Header Ads



ஓரினச் சேர்ச்கைக்கு சட்ட அங்கீகாரம், வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது - விமல் வீரவன்ச

தற்போதைய அரசாங்கம் ஓரினச் சேர்ச்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உள்ளதாக ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமாக்குமாறு கோரி யூ.எஸ். எயிட் நிறுவனம் அண்மையில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியருந்ததாகத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நபர் ஒருவரின் சுய விருப்பு வெறுப்புக்களில் தாம் தலையீடு செய்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மேற்குலக நாடுகளின் தலையீடுகள் அழுத்தங்கள் காரணமாக சட்டங்களில் மாற்றம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். யூ.எஸ். எயிட் நிறுவனத்தின் தேவைகளுக்காக இலங்கையில் சட்ட மாற்றங்கள் செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட வகையில் நாட்டைப் பலவீனப்படுத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. ivar yaraga irundhalum intha seyalai nirutthumaru aarpattam seithal naamum kalanthu kolwadadawathu muslimgalum kalandu kolla wendum. enenil homosexei pattri oru samudhayatthaye alitthadaga thirumaraile allah koorugiran agawe sindutthu seyalpaduwom.

    ReplyDelete
  2. மனிதனின் இயல்பான பாலியல் தெரிவை அங்கீகரிப்பதில் என்ன தப்பு?

    ReplyDelete
  3. அம்மா,அக்கா,தங்கை ,ஆண் ,பெண் என்று மிருகங்களுக்கு வித்தியாசம் இல்லை தானே. தான் யாருடன் பாலியல் வைத்துக்கொல்ல வேண்டும் என்றும் வரையரை இல்லை. வரையரை,கட்டுப்பாடுகள் இலந்து ,தனது மனோஇச்சைக்கு அடிமைகள் ஆகினால் இது போன்று இயற்க்கைக்கு மாறாக சிந்திக்க ,செயல் பட வேண்டிவரும்.

    ReplyDelete

Powered by Blogger.