Header Ads



'கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் உடன்பிறந்த சகோதர்கள் - அவர்களிடையே வன்முறை கூடாது'


மத்திய ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப் பிரான்சிஸ் ’கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் உடன்பிறந்த சகோதர்கள் என்றும் அவர்கள் இடையே வன்முறை இருக்க கூடாது’ என உருக்கமாக பேசியுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் போப் பிரான்ஸிஸ் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தலைநகரான Bangui-யில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கிறித்துவ மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் இடையே அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

அப்போது, ‘கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என்றும் இவர்களுக்குள் என்றும் வன்முறை ஏற்படுக்கூடாது’ என்றார்.

வன்முறையை கையில் எடுப்பதற்கு பதிலாக, அமைதி, நீதி, அன்பு மற்றும் கருணையை ஆயுதங்களாக ஏந்திக்கொள்ள வேண்டும்.

அடுத்த மாதத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் பொது தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த தேர்தலுக்கு பின்னர் நாடு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என போப் ஆண்டவர் மக்களிடம் உருக்கமாக பேசியுள்ளார்.

நாட்டில் அண்மையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறை சம்பவங்களுக்காக தங்களை மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதியான Catherine Samba-Panza போப் பிரான்சிஸிடம் வேண்டிக்கொண்டார்.

சுமார் 4.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் 50 சதவிகிதத்தினர் கிறித்துவர்களும், 15 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்களும், எஞ்சிய 35 சதவிகிதத்தினர் ஏனைய மதங்களை பின்பற்றி வருகின்றனர்.

இந்த நாட்டில் கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே அண்மையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து ஆயிரக்கணகான இஸ்லாமியர்கள் தலைநகரை விட்டு வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பாராட்டுக்கள் கிருஸ்தவ பெரியார் அவர்களே!
    ஆனால்... நமக்கு பொது எதிரி யார் என்பதை அடையாளம் காட்டியிருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும்!

    ReplyDelete

Powered by Blogger.