த முடியாது என்று

    பிரதேச வாதம் மற்றும் இனவாதம் கதைத்து நீங்கள் செய்வதை செய்யுங்கள்

    எல்லாம் வல்லவனும் மகா சக்தியாளனும் சகலவற்றின் மீதும் ஆட்சியும் அதிகாரமும் உடையவன் அல்லாஹு அவனிடம் நான் எனக்கு தேவையான நீதியை பெற்றுக்கொள்கிறேன்

    எனக்கு எல்லாவற்றிற்கும் அல்லாஹ்வே போதுமானவன்
    பொறுப்பேற்பதில் அவனே மிகச் சிறந்தவன்
    அவனைத்தவிர வணங்குவதற்கு vaeru எவரும் இல்லை
    அவனிடமே என் சகல பொறுப்புகளையும் ஒப்படைக்கிறேன்
    அவனே மகத்தான அர்ஷின் இறைவன் அவான்
    அவனுக்கே புகழ் அனைத்தும்

    ReplyDelete
  6. We students were facing so many problems since the day faculty started. Sir, At that time you were not coming to be involved and find a solution. But now you are trying to save Engineering faculty. Sir, before talking this, what measures you have taken to improve our faculty. Now students lost hope with the quality of education you give. You people try to establish a faculty but this is destroying the lives of students and shattering the future of engineering students. You people are so rude and so selfish concerned in only building the faculty without looking at the state of students. Remember we are not going to DS Office for job. Sorry for harsh reply but it's the truth. Also ashamed to be a student where people are heartless

    ReplyDelete
  7. sir, it is not racism. our e fac students are facing many problems, but actually you don't know the absolute problem. and they are trying to get the education as same as other engineering faculties. other important think is nobody brainwash the students. All are fighting for their education only. each and everyone know the value of engineering degree. where were you sir for 2 and half an year? why you didn't try to develop e faulty through these years?. why sir you didn't understand the pain of those students?. only you support for racism and not for student's education.
    we don't try to tarnish seusl. we all are try to become a qualified engineer.

    ReplyDelete
  8. .Sir, you are a well educated personal. Don't you feel ashamed to talk about regionalism in this fight for education?
    Is this what you learned?

    where were you all these 2.5 year while we were suffering in our faculty?
    what have you done to develop our faculty?

    Incapability of faculty to develop it's infrastructures is now obvious after all these years . Why are you playing in our lives?

    Even if you can't understand our genuine problem, its fine sir
    Even if you can't solve our problem, its fine sir.

    please don't disrespect our demands using cheap, biased comments

    thankyou

    ReplyDelete
  9. உங்களைப்போன்ற, இவ்வாறான இதயமற்ற, பிரதேச வாதம் பேசி, மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குபவர்கள் இருக்கும் பல்கலைக்கழகத்தில் கற்பதையிட்டு ஒவ்வொரு மாணவனும் உள்ளம் வெதும்புவான்.

    பொறியியல் கல்வி என்பது ஒன்றும் புத்தக பூச்சியாக நான்கு வருடங்களை ஓட்டி, பட்டம் பெற்று, உங்களைப்போல் விரிவுரையாளராக வருவதல்ல, அதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

    எந்த ஒரு உண்மையான கல்விமானும், மாணவர்களின் இந்த கோரிக்கையை ஆதரிப்பானே அன்றி, இவ்வாறு இனவாதச்சாயம் பூசி, பிரதேச வாத பேயின் மேல் நின்று கொக்கரிக்க மாட்டான்.

    முதலில் பொறியியல் கல்வியின் அடிப்படை என்ன என்பதை, சரியான உண்மையான கல்விமான்களை கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  10. 2 1/2 varudama lactures panel le endhe munnetramum illai endu theriyaadha

    ReplyDelete
  11. We are the students and we know the real problem. It is not about racism it is about the lives of 100 and100 students. Do u know the history of the beginning of this faculty, do you know the problem we are now facing. Please think deeply it is a serious problem

    ReplyDelete
  12. ஒரேயொரு கேள்விக்கு நாங்கள் பதில் எதிர்பார்க்கின்றோம்.
    01. மூன்றாம் வருட மாணவர்கள்தான் வளப்பற்றாக்குறையென்று கூறி விரிவுரைகளைப் பகிஷ்கரித்திருக்க வேண்டும். அவ்வாறிருக்கையில் இரண்டாம் வருட மாணவர்கள் அவ்வாறு செய்ததேன்?
    02. உங்களது செய்முறைப் பயிற்சிகளுக்கான அனைத்து உபகரணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் (பல எமது, சில பேராதனையில் இருந்து கொண்டு வரப்பட்டது, சிலவற்று மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்) நீங்கள் ஏன் செய்முறைப் பயிற்சியே இல்லை என்று கூறுகின்றீர்கள்?
    03. IESL இன் அங்கீகாரம் கிடைக்கவிருக்கும் தறுவாயில் நீங்கள் IESL இன் தலைவர் உங்களுக்கு விரிவுரைசெய்வதற்காக வந்தபோது விரிவுரைக்கு ஏன் செல்லவில்லை?
    04. Training இற்காக இலங்கையிலுள்ள ஏராளமான நிறுவனங்களுக்கு (துறைமுகம் உட்பட) பல இடங்களுக்கு அனுப்பப்பட்டபோதிலும் அதை மறைப்பதற்கான காரணம் என்ன?
    05. வருகைதரு விரிவுரையாளர்கள் அனை அதியுயர் அறிவும் அனுபவமும் உள்ளவர்கள் அத்தோடு மிகவும் வேலைப்பழு உள்ளவர்கள். அவர்களது வசதிக்கேற்பவே நேரசூசி அமைக்கப்படுகின்றது. ஆனால் நேரசூசியே இல்லை என நீங்கள் கூறுவதற்கான காரணம் என்ன?
    06. 60 இலட்சம் ரூபாய்களுக்கு புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஏராளமான தொகை வழங்கப்படவுள்ள நிலையில் புத்தகங்கள் இல்லையென்று நீங்கள் கூறுவதென்ன?
    07. உபகரணங்கள் வாங்குவதற்கான அனைத்து நிருவாக வேலைகளும் நடந்து முடிந்திருக்கும் வேளையில் நீங்கள் இவ்வாறு மாறிக்கூறுவதற்கான காரணம் என்ன?
    08. உபகரணங்கள் இல்லையென்ற காரணத்தால் எவ்வளவு செய்முறைப் பயிற்சிகள் நடைபெறாமல் உள்ளன?
    09. அமைச்சர் க்றேறோ வருகைதந்து நேரடியாகப் பார்வையிட்ட பின்னர் அவர் திருப்திப்பட்டுச் சென்றது உண்மையில்லையா?

    பிள்ளைகளே நீங்கள் மூளைச் சலவைசெய்ய்பட்டுள்ளீர்கள் என்பதை உமக்குப் புரியவைக்க முடியாது.
    உங்களிற்கு தெரிந்த யாராவது டயலொக் அல்லது மொபிடலில் இருந்தால், உங்களை வழிநடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்களின் தொலைபேசி விவரத்தை எடுத்துப் பாருங்கள் அம்பாறையில் இருக்கும் கோடீஸ்வர அரசியல்வாதியினது அவரது இணைப்பாளரினதும் அழைப்புக்கள் தெரியவரும்!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  13. எப்படியோ இதற்கு ஏதாவது நல்ல தீர்வு வர அல்லாஹ்வை பிரார்த்திக்கிற்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.