Header Ads



முஸ்லிம்கள் மீது ஏன் வெறுப்பு காட்டுகிறீர்கள், என்று சிங்கள நண்பரிடம் கேட்டபோது...?

-Mohamed Farzan-

நான் இன்று (30) நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிங்கள நண்பரை சந்தித்து நீண்ட நேரம் பல விசயங்களையும் உரையாடிக்கொண்டிருதோம், எமது பேச்சு இலங்கையின் இனவாதம் சம்பந்தமாக வந்தபோது, முஸ்லிம் மக்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் ஏன் முஸ்லிம்கள் மீது இவ்வளவு வெறுப்பை காட்டுகிறீர்கள் என்று கேட்டேன்,

அதற்கு அவர் சொன்னார் சௌதி அராபியா, மலேசியா, நேபாள், அப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற உலகின் பல நாடுகள் முன்பு பௌத்த நாடாக இருந்ததாம், முஸ்லிம்களின் குடியேற்றதின் பின்பு இந்த நாடுகள் எல்லாம் முஸ்லிம் நாடாக மாறிவிட்டதாகவும் இலங்கையும் முஸ்லிம் நாடாக மாறி விடுமோ என்று பயமாக உள்ளதாகவும் கூறினார்.

அதே போல் பௌத்தர்களின் மக்கள் தொகை குறைவதாகவும் முஸ்லிம்களின் சனத்தொகை கூடுவதாகவும் சொன்னார்.

இவற்றை எல்லாம் கேட்ட நான் அவருக்கு இவை பொய்யான கருத்து என்று இணயத்திலும் சில ஆதாரங்களை காட்டி அவரின் இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்தேன்.

எனது கவலை, இவர் எனக்கு நீண்ட காலப்பழக்கம் இனவாதம் இல்லாத நன்று படித்த நல்ல நண்பர் இவர் மனதிலும் இப்படியான சந்தேகங்கள் இருக்கின்றதே என்பது தான்.

இவற்றுக்கு காரணம் எமது சமூகத்தின் நற்பண்புகளின் குறைபாடோ என எண்ணத்தோண்றுகின்றது.

யா அல்லாஹ் எமது முஸ்லிம்கள் இடத்தில் நல்ல அஹ்லாக்கையும், சிங்கள சகோதரர்களிடத்தில் முஸ்லிம்கள் பற்றிய நல்ல அபிப்ராயத்தையும் தருவாயாக.

ஆமீன்!

1 comment:

  1. என்ன முட்டாள் தனமான வாதமும் கவலையும்!!
    எங்கள் பயிர்கள் நன்றாக வளர்கிறதென்றால் நீங்களும் அவ்வாறு
    வளர்த்தெடுங்களேன்... எதற்கு எங்கள் பயிரை அழிக்க முனைகிறீர்கள்? இது மிகப்பெரிய அநியாயமே!

    (உங்களால் முடியாதுதான்.... ஏனெனில் உங்களிடம் தரமான பசளைகள் இல்லையே!)

    ReplyDelete

Powered by Blogger.