Header Ads



19000 பெண்களையும், 18858 குழந்தைகளையும் படுகொலைசெய்த அசாத்


- அபூஷேக் முஹம்மத்-

சிரியாவில் மனித உரிமை அமைப்புக்கள் (SNHR) வெளியிட்டுள்ள அறிக்கை

2011 ஆம் ஆண்டு முதல் நடக்கும் சிரியா உள்நாட்டு் போரில் இதுவரை 20000 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். 19000 பெண்கள் அசாத்தின் படைகளால் பலியாகியுள்ளனர்.

சிரியா அசாத்தின் படைகள் இதுவரை 18,917 பெண்களை கொன்றுள்ளது, 7,029 பெண்களை கைது செய்துள்ளது. அதில் 318 பேர் சிறுமிகள் ஆவர் . ரஷ்யப் படைகள் 72 பெண்களை கொன்றுள்ளனர்.

சிரியாவின் குர்திஷ் படைகள் 42 பெண்களை கொன்றுள்ளது.

69 பெண்களை கைது செய்துள்ளது.ஐ ஸ் படைகள் 639 பேரை கைது செய்துள்ளனர் .மற்ற ஆயுதம் ஏந்திய படைகள் 877 பேரை கைது செய்துள்ளனர்.

குறிப்பாக நிவாரணம் போன்ற சமூக உதவிகள் செய்து வரும் பெண்களை அசாத்தின் படைகள் கைது செய்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். மேலும் பாலியல் வன்முறைகள் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளது.

சிரியா போரில் 250,000 அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 7.6 மில்லியன் மக்கள் உள்நாட்டிலும், 4 மில்லியன் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

19000 குழந்தைகளை பலியாக்கிய அசாத்தின் அதிகாரப்படைகள் !

சிரியாவின் யுத்தம் 2011 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 19 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டதாக  மனித உரிமைகள் அமைப்பு கூறுகின்றன .

இதில் 92 சதவிகிதக் குழந்தைகள் ஆட்சியாளர்களின் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். கணக்கீட்டின் போது 12000 குழந்தைகள் அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது பலவந்தமாக மறைக்கப்பட்டுள்ளனர்.

மூழ்கும் சிரியாக் குழந்தைகளின் நம்பிக்கைகள் என்ற தலைப்பின் கீழ் சிரியாவின் மனித உரிமைக்குழுக்கள் ஆட்சியாளர்களின் படைகளால் கொல்லப்பட்டு இறந்த குழந்தைகள் எண்ணிக்கை 18858 என ஆவணப்படுத்தி உள்ளனர் ,

பாதிக்கப்பட்டவர்களில் 582 பேர் சினைப்பர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். 101 பேர் தடுப்புக்காவலில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்றர்கள்

அசாத் உடைய படைகளால் கைது செய்யப்பட குழந்தைகள் எண்ணிக்கை 10413 பேர் ஆகும். வெறுமனே காணமல் போனக் குழந்தைகள் எண்ணிக்கை 1850 பேர் ஆகும்

No comments

Powered by Blogger.