Header Ads



"சவுதி அரேபியாவிற்கு வராமல், இருந்துகொள்ள வேண்டும் - இலங்கை தூதுவர்

இலங்கைப் பணிப்பெண் ஒருவரைக் கல்லால் அடித்துக் கொலை செய்யும் சவுதி நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க வேண்டாம் என்று சவுதிக்கான தூதர் வலியுறுத்தியுள்ளார்.

கணவரல்லாத வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட குற்றச்சாட்டில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு சவுதி நீதிமன்றம் கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து இலங்கையின் அனைத்து ஊடகங்களும் கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.

எனினும் அதனை சவுதிக்கான தூதர் கண்டித்துள்ளதுடன், அவ்வாறான விமர்சனங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

சவுதிக்கான இலங்கைத் தூதர் அஸ்மி தாசிம், சவுதியிலுள்ள இலங்கையரின் சர்வதேசப் பாடசாலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் அஸ்மி தாசிம்,

இலங்கைப் பணிப்பெண் மீதான தண்டனை குறித்து இலங்கை ஊடகங்கள் விசமக் கருத்துக்களை பரப்பி வருகின்றன. இவ்வாறான கருத்துக்கள் இலங்கை-சவுதி அரேபியா நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். 

சவுதிக்கு உழைப்பதற்காக வருகின்றவர்கள் இந்நாட்டு சட்டதிட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் சவுதி அரேபியாவிற்கு வராமல் இருந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ALLAH'S LAW IS USEFUL FOR MANKIND, SHARIA PUNISHMENTS PREVENTS CRIMES..... THIS IS REAL HUMAN RIGHTS...ALL SHOULD REALIZE AND UNDERSTAND THIS FACT...LOOK WHY CRIME RATES ARE VERY LOW IN GULF COUNTRIES....

    ReplyDelete

Powered by Blogger.