Header Ads



''SLIF UK'' ன் 12 வது மாநாடு (படங்கள் இணைப்பு)

ஐக்கிய இராட்சியத்தில் இயங்கி வரும் Srilanka Islamic Forum (SLIF UK ) ன் 12வது தேசிய மாநாடு கடந்த சனிக்கிழமை  03.10.2015  Luton  ல் உள்ள Venue 360 எனும் அரங்கத்தில் வெகுவிமர்சையாக நடந்து முடிந்தது; அல்ஹம்துலில்லாஹ். 

அல்-குர் ஆனின் அத்தியாயம் 55 வசனம் 9ஐ மையமாக வைத்து "எமது வாழ்வில் சமநிலையைப் பேணல்'' எனும் தலைப்பில்   நடைப்பெற்ற இவ்வொருநாள் மாநாட்டில் சுமார் 350 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் இளைஞர், யுவதிகளுக்கான ( Youth Conference ) தனியான மாநாடும் ,(அசாபீர்) சிறுவர்களுக்கான பிரத்தியேகமான ஏற்பாடுகளும், குழந்தைகளுக்கான தனியான நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன. பிரபல்யமான அறிஞர்களான அஷ் ஷேய்க் அத்னான் ராஷித்,  அஷ் ஷேய்க் யூசுப் முப்தி , Br.பாரூக் முராத்  Dr. டீன், இமாம் அஜ்மல் மஸ்ரூர்,Dr அஷ் ஷேய்க் ரபீக் நளீமி, அஷ் ஷேய்க் சல்மான் பாரிஸ் நளீமி ஆகியோரின் பெறுமதிமிக்க  உரைகளோடும், கவிதை, கஸீதா,மற்றும் காணொளிகளோடும் வடிவமைக்கப் பட்டிருந்த நிகழ்ச்சி நிரலுக்கமைய அனைத்து நிகழ்ச்சிகளும்  இறை அருளால் சிறப்பாக நடைப் பெற்று முடிந்தன; நிகழ்ச்சிகள் யாவும் தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
இதில் விசேடமாக ''Service Excellence Award'' எனும் சமூக சேவைகளை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்ப்பட்டோருக்கான விருது வழங்கும் நிகழ்வும், ''ALHUDHA'' எனும் ''SLIF UK'' ன் வருடாந்த சஞ்சிகை வெளியீட்டு வைபவமும் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இறையுதவியோடு ''SLIF UK '' ன் 12வது மாநாட்டை சிறப்பாக நடாத்தி முடிக்க தங்கள் நேரத்தாலும், பொருளாலும், உழைப்பாலும் உதவி செய்து ஒத்துழைத்த அனைத்து வளவாளர்கள், நலன்விரும்பிகள் ,மற்றும் கலந்து சிறப்பித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், ''SLIF UK'' ன் ஏற்பாட்டுக் குழு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.இம்மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை எம் வாழ்வில் ஏற்று நடக்கவும் எம் துய எண்ணங்களும் முயற்சிகளும் அங்கீகரிக்கப்படவும் இறைவன் அருள் புரிவானாக!  நடைபெற்று முடிந்த மாநாட்டின் சில நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.   












No comments

Powered by Blogger.