Header Ads



"தங்கையை காட்டி, அக்காவை திருமணம் முடித்துக் கொடுத்தல்"

-சட்டத்தரணி பஸ்லின் வாகிட்-

கடந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களையும் ஏனைய  சிறுபான்மையினரையும் நசுக்கி ஆட்சி அமைக்கும் கைங்கரியத்தை மேற்கொண்டு வந்தது. சிறுபான்மையினரின் உரிமைகள் படிப்படியாக மறுக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ஷ புலிகளை நசுக்கிய  ஆணவத்தில் இனிதான் தான் நாட்டுக்கு என்றென்றும் ராஜா என்ற பாணியில்  செயற்ட்பட்டார், 

ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது சிறுபான்மை மக்களுக்கு ஒட்டு மொத்தமாக  உரிமைகள் மறுக்கப்பட்டது போல பெரும்பான்மை இன அமைச்சர்களும் எந்த வித  அதிகாரங்களுமின்றி பொம்மைகளைப் போல் வாய் மூடிகளாக இருந்தனர். ஆனால் பெரும்பான்மை இனம் நாட்டில் எல்லாத்துறைகளிலும் முன் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சிறுபான்மையினர் எந்த வித உரிமை போராட்டங்களையும் நடத்த  முடியாமல் அடக்கி ஒடுக்கப்பட்டு இருந்தனர். சர்வதேசத்துக்கு காட்டு வதற்காக மட்டும் பெயரளவில் முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு  இருந்தனர்.

ஒன்றுமில்லாது இருப்பதை விட ஏதோ ஓன்று இருப்பது மேல் (something  is better than nothing) என்ற பாணியில் நமது தலைவர்களும் அமைச்சுப்  பொறுப்புக்களை பெற்றுக் கொண்டனர்.ஆனால் அந்த அமைச்சுப்பொறுப்புக்களை  ஏற்றுக் கொண்ட காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமுகத்திற்கு  பாதிப்பு ஏற்பட்ட விடயங்களில் கூட கூட்டுப்பொறுப்பு என்ற காரணத்தினால் 
அரசுக்கு ஆதரவாக செயற்படும் கட்டாய நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். 

சிறந்த உதாரணம் 17வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாக  வாக்களித்ததை குறிப்பிடலாம்..அமைச்சர் ஹகீம் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில்  பகிரங்கமாக தனது பிழையைக் கூறி சமூகத்திடம் மன்னிப்பு கேட்கும்  நிலைக்குத்தள்ளப்பட்டார். ஆனால் பிழையை உணரும் போது எல்லாம் முடிந்த கதையாகி விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தான் மகிந்த திடீரென சனாதிபதி தேர்தலை  அறிவித்தார். தனக்கு மேலே இன்னுமொரு சக்தி இருக்கின்றது என்பதை மகிந்தவுக்கு  கற்பித்த ஒரு தேர்தல் என அதனைக் கூறலாம்.மகிந்தவுக்கு மட்டுமல்ல  எல்லோருக்கும் இந்த நிலைதான் என்பதை புரிய வைத்து.மக்கள் சக்தி  தான் எல்லாவற்றை விடவும் மேலானது என்பதை உலகத் தலைவர்களுக்கும் புரியவைத்த மற்றுமொரு சந்தர்ப்பம் எனவும் கூறலாம். 

மகிந்தவின் ஆட்சியில் அடக்கப்பட்டு இருந்த சிறுபான்மை இனங்களில் ,தேர்தலுக்கு அண்மித்த காலங்களில் முஸ்லிம்  மக்கள் பாரிய சவாலகளுக்கு முகம் கொடுத்து இருந்தனர்.புலிகளை தோற்கடித்து  தமிழ் சமூகத்தை அடக்கி ஆண்டு கொண்டு இரண்டாவது பெரிய சிறுபான்மை சமூகமான  முஸ்லிம் மக்களையும் நசுக்கிக்கொண்டு பெரும்பான்மை மக்களின் வாக்குகளை மட்டும் பெற்று ஆட்சி செய்வதற்கான திட்டங்களை மகிந்த மேற்கொண்டு தான்  சனாதிபதி தேர்தலில் குதித்திருந்தார்.அதன் ஒரு அங்கமாகத்தான் பொது பல  சேனாவின் அடாவடித்தனங்கள். எனவே தான் முஸ்லிம் சமூகம் தனக்கு எதிராக செயற்படும் மகிந்த விற்கு பாடம் புகட்டுவதற்கு ஓன்று திரண்டனர்.95% மேலான முஸ்லிம்  வாக்குகள் மைத்திரியின் பக்கம் சாயந்தது .தமிழ் மக்களில் கணிசமான வாக்குகள்  மகிந்தவிற்கு கிடைத்தததை தேர்தல் பெறுபேறுகளின் மூலம் காணக்  கிடைத்தது. குறிப்பாக மலையகப் பகுதிகளிலும் வட கிழக்குப்பகுதிகளிலும்  மகிந்தவுக்கு ஆதரவாக தமிழ் வாக்குகள் கிடைத்து இருந்தாலும் முஸ்லிம் மக்கள்  கட்சி பேதமின்றி மகிந்தவை தோற்கடிப்பதனை மட்டும் நோக்காக கொண்டு  செயற்பட்டனர்.

இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில்  பாரிய வாக்கு வித்தியாசத்தால் மைத்திரி ஜனாதிபதித்  வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அவரின் தேர்தல் வெற்றிக்கும் அவை உறுதுணையாக அமைந்தன. மகிந்தவின் தோல்வியின் பின்னர் ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டு  அமைச்சரவையும் மாற்றப்பட்டது. மைத்திரிக்கு ஆதரவளித்து வெளியாகிய  சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அடங்கலாக ஏனைய ஆதரவளித்த கட்சியினரையும்  உள்வாங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது.

இங்குதான் நான் கூற வந்த விடயத்தில் முக்கிய பகுதி ஆரம்பிக்கின்றது,அந்த  அமைச்சரவையில் வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களில் முஸ்லிம் அமைச்சர்களின் பொறுப்புக்களையும் அவர்களுக்கு கீழ் வந்த நிருவனங்களையும்  உற்று நோக்கினால் விடயம் புரியும்.முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமிற்கும்  மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாதிற்கும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக  பாராளுமன்றத்தில் இருந்த இரண்டே இரண்டு எம்பிக்களான ஹலீமிற்கும் கபீர்  ஹாஷிமிற்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு கீழாக பல நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக அமைச்சர் 
ஹக்கீமிற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA )அடங்கலாக அமைச்சுப் பொறுப்பு  வழங்கப்பட்டது.கடந்த ஆட்சியில் UDA கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் இருந்த  மிகவும் அதிகாரம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும்.நாட்டில் பெரும்பாலான  பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகள் இதன் கீழ் வருகின்றது,நகர  அபிவிருத்திப் பணிகளின் திட்டமிடலும் செயற்படுத்தலும் இதன் மூலமே  நடைபெற்றது.

முழு நாட்டிலும் இதன் கீழ் பல அபிவிருத்திப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டன, படுகின்றன.முஸ்லிம் மக்கள் மைத்திரியையும் ரணிலையும்  ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வர செய்த தியாகங்களுக்கு நன்றிக் கடனாக இதனை வழங்கியிருக்கலாம் என்று கூட நினைத்தவர்கள் பலர்.அதே போல் அமைச்சர் 
ரிஷாடிற்கும் 30 ற்கு மேற்பட்ட நிறுவனங்கள் வழங்கப்பட்டன.கபீர் ஹாஷிமிற்கு  நெடுஞ்சாலைகளின் பொறுப்புடன் கூடிய அமைச்சு. ஹலீமிற்கு மீண்டும் முஸ்லிம்  கலாசார அமைச்சு உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது. முஸ்லிம் சமுகத்திற்கு   நன்றிக் கடனாக இவ் அமைச்சுக்கள் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தியது அரசு என்று  கூட கூறலாம். இறுதியாக நடந்த பொதுத் தேர்தலிலும் முஸ்லிம் மக்கள மீண்டும்  ஐக்கிய தேசிய கட்சிக்கே தமது ஆதரவை பெருமளவாக வழங்கினர் .

முஸ்லிம்  வாக்குகள் கணிசமான தொகை கொண்டுள்ள மாவட்டங்களிலெல்லாம் மீண்டும் ஐக்கிய தேசியக்  கட்சி  வெற்றி வாகை சூடியது.சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களில் சுதந்திரக்   கூட்டமைப்பு வெற்றி பெற்றது. சனாதிபதித் தேர்தலில் மகிந்தவை தோற்கடிக்கவும் அதன் பின்னர் பாராளுமன்றத்  தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கும் துணை புரிந்த முஸ்லிம்  மக்களை தங்கையை காட்டி அக்காவை திருமணம் முடித்துக் கொடுத்த கதை போல் தான்  அரசு கையாண்டுள்ளது. சனாதிபதித் தேர்தல் முடிந்த கையுடன் முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பலமான அமைச்சுப் பதவிகளை  வழங்கிய ஆளும்  கட்சி பொதுத் தேர்தலின் பின்னரான அமைச்சரவையில் முஸ்லிம் மக்களை உரிய  பதவிகள் வழங்கி கௌரவிக்கத் தவறி விட்டது.

இருந்த அதிகாரங்களை குறைத்தது  மட்டுமல்லாமல் சமூகத்திற்கு என்று சேவை செய்யக் கூடியதான எந்த ஒரு  பதவியையும் வழங்கவில்லை என்றே கூறலாம். அமைச்சர் ஹக்கீமின் அமைச்சுக்களை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை சம்பிக்க  ரணவகவிற்கு வழங்கியுள்ளனர்.அமைச்சரவையில் ஹகீம் அமைச்சரிற்கு என்றும்  எதிராக பேசும் ரணவகவிற்கு அதனை வழங்கி இருப்பது நகைப்புக்குரிய விடயம்  அல்ல. சிந்திக்க  வைக்கும் விடயம். அதாவது முன்னர் நகர அபிவிருத்தி அதிகார  சபையை ரணவகவிடம் வழங்கி மாநகரங்களையும் அவரின் அமைச்சுக்கு கீழ் கொண்டு  வந்து நகர திட்டமிடல் என்று மட்டும் ஒரு பதவியை ஹக்கீமுக்கு  வழங்கியுள்ளனர்.இதன் கீழ் எந்தவொரு  உருப்படியான நிறுவனமும் இல்லை.அமைச்சர் ஹக்கீமுக்கு கீழ் இருந்த இரண்டு சபைகள் ரணவக்கவிற்கு வழங்கப்பட்டு 
உள்ளது. 

அதே போல் அமைச்சர் ரிஷதிற்கும் இயங்காத நிறுவனங்களையும் நஷ்டத்தில்  இயங்கும் நிறுவனங்களையும் வழங்கி இருக்கின்றனர்.சர்வதேச வர்த்த்தகத்திற்கு வேறொருவரை அமைச்சராக நியமித்து உள்ளனர்.அமைச்சர் ஹலீமிற்கு முஸ்லிம்  கலாசார அமைச்சையும் தபால் அமைச்சையும் வழங்கி இருப்பது பெயரளவில் உள்ள  அமைச்சுப் பதவி என்றே கூற வேண்டும்.முஸ்லிம் கலாசார அமைச்சுக்கு மிகக்  குறைந்த நிதியே ஒதுக்கப்படுகின்றது.தபால்துறை மூடும் நிலையில் உள்ள ஒரு திணைக்களம். நவீன தொழில்நுட்பம் தபால் துறையின் தேவைப்பாட்டை செயல் இழக்கச் செய்துள்ளது.

அதே போல் கபீர் ஹாஷிமிற்கு ஓரளவு பலமான அமைச்சு வழங்கப்பட்டு  இருந்தாலும் அவரின் கீழ் உள்ள நிறுவனங்களில் அரச வங்கிகளும் காப்புறுதி  நிறுவனங்களும் அடங்குகின்றன. இவையும் முஸ்லிம் சமூகத்திற்கு சேவை செய்யும்படியான  நிறுவனங்களல்ல.அது மட்டமல்ல அவரின் செயற்பாடுகள் ஒரு சமூகத்தை சார்ந்ததாக  இருக்க சாத்தியமில்லை.
எமது தலைவர்கள் எமது சமூகத்திற்கு சேவை செய்யக்க் கூடியதான அமைச்சுக்களை  கேட்டனரா அல்லது தமக்க்கு கிடைத்ததை பெற்றுக் கொண்டு மௌனமாகி விட்டனரா என்ற சந்தேகம் எழுகின்றது.

ஏனெனில் மலையகத்த் தமிழ் உறுப்பினர்களும் அமைச்சர்  சுவாமிநாதன் அவர்களும் தமது சமூகத்தை இலக்காகக் கொண்ட அமைச்சுப் பொறுப்புக்களையே  பெற்று இருக்கின்ற போது எமது பிரதிநிதிகளுக்கு அவ்வாறு  கிடைக்காததன் மர்மம் தான் என்ன.  அமைச்சர் திகாம்பரம் மலையகப் பகுதியை  அடிப்படையாகக் கொண்ட அமைச்சையும் சுவாமிநாதன் அவர்கள் மீள்குடியேற்றத்தையும்  அடிப்படையாகக் கொண்டும் ராதாக்ரிஷ்ணன் அவர்கள் கல்வி ராஜாங்க அமைச்சையும்  பெற்று இருக்கும் பொது எமது முஸ்லிம் மக்கள் பிரதிநிதி ஒருவருக்காவது  முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு  சேவை செய்யக் கூடியதான பொறுப்புக்கள் கிடைக்கவில்லை என்பதே  எனது கருத்து.

அவ்வாறான ஒரு பொறுப்புக்காக போராடினார்களா என்பதுவும்  சந்தேகமே. ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு எந்த அமைச்சுக் கிடைத்தாலும் ஏற்கத்தான் வேண்டும் ஆனால் முஸ்லிம்  மக்களை பிரதிநிதித் துவம் செய்யும்   சிறுபான்மைக்  கட்சி உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்ட அமைச்சுப் பொறுப்புக்களை கேட்டுப் பெற வேண்டும்.அது தவறுமிடத்து வாக்காளர்  பெருமக்களும் இககட்சிகளின் பின்னால்  இருப்பதில் என்ன பயன் என்பதை சிந்திக்க தொடங்குவார்கள். ஒரு முறை மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் கூறியிருந்தார் ரணில்  பயணம் செய்யும் பஸ்ஸில் கூட நான் ஏற விரும்பவில்லை என்று.  பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

5 comments:

  1. Only good thing for muslims so far is no mahinda so no bbs. Other things ? sorry.

    ReplyDelete
  2. அமைச்சர்கள் இருந்து என்ன பயன். அனாதைகள் ஆனதுதான் கண்டபலன். -மர்ஹூம் அஷ்ரப். Hakeem don't know this matter.

    ReplyDelete
  3. Trying to convince who?how ? Can we believe politicians? Never know what is behind the scene

    ReplyDelete

Powered by Blogger.