Header Ads



மொஹமட் ஷியாமின் தந்தைக்கு அழுத்தம், வாஸின் மனைவி கூறுகிறார்

கணவர் குற்றமற்றவர் எனவும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை எதிர்த்து மேன்முறையீடு செய்ய போவதாகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷாமலி பெரேரா தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் தனது வீட்டில் இன்று (29) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பம்பலப்பிட்டியை சேர்ந்த கோடிஸ்வரரான வர்த்தகர் மொஹமட் ஷியாம் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள முன்னாள் பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன உட்பட 6 பேருக்கு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பிரதிக் காவற்துறை மா அதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.

இந்த நிலையில், இன்று காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட ஷாமலி பெரேரா,

தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர், மொஹமட் ஷியாமின் தந்தை தனது மனசாட்சிப்படியான கருத்தை வெளியிட்டதாக கூறினார்.

யாரோ ஒருவரின் அழுத்தங்கள் காரணமாக பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கலாம் எனவும் வாஸ் குணவர்தனவின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.

மொஹமட் ஷியாம் கொலையில் வாஸ் குணவர்தனவுக்கு தொடர்பில்லை எனவும் அவரை தான் சந்தேகிக்கவில்லை எனவும் ஷியாமின் தந்தை ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

எனினும் தான் குழப்பத்தில் இருந்த போது தான் என்ன கூறினேன் என்பதை அறியவில்லை என அவர் நேற்று தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.