Header Ads



ஆதரவாக கை உயர்த்தினால், வாகனம் தருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

கல்வித் துறைக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதாகவும் எனினும் இதுவே அண்மைக் காலத்தில் ஒதுக்கப்பட்ட குறைந்தளவான நிதி எனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது கடந்த வருடம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவு எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதன்படி தவறான தகவல்களை முன்வைத்து பாராளுமன்றத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்தியமை தொடர்பில் நிதி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளார்.

மேலும் பல்வேறு காரணங்கள் காரணமாக விமல் வீரவங்ச உள்ளிட்ட சிலருக்கு இதில் கையெழுத்திட முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தால் எலும்புகளை கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை மௌனமாக்கும் கொள்கை பின்பற்றப்படுவதாகவும் வரவு செலவுத் திட்டத்திற்கு கை உயர்த்துபவர்களுக்கு வாகனம் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் கம்மன்பில மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடு மிகவும் வெறுக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ள அவர், இது வௌிப்படையாக இலஞ்சம் வழங்குவது போன்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.