Header Ads



ரஷ்ய விமானியின் உடலை, ஒப்படைக்கும் துருக்கி

சிரியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த வாரம் துருக்கி சுட்டு வீழ்த்திய ரஷ்ய போர் விமானத்தில் இருந்த விமானியின் உடலை தாங்கள் மீட்டுள்ளதாக துருக்கி கூறுகிறது.

துருக்கிய ஏவுகணை ஒன்று ரஷ்ய போர் விமானத்தை கடந்த வாரம் வீழ்த்தியது

அவரது உடலை ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் துருக்கி தெரிவித்துள்ளது.

துருக்கி வீசிய ஏவுகணை ஒன்றால் அந்த விமானம் தாக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து அவர் பாராச்சூட் மூலம் குதித்தபோது, சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த விமானத்தில் இருந்த இரண்டாவது விமானி மீட்டக்கப்பட்டார்.

இச்சம்பவம் துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே மேலோங்கிய உரசல்களை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரை ஆளுக்கு ஒருவராக ரஷ்யாவும் துருக்கியும் ஆதரித்து வருகிறது குறிப்பிடத்தகுந்தது.

No comments

Powered by Blogger.